செய்திகள் :

Vijay: 'புலி' பட வருமானத்தை மறைத்த வழக்கு; விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

post image

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை 2015-ம் ஆண்டு சோதனை நடத்தியது. அப்போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் மதிப்பீட்டு ஆய்வு மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகளால் நடிகர் விஜய், 'புலி' படத்துக்காக வாங்கிய சம்பளம் ரூ.15 கோடியை மறைத்து கணக்கு காண்பித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வருமானத்தை மறைத்த நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. வருமானவரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து நடிகர் விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விஜய்
விஜய்

அதில்,``வரி அபராதத்தை 2019-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். கால தாமதமாக, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது சட்டப்படி தவறு" என வாதிட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதில், ``வருமான வரித்துறை அபராதம் விதித்ததில் எந்த விதிமீறலும் இல்லை. எனவே, வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதிமுக: "அப்படி இருந்தா சொல்லுங்க அரசியலை விட்டு போய்விடுகிறேன்" - ஜெயக்குமார் எமோஷனல்

சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் நேற்று (பிப்.6) பொதுக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது.இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "2001-ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற... மேலும் பார்க்க

Epstein Files: `மோடி ஆன் போர்டு' முதல் அனில் அம்பானியின் ஆலோசனை வரை; பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்?

சாதாரண பள்ளி ஆசிரியராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீன், இன்று மேற்குலக நாடுகளை அதிர வைத்திருப்பதுதான் இப்போது 'ஹாட்' டாப்பிக்.அமெரிக்க நிதி ஆலோசகரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், குழந்தை பாலியல் குற்... மேலும் பார்க்க

விடாப்பிடி திருநாவுக்கரசர்; பெண் வேட்பாளரை விரும்பும் அதிமுக; அறந்தாங்கி தொகுதி 'சீட் பிடி' களேபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது அறந்தாங்கி தொகுதி. வங்காள விரிகுடா கடற்கரையையொட்டியுள்ள இந்தத் தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார்.... மேலும் பார்க்க

Vijay: `அவர்கள் அப்படித்தான்' - தவெக விழா குறித்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொன்ன திருமா

பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆற்றிய உரை தமிழ்நாட்டின் பரபரப்பாகப் பேசப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், பா.ஜ.க-வையும் அதில் கடுமையாக விமர்சித்திருந்தார்.இந்த ந... மேலும் பார்க்க