செய்திகள் :

Epstein Files: `மோடி ஆன் போர்டு' முதல் அனில் அம்பானியின் ஆலோசனை வரை; பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்?

post image

சாதாரண பள்ளி ஆசிரியராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீன், இன்று மேற்குலக நாடுகளை அதிர வைத்திருப்பதுதான் இப்போது 'ஹாட்' டாப்பிக்.

அமெரிக்க நிதி ஆலோசகரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், குழந்தை பாலியல் குற்ற வழக்கில் தண்டனை பெற்று, சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி. இவரோடு பழக்கம் கொண்டிருந்த உலகின் செல்வாக்குமிக்க மனிதர்கள், அவர் மறைவுக்குப் பின்னரும் அவரது வழக்கில் தொடர்புபடுத்திப் பேசப்பட்டு வருகின்றனர்.

'எப்ஸ்டீன் ஆவணக் கோப்பை வெளியே கொண்டுவருவேன்' என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்கி, பல பெரும் தலைகள் இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கின்றனர்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன்
ஜெஃப்ரி எப்ஸ்டீன்

இந்த நிலையில்தான், டிசம்பர் 19, 2025 அன்று, சுமார் 3,965 கோப்புகளுடன் (3 ஜிபி தரவு) ஆயிரக்கணக்கான பி.டி.எஃப் கோப்புகள், நடுவர் மன்றப் பதிவுகள் மற்றும் விமானப் பயணப் பதிவுகளை `தி எப்ஸ்டீன் லைப்ரரி’ என்ற பெயரில் இணையதளத்தில் வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை.

மீண்டும் டிசம்பர் 23 அன்று, சுமார் 30,000 பக்கங்கள் கொண்ட 11,000 கோப்புகளை வெளியிட்டது. அதில் இடம்பெற்ற விமானப் பயணப் பதிவுகள் மூலம், டிரம்ப், முன்பு அறியப்பட்டதைவிட அதிகமான முறை எப்ஸ்டீனின் தனிப்பட்ட ஜெட் விமானத்தில் பயணம் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சிக்கலில் அதிபர் ட்ரம்ப் மட்டுமில்லாமல், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் பராக், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், மைக்கேல் ஜாக்சன், பில் கேட்ஸ், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களும் புகைப்படங்களும் வெளியிடப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்றிருந்தன. இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்தும் சில முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன.

ட்ரம்ப்
ட்ரம்ப்
குறிப்பு: எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களை மட்டுமே செய்தியாக வெளியிடுகிறோம். இவர்கள் குற்றவாளிகள் என்ற முன்முடிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

மருத்துவரான தீபக் சோப்ரா, 1985-ல் மகரிஷி மகேஷ் யோகியைச் சந்தித்த பிறகு மருத்துவத் தொழிலைக் கைவிட்டு ஆன்மிகப் பாதைக்குத் திரும்பினார். புகழ்பெற்ற ஓப்ரா வின்ஃப்ரேயின் (Oprah Winfrey) நிகழ்ச்சியின் மூலம் உலகப் புகழ்பெற்றார்.

ஜெப்ரி எப்ஸ்டீன் 2008-ல் ஒரு பாலியல் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட பிறகும், தீபக் சோப்ரா அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். 2016 ஆகஸ்ட் மாதம் தீபக் சோப்ரா எழுதிய மின்னஞ்சலில், ``எனது உடல் ரீதியான தேவைகள் அவ்வப்போது பூர்த்தியாகின்றன. நான் இன்னும் மூன்று புத்தகங்கள் எழுத வேண்டியுள்ளது.

இந்த மாத இறுதியில் ஒரு வாரம் மௌன விரதம் இருக்கப் போகிறேன். எனக்கு அறிவுக்கூர்மையும் சுய விழிப்புணர்வும் கொண்ட இளம் பெண்களின் நட்பு பிடிக்கும். அவர்களை ஊக்குவிப்பதிலும், உற்சாகப்படுத்துவதிலும் எனக்கு விருப்பம் அதிகம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தீபக் சோப்ரா
தீபக் சோப்ரா

2016 நவம்பரில் நடந்த உரையாடலில், டொனால்ட் ட்ரம்ப் மீது ஒரு பெண் தொடர்ந்த பாலியல் புகாரைத் திரும்பப் பெற்ற செய்தியை எப்ஸ்டீனுக்கு தீபக் சோப்ரா அனுப்பியுள்ளார். கூடவே, ``உங்களுக்கு எதிரான சிவில் வழக்கும் திரும்பப் பெறப்பட்டுவிட்டதா?" என்று எப்ஸ்டீனிடம் கேட்டுள்ளார். அதற்கு எப்ஸ்டீன் 'ஆமாம்' என்று சொல்ல, சோப்ரா "நல்லது"என்று பதிலளித்துள்ளார். மேலும், டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் மனைவி மர்லா மேப்பிள்ஸ் குறித்து இவர்கள் விவாதித்துள்ளனர்.

