செய்திகள் :

கார்க்கேவுக்கு எதிரான சாதிய அவமதிப்பு; கண்டித்த ராகுல் மீது வழக்கு; பாஜகவைச் சாடும் செல்வப்பெருந்தகை

post image

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு இழைக்கப்பட்ட சாதிய அவமதிப்புக்கு எதிராக குரல் கொடுத்த ராகுல் காந்தி மீது பாஜக அரசு வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

இதனைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

"காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள், காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் தீண்டாமை மற்றும் அவமதிப்பு குறித்து குரல் எழுப்பியதற்காக அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்பதே குற்றம் என்ற நிலையை பாஜக அரசு உருவாக்க முயல்வது, அதன் எதேச்சதிகாரப் போக்கையும், பழிவாங்கும் அரசியலையும் வெளிப்படுத்துகிறது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் தீண்டாமையைத் தெளிவாக ஒழித்திருக்கிறது.

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி | காங்கிரஸ்
மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி | காங்கிரஸ்

சாதியின் பெயரால் ஒரு மனிதர் அவமதிக்கப்படுவதையோ, பாகுபாடு காட்டப்படுவதையோ இந்திய அரசியலமைப்பு ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய சமத்துவம், சமூகநீதி, மனித கண்ணியம் ஆகிய கொள்கைகளே இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.

அத்தகைய சமூகநீதிக் கொள்கைகளுக்காகப் போராடிய வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. தீண்டாமையை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஒழித்ததும், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க SC/ST (Prevention of Atrocities) Act போன்ற சட்டப் பாதுகாப்புகளை உருவாக்கியதும் சமூகநீதிக்கான காங்கிரஸ் கட்சியின் உறுதியான பங்களிப்புகளாகும்.

ஆனால், இன்று தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாட்டுக்கு எதிராக ஒருவர் குரல் எழுப்பும்போது, அந்தக் குரலை ஒடுக்க FIR-ஐ ஆயுதமாகப் பயன்படுத்துவது எந்த வகையான ஜனநாயகம்? பாதிக்கப்பட்டவருக்காகக் குரல் கொடுப்பவரையே குற்றவாளியாக்குவது என்பது நீதியின் அடிப்படைக் கொள்கைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது.

பாஜக அரசு தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தவும், அவர்களின் குரலை ஒடுக்கவும் முயல்வதை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

திரு. ராகுல்காந்தி அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பதிலளிக்க வேண்டிய பாஜக, FIR மற்றும் அதிகார அமைப்புகளைப் பயன்படுத்தி அவரை மிரட்ட முயல்வது கண்டிக்கத்தக்கது. தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது குற்றமல்ல; தீண்டாமையைப் பாதுகாப்பதே குற்றம்.

சாதிய பாகுபாடு மற்றும் சமூக அநீதிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கும், திரு. ராகுல்காந்தி அவர்களுக்கும் எதிராக எடுக்கப்படும் எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கைக்கும் காங்கிரஸ் கட்சி அஞ்சாது" என்று பதிவிட்டிருக்கிறார்.

`தாய் வழியில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்!’ – அதிரடி காட்டிய நீதிமன்றம்; அசராத புதுச்சேரி அரசு

புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு வெளிமாநில ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கு, சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது. அதேசமயம் தந்தையின் இருப்பிடத்தைத் அடிப்... மேலும் பார்க்க

Nepal Floods: தமிழர்களை மீட்க காட்மண்டுவில் தமிழக அதிகாரிகள்! - அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கிட்டதட்ட 900 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 2400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த வெள்ளப... மேலும் பார்க்க

'அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்'- எதிர்க்கட்சி வரிசையில் தாரகை; மாணிக்கம் தாகூர் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரான தாரகை கத்பர்ட், ஆளுங்கட்சி வரிசையிலிருந்து திடீரென எதிர்க்கட்சிகளுக்கான முதலாவது வரிசைக்... மேலும் பார்க்க

Nepal Flood : '84 தமிழர்களை காணவில்லை' - நேபாள வெள்ளம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே நேபாள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்கள் பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார். ஆதவ் அர்ஜுனா ஆதவ் அர்ஜூனா பேசியதா... மேலும் பார்க்க

'பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு' - தவெக-க்கு காங்கிரஸ் மீண்டும் பதிலடி

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பிரதம வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் த.வெ.க இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார்... மேலும் பார்க்க

`பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்' அமைக்க வேண்டும்' - ஜக்கி வாசுதேவ்

நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்கி வாசுதேவ், “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ ... மேலும் பார்க்க