செய்திகள் :

`மாநில காங்கிரஸ் தலைவருக்கு அக்கறையும், தெளிவும் இல்லையென்பது...' - வேட்பாளர் பட்டியல் பற்றி ஜோதிமணி

post image

நீண்ட இழுபறிக்குப் பிறகு, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. வேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் பற்றி உள்கட்சியினரும், மாற்று கட்சியினரும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை முன் வைத்து வருகிறார்கள்.

Congress
Congress

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தகுதியும், மக்கள் செல்வாக்கும் , வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது என அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கபட்டுள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மனக்குமுறலையும், கொந்தளிப்பையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

வேட்பாளர்கள் முன்பே முடிவுசெய்யப்பட்டு,அதற்கேற்ப தொகுதிகள் கேட்டு வாங்கப்பட்டுள்ளன. நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிற , தகுதியும்,மக்கள் செல்வாக்கும் , வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இருபது ஆண்டுகள்,முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பலர் இருக்கும்போது அந்த இடத்தில் கட்சிக்கு வந்து சில நாட்கள், சில வருடங்களே ஆன ,கள அனுபவம் இல்லாத சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கொங்கு நாட்டில் செல்வாக்கு மிகுந்த ,38 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பானமை சமூகமாக உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் அருந்ததியர் சமூகங்களுக்கு முழுக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் வரலாற்றில் இதற்குமுன்பு நிகழ்ந்திராத ஒன்று. கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் உட்பிரிவுகளுக்கு இரண்டு தொகுதிகளை வழங்கியுள்ள காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மையான கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைப் புறக்கணித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதே போல 28 தொகுதிகளில் ஆறு தனித்தொகுதிகளைக் கேட்டுப்பெற்ற காங்கிரஸ் கட்சி ,மிகவும் பின் தங்கிய ,விளிம்புநிலை சமூகமான அருந்ததியர் சமூகத்திற்கு வாய்ப்பை மறுத்திருக்கிறது. இரண்டு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது காங்கிரஸ் கட்சியின் சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்காகப் போராடும் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் எதிரானது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றியோ,தமிழ்நாடு எதிர் நோக்கியுள்ள கடுமையான அரசியல் சூழலைப் பற்றியோ , உண்மையான கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பற்றியோ எவ்வித கவலையும் ,அக்கறையும் இல்லை என்பது தெளிவு. இவர்களின் பட்டியலை ஏற்க மறுக்கின்ற உரிமை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் உண்டு. அதுதான் காங்கிரஸ் கட்சியின் வலிமையான ஜனநாயகத் தன்மை.

jothimani
jothimani

இந்த பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனால் நாங்கள் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, அவர்கள் எண்ணங்களைப் பிரதிபலித்தோம் . அவர்களைக் கைவிட்டுவிடவில்லை என்கிற திருப்தி மட்டுமே எஞ்சியுள்ளது. முப்பது ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியுள்ளேன். எவ்வளவோ கடினமான காலங்களை,சவால்களை கட்சி எதிர்கொண்டபோதெல்லாம் உணர்வுப் பூர்வமான ஒட்டுதலோடு பணியாற்றியிருக்கிறேன். போராடியிருக்கிறேன். முதன்முதலாக மிகவும் அந்நியமாக உணர்கிறேன்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

கோவை: `இப்போது வந்தவர்களுக்கெல்லாம் எம்.எல்.ஏ சீட்!'- ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய காங்கிரஸார்

கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான காமராஜ் பவன் முன்பு சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்... மேலும் பார்க்க

'பெரம்பூரில் 52 வயது; திருச்சி கிழக்கில் 51 வயது!' - வேட்புமனுவில் குழப்பிய விஜய்?

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளிலும் தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுக்களில் வெவ்வேறு வயதை விஜய் குறிப்பிட்டிருப்பது இப்போத... மேலும் பார்க்க

கேரள சி.எஸ்.ஐ நிர்வாகி விளவங்கோடு வேட்பாளராக அறிவிப்பு - பின்னணியில் கே.சி.வேணுகோபால்?

கன்னியாகுமரி மாவட்டதில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள விளவங்கோடு தொகுதியில் கடந்த மூன்று பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் விஜயதரணி வெற்றிபெற்றார். விஜயதரணி பா.ஜ.க-வில் இணைந்ததுடன் தனது எம்.எல... மேலும் பார்க்க

எல்.முருகனுக்கு அவிநாசி தொகுதி; 'வாய்ப்பு கேட்டேன்தான்; யாரும் வந்து பார்க்கவில்லை'- தனபால் குமுறல்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தொகுதி தனி தொகுதி ஆகும். அந்தத் தொகுதியில் 2016, 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பாக தனபால் களமிறங்கினார். களமிறங்கியது மட்டுமல்லாமல்... அந்தத் தொகு... மேலும் பார்க்க

வெளியான லிஸ்ட்; கரைசேருமா `கமலாலய' கப்பல்? - மோடி சந்திப்பும் அரண்டுகிடக்கும் தமிழக பா.ஜ.க!

இதோ, அதோ என இழுத்துக் கொண்டிருந்த தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் ஒருவழியாக வெளியாகியிருக்கிறது. நாம் ஏற்கெனவே கூறியிருந்தபடி, இந்தத் தேர்தலில் போட்டியிட அண்ணாமலை விரும்பாததால், அவருக்கு வாய்ப்பு வ... மேலும் பார்க்க

'எளிதாக' ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிடுவோம் - ட்ரம்ப் லேட்டஸ்ட் பதிவு

ஈரான் போரின் எதிரொலியை விட, ஹார்முஸ் ஜலசந்தி மூடல் தான் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது.இந்த ஜலசந்தி மூலம் தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு வர்த்தகம் நடந்து வருகிறது. அது மூடப்பட்டிருப்பதால், கச்சா ... மேலும் பார்க்க