செய்திகள் :

மீனவர்கள் கைது: `கடமைக்கு கடிதம்; ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம்..!' - தவெக அரசை சாடும் உதயநிதி

post image

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தவெக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?

ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த #SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.

இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்".

"சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" - அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேற்று (ஆகஸ்ட் 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் வரியில் இருந்து தப்பிக்க ஒரு மோசடி வழியை பின்பற்றுவதாக கூறியிருந்தது.... மேலும் பார்க்க

"இவர்களை பார் கவுன்சிலில் சேர்க்க வேண்டாம்" - BCI உத்தரவு; CJI சூர்ய காந்த்தின் அதிரடி பதில்!

'கரப்பான்பூச்சி' - இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் சொன்ன இந்த வார்த்தைதான், டெல்லி ஜந்தர் மந்தர் முதல் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு அமைச்சரின் விலகல் வரை ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்றே சொல்லலாம்.... மேலும் பார்க்க

`தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கையா?'- ராகுல் பேச்சு; பாஜக கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையைக் விமர்சிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி Vs முதல்வர் அலுவலகம்! - சொத்துவரியில் பின்வாங்கிய முதல்வர் அலுவலகம்; பின்னணி என்ன?

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீரென மாற்றப்பட்ட சொத்துவரியால் லட்சக்கணக்கான சாமானிய நடுத்தர மக்கள் கொந்தளித்து போயிருந்தனர். அரசை நோக்கி கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.Mayor Pr... மேலும் பார்க்க

பாஜகவிலிருந்து தன்னுடன் வெளியேறியவர்களுக்கு முக்கியத்துவம்; வேகமெடுக்கும் அண்ணாமலை-ன் We The Leaders

அண்ணாமலை தொடங்கியுள்ள We The Leaders அமைப்பில் அடுத்தகட்டமாக மாநில மற்றும் மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளின் ஒர... மேலும் பார்க்க

`பாஜகவை நெருங்குகிறதா திமுக?' - நாடாளுமன்றத் தேர்தலில் எடுக்கப்போகும் முடிவு என்ன?

இந்திய அரசியலில் மாநிலக் கட்சியாக இருந்தாலும், தேசிய அளவிலான முடிவுகளைத் தீர்மானிப்பதில் திமுக எப்போதும் ஒரு முக்கிய காரணியாகவே திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராகக் கட... மேலும் பார்க்க