செய்திகள் :

காங்கிரஸ் மூத்த தலைவர், சௌமியா அன்புமணியின் தந்தை! - ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி யார்?

post image

தமிழின வளர்ச்சி, தமிழ்நாடு மேம்பாடு, பொதுவாழ்வு சாதனை ஆகியவற்றில் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு அரசு 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் இந்த விருது சங்கரய்யா, நல்லகண்ணு, குமரி அனந்தன், வீரமணி, காதர் மொய்தீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தகைசால் தமிழர் விருதுடன் பாராட்டுச் சான்றிதழும் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம்.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

எம்.கிருஷ்ணசாமி
எம்.கிருஷ்ணசாமி

யார் இவர்?

திருவண்ணாமலை செய்யாறு வட்டத்தைச் சேர்ந்தவர் எம்.கிருஷ்ணசாமி.

இவர் ஆரம்பக் காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். அதன் பின், 2006-2008 என இரு ஆண்டுகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்திருக்கிறார்.

1991-ம் ஆண்டு வந்தவாசி மக்களவை தொகுதியில் இருந்தும், 2009-ம் ஆண்டு ஆரணி மக்களவை தொகுதியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ மற்றும் பாமக தலைவர் ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணியின் தந்தை இவர்.

மு.கிருஷ்ணசாமியின் மாமனார் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆவார். இவரது மகன் எம்.கே.விஷ்ணு கடலூர் தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

குடும்பமே காங்கிரஸ் என்றாலும், இவரது மகள் குடும்பம் முற்றிலும் வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள்.

அப்பா, கணவருடன் சௌமியா அன்புமணி
அப்பா, கணவருடன் சௌமியா அன்புமணி

இவரது பணிகள்:

> மக்களவையில் மதிப்பீட்டுக்குழு உறுப்பினராக... பெட்ரோலியம் மற்றும் தொழில்துறை நிலைக்கு உறுப்பினர்!

> ஊரக வளர்ச்சி, நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோகம், வேளாண் ஆகிய துறைகளின் நாடாளுமன்ற ஆலோசனைக்குடி உறுப்பினர்,

> அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு இந்திய அரசின் பிரதிநிதியாக கருத்துரை வழங்கியவர்

இப்படி பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில், சௌமியா அன்புமணி தனது அப்பா குறித்து பகிர்ந்துகொண்டதாவது...

‘அப்பா அரசியல்வாதி மட்டுமல்ல, பிஸியான வழக்கறிஞரும்கூட. அடிக்கடி டெல்லிக்குப் பறந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துவிட்டு வரக்கூடியவர். அவ்வளவு பரபரப்புக்கு மத்தியிலும் டெல்லியோ மும்பையோ எங்கிருந்தாலும் வீட்டுக்குப் போன் செய்து பிள்ளைகளை விசாரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

எவ்வளவு தாமதமாக வீட்டிற்கு வந்தாலும் என்னையும் தம்பியையும் ‘மை டியர் செல்லங்களா’ என்று கொஞ்சுவார். 

‘நாம நிறைய மொழி தெரிந்து வைத்துக்கொள்வது வேற மொழி பேசுற மக்களைப் பற்றிப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்... சமூகத்தைப் புரிந்துகொள்வதுதான் அரசியலைப் புரிந்துகொள்வதன் அடிப்படை!' என்பார் அப்பா.

இன்றும் சோனியா காந்தி மேடத்தை எப்போது நான் பார்த்தாலும், ‘அப்பா எப்படி இருக்கிறார்?' என நலம் விசாரிப்பார். என் கணவர் அமைச்சராக இருந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை மூன்றுமுறை சந்தித்திருக்கிறோம். அவரும் ஞாபகம் வைத்துக்கொண்டு அப்பாவை நலம் விசாரிப்பார். அப்பாவின் அருமை இன்னும் புரிய ஆரம்பித்த கணங்கள் அவை. " என்றார்.

முழுமையான பேட்டி - Click here

80வது சுதந்திர தினம்: தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பைப் பார்வையிட்ட விஜய் | Live Updates

அணிவகுப்பைப் பார்வையிடுகிறார் விஜய்கோட்டை கொத்தாளத்திற்கு வந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பைப் பார்வையிடுகிறார் விஜய். இந்நிகழ்வில் நடிகை திரிஷா, முதல்வர் வ... மேலும் பார்க்க

"1970-க்குப் பிறகு பிறந்த ஒரு முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றுகிறார்!" - மாணிக்கம் தாகூர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தாளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கொடியேற்றுவதை 'புதிய தலைமுறை அரசியல்' என்று பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்... மேலும் பார்க்க

‘ஹார்முஸ் அமெரிக்காவுக்கு சொந்தம்’ - ட்ரம்ப் அதிரடி; 'அது எப்போதும் முடியாது' - ஈரான் பதிலடி

தெரிந்தோ, தெரியாமலோ ஈரான் போரின் தொடக்கத்தில் இருந்தே ஹார்முஸ் நீர்ச்சந்தி அந்தப் போரின் மையமாக மாறிவிட்டது. அணு ஆயுத உற்பத்தியைத் தடுத்து நிறுத்த இந்தப் போர் என்று கூறிய அமெரிக்கா, இப்போது ஈரான் ஹார்... மேலும் பார்க்க

80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் பிரதமர் மோடி | Live

செங்கோட்டையில் பிரதமர் மோடி!இன்று காலை பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். மேலும் போர் நினைவிடம் சென்றும் மரியாதை செலுத்தினார். தற்போது அவர் செங்கோட்டைக்கு வந்திருக்கிற... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: `கடமைக்கு கடிதம்; ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம்..!' - தவெக அரசை சாடும் உதயநிதி

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தவெக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது ச... மேலும் பார்க்க