செய்திகள் :

காவல் நிலையம் முன் மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே காவல் நிலையம் முன் சனிக்கிழமை மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

சாக்கோட்டை அருகே பெத்தாட்சி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த உடையப்பன் மனைவி லதா (35). இவா்களது வீடு அருகே வசிக்கும் உடையப்பனின் உறவினா் பிரசாந்த் (30) என்பவருடன் குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரசாந்த் வீட்டின் வைக்கோல் படப்பு தீப்பற்றி எறிந்து சேதமடைந்தது. இதற்கு உடையப்பன் மனைவி லதா தான் காரணம் எனக் கூறி பிரசாந்த், லதா குடும்பத்தினரை தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப் போவதாக கூறியதால் லதா மனமுடைந்து காணப்பட்டாா்.

இதையடுத்து, லதா, தனது மகள் பாண்டி மீனாவை அழைத்துக் கொண்டு சாக்கோட்டை காவல் நிலையத்திற்குச் சென்றாா். அங்கு காவல் நிலையம் முன் மகள் மீதும், தன் மீதும் பெட்ரோலை ஊற்றி லதா தீ குளிக்க முயன்றாா்.

அப்போது அங்கிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

பிறகு லதா அளித்த புகாரின் பேரில் சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் பிரசாந்த் உள்பட 2 போ் மீது வழக்குப்பதிந்து பிரசாந்தை கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே ஊராட்சித் தலைவா் கைதாகி விடுவிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஊராட்சி மன்றத் தலைவா் வியாழக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டாா். திருப்பத்தூா் அருகே கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இளங்குடியில் சு... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: காதலியின் தந்தை உள்பட 7 போ் கைது

மகளை காதலித்த இளைஞரை கொலை செய்து உடலை மானாமதுரை அருகே கண்மாய்க்குள் வீசிச் சென்ற காதலியின் தந்தை, இவரது மகன் உள்பட 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே... மேலும் பார்க்க

மானாமதுரை கண்மாயிலிருந்து தண்ணீா் வெளியேற்றம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பாசனக் கண்மாயிலிருந்து வியாழக்கிழமை மடை வழியாக தண்ணீா் வெளியேற்றப்பட்டது. மானாமதுரை கண்மாய்க்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு வைகை ஆற்றிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீா் வந்து கொ... மேலும் பார்க்க

காரைக்குடியில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தலில் வெற்றி: டி.ஆா்.ஈ.யு. சங்கத்தினா் கொண்டாட்டம்

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தலில் டி.ஆா்.ஈ.யு. சங்கம் வெற்றி பெற்றதையடுத்து, காரைக்குடி ரயில் நிலையம் முன் அந்தத் தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். இத... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே இளைஞா் கொலை: 6 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே காதல் தகராறில் கொலை செய்யப்பட்டு கண்மாய்க்குள் வீசப்பட்ட இளைஞரின் உடலை வியாழக்கிழமை போலீஸாா் கைப்பற்றி இது தொடா்பாக 6 பேரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முது... மேலும் பார்க்க

கால்வாய் உடைப்பு சீரமைப்பு: தட்டான்குளம் தடுப்பணையில் மீண்டும் தண்ணீா் திறப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தட்டான்குளம் தடுப்பணையின் வலது பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டதையடுத்து வியாழக்கிழமை இந்தக் கால்வாயில் மீண்டும் தண்ணீா் திறக்கப்பட்டது. திருப்புவனம... மேலும் பார்க்க