"பெண்கள் பாதுகாப்பு: அடித்துச் சொல்கிறேன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது!"– முதல்...
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் காலமானார்: பா.சிதம்பரம் இரங்கல்
காரைக்குடி தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சுந்தரம் (1996-2001, 2006-2011) கடந்த சில மாதங்களாகவே உடல்நலமில்லாமல் இருந்தார். இந்த நிலையில், சுந்தரம் தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில், காரில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவரின் எக்ஸ் பதிவில், ``மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு N சுந்தரம் அவர்கள் சற்று நேரத்திற்கு முன் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
நான் கடந்த இரண்டு நாட்களாகத் தொகுதியில் இருந்தேன். இன்று காலை புறப்பட்டு பகல் 2 மணிக்கு டில்லி வந்தேன். இந்த துயரச் செய்தி 3 மணிக்குக் கிடைத்தது.
நம்முடைய கட்சித் தோழர்களை உடனடியாகச் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் சொல்ல வேண்டியுள்ளேன். திரு சுந்தரம் என்னுடைய 35 ஆண்டு காலத் தோழர். காங்கிரஸ் கட்சிப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். உடல் நலம் குன்றியதன் காரணமாகச் சில காலமாக ஓய்வில் இருந்தார். உடல் நலம் சீரடைந்து கட்சிப் பணிக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன். அவர் மறைவு அவருடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”










