செய்திகள் :

``காதலித்தேன்... தோல்வியடைந்தேன்... மதுகுடித்தேன்..." - பர்சனல் பகிர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா!

post image

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா 'Romanchakam' என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். செப்டம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார்.

அந்த நிகழ்வில் பேசிய அவர், ``1989-ல் நான் பிறந்ததிலிருந்தே என் வாழ்க்கை சிலிர்ப்பூட்டும் வகையில் தான் அமைந்துள்ளது. பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ, 'பிளெண்டர்ஸ் பிரைடு' குடித்த காலமும் உண்டு, 'கிளென்ஃபிடிச்' குடித்த காலமும் உண்டு. ஆனால் இப்போது நான் மதுப்பழக்கத்தை முற்றிலும் விட்டுவிட்டேன். நான் காதலித்தேன், காதலில் தோல்வி அடைந்தேன். பின்னர் திருமணமும் செய்துகொண்டேன்.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

என்ன நடந்தாலும் என் வாழ்க்கை மிகவும் விறுவிறுப்பாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது." என்றார்.

அதைத் தொடர்ந்து இடுப்பு எலும்பு முறிவால் ஓய்வெடுத்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த விஜய், ``உங்கள் அண்ணி நலமாக இருக்கிறார். படப்பிடிப்பில் காயமடைந்த அவர், தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு குணமடைந்து வருகிறார்" என்றார்.

ரஷ்மிகா நடிப்பில் 'மைசா' திரைப்படமும், விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'ரவுடி ஜனார்த்தனா' திரைப்படமும் வெளியாகவுள்ளன. மேலும், இவ்விருவரும் இணைந்து நடித்த 'ரணபலி' திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

Varun Tej: "நீ வந்த பின்தான்... அன்பையே நான் கண்டிருக்கிறேன்!"- குழந்தை பற்றி வருண் - லாவண்யா தம்பதி

நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி தம்பதிக்குக் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குக் கடந்தாண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. Varun Tej - Lavanya Tripathi's Sonத... மேலும் பார்க்க

Allu Arjun: "சேலை அணிந்து நடிக்க வேண்டும் என பயமாக இருந்தது; ஆனால்..." - அல்லு அர்ஜுன்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி பேன்-இந்தியா ஹிட் அடித்திருந்தது ‘புஷ்பா 2' திரைப்படம். அப்படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுனின் மார்க்கெட் மற்ற சினிமாக்களிலும் அதிகரித்திருக்கிறது. புஷ்பா 2இத்தி... மேலும் பார்க்க

`நடிக்க வாய்ப்பளிப்பதாக பொய் வாக்குறுதி' - பாலியல் வன்கொடுமை புகாரில் இயக்குநர் பவன் சதினேனி கைது

திருமணம் செய்து கொள்வதாகவும், சினிமாவில் வாய்ப்பு தருவதாகவும் கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பவன் சதினேனியை கோல்கொண்டா காவல்துறையினர் கைது செய்த... மேலும் பார்க்க

Nepal Flood: "பயமாகவும், மனவேதனையாகவும் இருக்கிறது" - நடிகை ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உருக்கம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயின. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில்... மேலும் பார்க்க

"தெலுங்கு மக்கள் என்னை தமிழ் பொண்ணுன்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க, ஆனா..!"- ஸ்ரீ கௌரி ப்ரியா

'லவ்வர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கௌரி ப்ரியா. சமீபத்தில் தெலுங்கில் இவரது நடிப்பில் 'சென்னை லவ் ஸ்டோரி' படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஸ்ரீ கௌரி ப்ரியா 'Hi... மேலும் பார்க்க

Irumudi: "என் சினிமா போராட்டங்கள் 90-களில் சென்னைலதான் தொடங்கியது!" - சென்னையில் ரவி தேஜா

ரவி தேஜா நடித்திருக்கும் 'இருமுடி' படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த டோலிவுட் படத்தினை 'நின்னு கோரி', 'குஷி' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சிவா நிர்வானா இயக்கியிருக்கிறார். Irumudi -... மேலும் பார்க்க