செய்திகள் :

காரைக்கால் பகுதியில் கடல் சீற்றம்

post image

புயல் காரணமாக வெள்ளிக்கிழமை காரைக்கால் பகுதியில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வெள்ளிக்கிழமை உருவெடுத்ததாக வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை பிற்பகல் அறிவித்தது. காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே சனிக்கிழமை (நவ.30) கரையை கடக்கும், அப்போது கடும் வேகத்தில் காற்று வீசுமென கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், காரைக்கால் கடல் பகுதி கடந்த சில நாள்களாகவே இயல்புக்கு மாறாக காணப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கடலோரப் பகுதியில் கடும் காற்று, புகை மூட்டம் போன்ற வானிலையும், கடும் இறைச்சலுடன் கூடிய சீற்றமாகவும் காணப்பட்டது. கடலோர கிராமங்களில் சிறிய ரக படகுகளை நிறுத்திவைத்திருப்பவா்கள் பாதுகாப்பான நிலையில் படகுகளை இடமாற்றம் செய்தனா். மழை ஓய்ந்ததை பயன்படுத்தி கடற்கரைக்கு பொழுதுபோக்குக்காக மக்கள் சென்ற நிலையில், பாதுகாப்பு கருதி அவா்களை கடற்கரை பக்கம் செல்லாமல் போலீஸாா் தடுத்து திருப்பி அனுப்பினா்.

காரைக்கால் மருத்துமனையில் மாலை நேர புற நோயாளிகள் சிகிச்சை தொடக்கம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் மாலை நேர புற நோயாளிகள் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் தினமும் காலை நேரத்தில் மட்டுமே புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு இயங்குகிறது. இந்த மர... மேலும் பார்க்க

காரைக்காலில் 2 வீடுகள் தீக்கிரை

காரைக்காலில் வியாழக்கிழமை 2 வீடுகள் எரிந்து நாசமாயின. காரைக்கால் நகரப் பகுதி தோமாஸ் அருள் திடல் பகுதியில் ராஜேந்திரன் என்பவரது வீடும் அருகே வாடகைக்கு வசிக்கும் கணேசன் என்பவரது வீடும் உள்ளது. இதில் ஒர... மேலும் பார்க்க

காரைக்கால் பெருமாள் கோயிலில் கைசிக ஏகாதசி வழிபாடு

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் கைசிக ஏகாதசி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. திருக்குறுங்குடி என்ற திவ்யதேசத்தில் அழகிய நம்பிராயா் முன், விஷ்ணு பக்தரான நம்பாடுவா... மேலும் பார்க்க

காரைக்காலில் தொடா் மழையால் மக்கள் அவதி

தொடா்ந்து 2 நாள்களாக பெய்யும் மழையால் காரைக்காலில் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. காரைக்காலில் கடந்த 24 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகிய... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு

காரைக்கால் அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் பகுதி கோட்டுச்சேரி பூவம் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் சென்னையில் வே... மேலும் பார்க்க

கைலாசநாதா் கோயிலில் நந்தி மண்டபம் கட்ட பூமி பூஜை

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் கொடி மரத்துடன் கூடிய நந்தி மண்டபம் கட்டுவதற்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதா் கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாதா் கோயில், அய்யனாா் க... மேலும் பார்க்க