செய்திகள் :

கார்மேனி செல்வம் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தனின் கதை - படமாக கவனம் பெறுகிறதா?

post image

நேர்மையான எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் செல்வம் (சமுத்திரக்கனி). அவரின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் இரு நிகழ்வுகள் அவர் மனதுக்குப் பிடிக்காத ஒரு முடிவினை எடுக்கவைக்கிறது.

அந்த முடிவின் தொடர்ச்சியாக, ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசையும் வருகிறது. அதற்காக அவர் எடுக்கிற முயற்சிகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைத் தனது 'கார்மேனி செல்வம்' படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம் சக்ரி.

Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம்
Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம்

அன்பான அப்பா, நேர்மையான கார் டிரைவர், அப்பாவியான கணவன் என செல்வமாக சமுத்திரக்கனி. 'சமுத்திரகனியிஸம்' நிறைந்த கதைதான் என்றாலும் கருத்து ஊசிகள் இல்லாமல், முக்கிய காட்சிகளில் தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

செல்வத்தின் மனைவி சாந்தியாக லட்சுமி பிரியா சந்திரமௌலி, விளிம்பு நிலை குடும்பத் தலைவியாக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

உறவினர்களுக்கு மத்தியில் அவமானப்படும்போது கிளம்புகிற வைராக்கியம், தன் கணவனிடம் பொருளாதார நிலைகுறித்து புரியவைக்கப் பொருமுதல், அதே கணவன் சிக்கலில் மாட்டிக்கொள்கிற பொழுதில் ஏற்படுகிற பரிதாபம் எனப் பொருத்தமாக நடித்திருப்பது கதைக்கு அழுத்தம் கூட்டுகிறது.

இவர்கள் தவிர கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் கார்த்திக்குமாரும், படவா கோபியும் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம்
Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம்

சென்னை, துபாய் எனக் குறைவான லொகேசன்களில் நடக்கிற எளிமையான கதைக்கேற்ற ஒளிப்பதிவையும், எடிட்டிங்கையும் வழங்கியிருக்கிறது ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன் மற்றும் படத்தொகுப்பாளர்கள் ஜெகன் ஆர்.வி - தினேஷ்.எஸ் அடங்கிய தொழில்நுட்பக் குழு.

பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்காத நிலையில், பின்னணி இசையில் சில காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறது மியூசிக் கிளவுட் ஸ்டுடியோ & டெக்னாலஜி குழு.

நேர்மையான டிரைவராக வாழும் சமுத்திரக்கனியின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் தொடங்கும் கதை, தடுமாற்றம், ஏமாற்றம், வெளிநாட்டு வேலை எனப் பல தளங்களில் பயணிக்கிறது.

ஆனால், படம் சொல்ல வருகிற கருத்து தெளிவானதாக இல்லாமல் ஏகத்துக்கும் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. டாக்சியில் ஏறி பணம் தராமல் ஓடிவிடுபவர்களாகச் சித்திரிக்கப்படும் இளைஞர்கள் குறித்த அந்த எபிசோடு, லைப் இன்சூரன்ஸ் குறித்த அச்ச உணர்வு, தன் வாழ்நிலையை முன்னேற்றிக் கொள்ள நடுத்தர குடும்பத்தினரின் வழிகளில் ஒன்றாக இருக்கும் கிரெடிட் கார்டு குறித்த கேலி எனப் பல விஷயங்களைச் சுவாரஸ்யத்தைத் தாண்டி இன்னும் கொஞ்சமேனும் கவனத்துடனும் முதிர்ச்சியுடனும் அணுகியிருக்கலாம்.

Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம்
Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம்

படத்தின் முடிவு எதைநோக்கி செல்கிறது என்பது தெரிந்தபிறகும் நீள்கிற காட்சிகள் கொஞ்சம் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இரண்டரை மணிநேரம் இந்தக் கதைக்கு டூ மச் பாஸ்!

எளிய கார் டிரைவர் ஒருவரின் வாழ்க்கையைப் படமாக்கிய விதம் நன்றாக இருந்தாலும், வாழ்வில் முன்னேற விரும்புகிற மிடில் கிளாஸ் குடும்பங்களின் முன் இருக்கிற வாய்ப்புகளைக் காட்டிய விதமும், அதை அந்த கதாபாத்திரங்கள் அணுகிய விதமும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

பாத்திரத் தேர்வு, நடிப்பு என டாப் கியரில் கிளம்பும் 'கார்மேனி செல்வத்தை' திரைக்கதையில் தடுமாறாமல் பார்த்துக்கொண்டு, கதையின் ஆழத்திலும் தெளிவாகப் பயணிக்க வைத்திருந்தால் நாமும் சக பயணியாக நெகிழ்ந்திருக்கலாம்.

ஜனநாயகன்: 'விஜய் சாரை கடைசி முறையாக திருவிழா போல் கொண்டாட வேண்டாமா?'- பூஜா ஹெக்டே ஆதங்கம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. ஆனால், சென்சா... மேலும் பார்க்க

Jana Nayagan: "இது மன்னிக்க முடியாதது" - 'ஜனநாயகன்' படக்காட்சிகள் கசிந்ததற்கு சூர்யா கண்டனம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. ஜனநாயகன் திரைப்படம்நேற்று இரவு, 'ஜனநாய... மேலும் பார்க்க

சல்மான் கான், யாஷ், மோகன்லால், மம்மூட்டி, நிவின்பாலி.! மாஸ் ஹீரோக்களுடன் அசத்தும் நயன்தாரா லைன்அப்

இந்திய சினிமாவில் 23வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த 2003ல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் 'மனசினக்கரே' மூலம் அறிமுகமானவர் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஹீரோயினாக பட்டொளிவீசி பறக்கிற... மேலும் பார்க்க

What To Watch: 'LIK', 'தாய் கிழவி', 'TN 2026' - இந்த வார ரிலீஸ்கள் இவைதான்

LIK: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி:நயன்தாரா மற்றும் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியிருக்கும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, கௌர... மேலும் பார்க்க

LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! - லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா?

2040-ல் பசுமை உலகத்தில் வைப் வாசேவும் (பிரதீப் ரங்கநாதன்) அவருடைய தந்தை அன்புகடலும் (சீமான்) வசித்து வருகிறார்கள். அலைப்பேசிக்கு அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தை அதிலிருந்து மீட்பதே இந்த பசுமை உலகத்தின் ... மேலும் பார்க்க