தீபக் சோப்ராவின் விளக்கம்

இந்த விவகாரம் வெளியானதும் தன் மௌனம் கலைத்த தீபக் சோப்ரா தன் எக்ஸ் பக்கத்தில், ``பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைக் கண்டு நான் மிகுந்த மனவேதனை அடைகிறேன். சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் எந்தக் காலத்திலும் எப்ஸ்டீனின் குற்றச்செயல்களிலோ அல்லது தவறான நடத்தைகளிலோ பங்கேற்றது இல்லை. அவருடனான எனது தொடர்பு மிகவும் குறைவானது.

கடந்த கால மின்னஞ்சல்களில் நான் பயன்படுத்திய வார்த்தைகள் (Tone) தவறானவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதற்காக நான் வருந்துகிறேன். அன்று இருந்த சூழ்நிலைக்கும், இன்று வெளிவந்துள்ள உண்மைகளுக்கும் இடையே உள்ள பாரதூரமான வித்தியாசத்தை நான் உணர்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மீரா நாயர்
மீரா நாயர்

டிசம்பர் 21, 2009-ல் நடந்த Independent Filmmaker Project Spring Gala நிகழ்வின் விருந்தில் புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயரும் எப்ஸ்டீனும் ஒன்றாகக் கலந்து கொண்டுள்ளனர். அந்த விருந்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தொழிலதிபர் ஜீன் பிகோஸி ஆகியோரும் இருந்தனர்.

2017-ல் பெய்ஜிங்கில் நடைபெறவிருந்த எப்ஸ்டீன் தொடர்பான ஒரு நிகழ்வில் அனுராக் காஷ்யப் பங்கேற்க ஒப்புக்கொண்டதாக அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது. நடக்கவிருந்த ஒரு மாநாடு தொடர்பாக ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் கியூசெப் பெர்சானி, ஜினோ யூ, ஆர்னெல்லா கோராசா ஆகியோருக்கு இடையே நடந்த மின்னஞ்சல் உரையாடலில் அனுராக் காஷ்யப்பின் பெயர் இடம்பெற்றுள்ளது. அந்த மின்னஞ்சலில் அனுராக் காஷ்யப் "ஒரு புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர்" என எப்ஸ்டீன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப் பதில்

இது தொடர்பாக அனுராக் காஷ்யப் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``எனக்கு இதைப்பற்றி துளியும் தெரியாது. மாதம் சுமார் 15 இடங்களிலிருந்து எனக்குப் பேச்சாளராகப் பங்கேற்க அழைப்புகள் வரும். நான் அரிதாகவே அவற்றுக்குப் பதிலளிப்பேன். அதுமட்டுமல்ல, எனது வாழ்நாளில் நான் ஒருமுறைகூட பெய்ஜிங்கிற்குச் சென்றதே இல்லை.

யாரோ ஒருவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் அது, அதைப் பார்த்தாலே உண்மை என்னவென்று புரியும். எனது படங்களைவிட, எனது பெயரைப் பயன்படுத்தி வரும் பரபரப்புச் செய்திகள்தான் அதிக பிரபலமாக இருக்கின்றன" என்று அவர் கிண்டலாகத் தெரிவித்தார்.

நடிகையும் இயக்குநருமான நந்திதா தாஸின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ளது. இங்கிலாந்தின் ஏரிக்கரையில் Lake District Festival நிகழ்வுக்கு கும்ப்ரியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெம் பெண்டெல் என்பவரால் எப்ஸ்டீன் அழைக்கப்பட்டிருந்தார்.

அந்த நிகழ்வில் எழுத்தாளர் சார்லஸ் ஐசென்ஸ்டைன், பிஆர் குரு லின் ஃபிராங்க்ஸ் ஆகியோருடன் நந்திதா தாஸும் ஒரு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். இதன் மூலம் அவர்கள் இருவரும் ஒரே மேடையில் அல்லது ஒரே நிகழ்வில் பங்கேற்கும் சூழல் இருந்தது தெரிகிறது.

நந்திதா தாஸ்
நந்திதா தாஸ்

இந்தியப் பிரபலங்களிலேயே அனில் அம்பானியின் பெயர்தான் இந்தக் கோப்புகளில் அதிகமாக இடம்பெற்றுள்ளது. 2019 இந்தியத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு, அம்பானி மே 22 முதல் 24 வரை நியூயார்க்கில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இருவரும் நியூயார்க்கில் சந்திக்கத் திட்டமிட்டனர். ஸ்டீவ் பானன், கேத்தி ரூம்லர் அல்லது எஹுத் பராக் ஆகியோரைச் சந்திக்க விருப்பமா என்று எப்ஸ்டீன் கேட்க, அம்பானி பிறகு பேசுவதாகக் கூறியுள்ளார்.

