`சிவனைப் தரிசிக்க வேண்டும்" - ஆண்டு கணக்கில் நின்றுகொண்டே இருக்கும் சாமியார் | V...
கிருஷ்ணகிரியில் அதி நவீன ரேடார் தொழிற்சாலை; விரைவில் உற்பத்தியை தொடங்கும் இஸ்ரேல் நிறுவனம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேடார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளதன் மூலம், இந்தியாவுக்கு மட்டுமன்றி உலக நாடுகளின் பாதுகாப்புக்கான ரேடார்களை இஸ்ரேல் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது.

இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான 'இஸ்ரேல் ஏரோஸ் பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' என்ற நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் ரேடார் உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்த மாதம் நடத்திய நிலையில், அடுத்த ஆண்டு ஆலை முழுமையாகச் செயல்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.ஏ.ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் டி.சி.எக்ஸ், ஈ.எல்.டி.ஏ, நிறுவனங்களுடன் இஸ்ரேலின் ஐ.ஏ.ஐ நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்தக் கூட்டு நிறுவனத்தில் ரூ.850 கோடி முதலீடு செய்யப்படும். இதன் மூலம் 165 பேர் நேரடியாக வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். 2027-ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பின் இந்த ஆலையில் ரேடார் உற்பத்தி தொடங்கப்படும்.
இந்த ஆலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்பு தேவைகளுக்கான ரேடார் அமைப்புகள் உற்பத்தி செய்யப்படும். இந்தியாவின் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி திறனையும் வலுப்படுத்தும். குறிப்பாக மேம்படுத்தபட்ட ரேடார் அமைப்புகள், விமான ரேடார்கள், தரைவழி ரேடார்கள், கண்காணிப்பு, அச்சுறுத்தல் கண்டறிதல் அமைப்புகளின் உற்பத்தியுடன் சோதனை அமைப்புகளும் இந்நிறுவனத்தில் உருவாக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் airடெல்லி ஐ.ஐ.டி-யுடன் சேர்ந்து ஆராய்ச்சியையும் மேற்கொண்டுள்ளதுடன், ஹைதராபாத்தில் ரேடார் அமைப்புகளுக்கான சேவை மற்றும் பராமரிப்பு மையத்தை
