அனில் அம்பானி கடும் நிதி நெருக்கடியில் இருந்தபோது, 720 மில்லியன் டாலர் கடன் வாங்க எப்ஸ்டீனிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு எப்ஸ்டீன், ''தனிப்பட்ட முறையில் அது சாத்தியமில்லை உங்கள் சொத்துகளை வேறு பெயரில் ஒரு டிரஸ்ட் அல்லது நிறுவனத்திற்கு அதாவது, சொத்துகளை 'ஷெல்' நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டு, உங்களைத் திவாலானவராக (Bankrupt), அறிவித்துக் கொள்ளுங்கள்" என்று குறுக்கு வழி சொல்லிக் கொடுத்துள்ளார்.

எப்ஸ்டீன், அம்பானியை "மோடியின் ஆதரவாளர்" என அந்த மெயிலில் குறிப்பிட்டுள்ளார். 2019-ல் பா.ஜ.க வெற்றி பெற்றபோது, மோடி அமெரிக்காவின் பிரபல அரசியல் உத்தியாளர் மற்றும் ஊடகவியலாளர் ஸ்டீவ் பானனைச் சந்திக்க வேண்டும் என்று எப்ஸ்டீன் பரிந்துரைக்க, அம்பானி அதற்குச் சம்மதித்துள்ளார்.

எப்ஸ்டீன், ஸ்டீவ் பானனிடம், "மோடி சம்மதித்துவிட்டார் (Modi on board)" என்று கூறியுள்ளார். இதுதவிர அமெரிக்க அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட எப்ஸ்டீனின் உதவியை அம்பானி கேட்டிருக்கிறார்.

அனில் அம்பானி - மோடி
அனில் அம்பானி - மோடி

இந்தியப் பிரபலங்களின் பெயர்கள் இதில் அடிபடுவது ஒரு சிறிய பகுதி மட்டுமே. உண்மையான அதிர்ச்சி என்னவென்றால், உலகளாவிய அரசியலில் 'தொட்டாலே கை சுடும்' உயரத்தில் இருந்த பல முக்கியப் புள்ளிகள் இந்த வளையத்திற்குள் சிக்கியிருப்பதுதான்.

அமெரிக்க நீதித்துறை படங்கள், வீடியோக்கள் உட்பட மொத்தம் 6 மில்லியன் ஆவணங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கின்றன. இதன் மூலம் எப்ஸ்டீனின் விரிவான நெட்வொர்க், அவரின் செல்வாக்கு எந்தளவு இருந்திருக்கிறது என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறது.

பிரபலங்களுடன் போட்டோ; ஃபோர்ஜெரி பணத்தில் எம்.எல்.ஏ ஆக பிளான் - புதுச்சேரி தொடர் குற்றவாளி கைது!

`நம்மவரின் செல்லக்குட்டி...’புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதால் சில லட்சங்களை செலவு செய்து இலவசங்கள் கொடுத்தால் போதும், அங்கு ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றுவிட முடியும். கடந்த இருப... மேலும் பார்க்க

Vijay: `அபராதம் விதித்ததில் எந்த தவறும் இல்லை'- விஜய் மனுவைத் தள்ளுபடி செய்த கோர்ட் - முழு விவரம்!

வருமானத்தை மறைத்ததாகக் கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வருமானம் மறைப்புநடிகர் வி... மேலும் பார்க்க

அதிமுக: "அப்படி இருந்தா சொல்லுங்க அரசியலை விட்டு போய்விடுகிறேன்" - ஜெயக்குமார் எமோஷனல்

சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் நேற்று (பிப்.6) பொதுக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது.இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "2001-ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற... மேலும் பார்க்க

Vijay: 'புலி' பட வருமானத்தை மறைத்த வழக்கு; விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை 2015-ம் ஆண்டு சோதனை நடத்தியது. அப்போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் மதிப்பீட்டு ஆய்வு மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகளால்... மேலும் பார்க்க

விடாப்பிடி திருநாவுக்கரசர்; பெண் வேட்பாளரை விரும்பும் அதிமுக; அறந்தாங்கி தொகுதி 'சீட் பிடி' களேபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது அறந்தாங்கி தொகுதி. வங்காள விரிகுடா கடற்கரையையொட்டியுள்ள இந்தத் தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார்.... மேலும் பார்க்க

Vijay: `அவர்கள் அப்படித்தான்' - தவெக விழா குறித்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொன்ன திருமா

பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆற்றிய உரை தமிழ்நாட்டின் பரபரப்பாகப் பேசப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், பா.ஜ.க-வையும் அதில் கடுமையாக விமர்சித்திருந்தார்.இந்த ந... மேலும் பார்க்க