செய்திகள் :

இனி இலவசம் இல்லையா? மாசம் ₹99! வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமுக்கு வரும் 'Plus' சந்தா - META திட்டமென்ன?

post image

மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் (வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றின் தாய் நிறுவனம்) சமீபத்தில் தனது முக்கிய செயலிகளுக்கு உலகளவில் சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வணிகங்கள், கிரியேட்டர்கள் மற்றும் மெட்டா AI பயனர்களுக்காகவும் புதிய சந்தாக்கள் சோதிக்கப்பட்டு வருகின்றன. ஸ்டாண்டர்டு இன்ஸ்டாகிராம் ப்ளஸ் மற்றும் ஃபேஸ்புக் ப்ளஸ் சந்தாக்களுக்கு மாதம் ₹99 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வாட்ஸ்அப் ப்ளஸ் சந்தாவுக்கும் மாதம் ₹99 தான். ஆனால், தற்போது இந்தியாவில் அறிமுக சலுகையாக முதல் ஆறு மாதங்களுக்கு 50% தள்ளுபடியில் கிடைக்கிறது.

மெட்டா
மெட்டா

சரி, இத்தனை நாள் இலவசமாக சேவைகளை வழங்கிவந்த மெட்டா, திடீரென ஏன் கட்டண சந்தாக்களை நோக்கி நகர்கிறது? இதன் பின்னணியில் இருப்பது, மெட்டாவின் மிகப்பெரிய AI கனவுதான் என்கிறார்கள் தொழில்நுட்ப ஆய்வாளர்கள்.

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பின்தங்கியிருப்பதாகக் கருதப்படும் மெட்டா, மற்ற நிறுவனங்களுடன் போட்டிபோட, பெரும் தொகையை இதில் முதலீடு செய்துவருகிறது. இந்த விண்ணை முட்டும் AI செலவுகளைச் சமாளிக்கவே, இந்த புதிய வருமான வழியை மெட்டா அவசரமாகத் தேடுகிறது. சமீபத்தில், ஸ்கேல் AI நிறுவனர் அலெக்சாண்டர் வாங்கை, தனது சூப்பர் இன்டலிஜென்ஸ் ஆய்வகத்திற்குத் தலைமை தாங்க, சுமார் 14.3 பில்லியன் டாலர் கொடுத்து மெட்டா வாங்கியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. 2026-ம் ஆண்டுக்கான மூலதனச் செலவினத்தை 125 பில்லியன் முதல் 145 பில்லியன் டாலர் வரை மெட்டா உயர்த்தியுள்ளது. இது பெரும்பாலும் AI கம்ப்யூட் உள்கட்டமைப்பு, டேட்டா சென்டர்கள் மற்றும் இதர கூறுகளுக்காகச் செலவிடப்பட உள்ளது.

மெட்டாவின் AI திட்டங்கள் அமெரிக்காவைத் தாண்டி இந்தியாவிலும் விரிவடைந்துள்ளது. குஜராத்தின் ஜாம்நகரில் AI டேட்டா சென்டர் ஒன்றை அமைக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் மெட்டா கைகோர்த்துள்ளது. இது கடந்த ஆண்டு இரு நிறுவனங்களுக்கும் இடையே உருவான பல பில்லியன் டாலர் கூட்டாண்மையின் விரிவாக்கமாகும்.

இதுகுறித்து டெக்ஆர்க் (Techarc) நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் ஃபைசல் கவூசா , "மெட்டா AI உள்கட்டமைப்பில் 125 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீட்டை நியாயப்படுத்த, கணிக்கக்கூடிய மற்றும் நிலையான வருமான ஆதாரம் தேவை. விளம்பர வருமானம் மட்டும் இனி போதாது. ஆனால், மைக்ரோசாஃப்ட் அல்லது கூகுள் போல கார்ப்பரேட் நிறுவனங்களின் நம்பிக்கையை மெட்டாவால் பெற முடியவில்லை. அதனால், தனிநபர் பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படலாம். பணம் செலுத்துவதற்கு மிக வலுவான, ஈர்க்கக்கூடிய காரணங்கள் இருக்க வேண்டும்," என்றார்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

ஒரு பக்கம் AI-க்கு இவ்வளவு செலவு செய்தாலும், நிறுவனத்திற்குள்ளும் சில சவால்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பணியாளர் கலாச்சாரத்தில் உரசல், டேட்டா பற்றாக்குறையால் பொறியாளர்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவது, மற்றும் புதிய திறமையாளர்களுக்கு (வாங் போன்றோர்) வழங்கப்படும் அதிக சம்பளம் ஆகியவை தற்போதுள்ள டெவலப்பர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

விளம்பரத்தை மட்டுமே நம்பியிருக்கும் மெட்டா!

நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு மெட்டாவின் மொத்த வருமானத்தில் 97.6% விளம்பரங்கள் மூலமாக மட்டுமே வந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் தனது முக்கிய வணிகத்தைத் தாண்டி வளரத் தவறியதற்கான அபாய அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, விளம்பரங்களை நம்பியே கட்டமைக்கப்பட்ட கூகுள் நிறுவனம், பத்து ஆண்டுகளுக்கு முன்பே விளம்பரம் அல்லாத பிற வழிகளில் மெட்டாவை விட அதிக வருமானம் ஈட்டியது. சக்கர்பெர்க்கின் இந்த திடீர் அவசரத்திற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

இப்போதைக்கு, பயனர்கள் இந்த பிரீமியம் திட்டங்களால் பெரிதாக ஈர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. புரொஃபைல் கஸ்டமைசேஷன், ஸ்டோரியை எத்தனை பேர் திரும்பப் பார்த்தார்கள் என்ற எண்ணிக்கை, ரகசியமாக ஸ்டோரி பார்ப்பது, அதிக சாட்களை பின் செய்வது போன்ற அம்சங்கள் பவர் யூசர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களைத் தாண்டி பொதுவான பயனர்களைக் கவருமா என்பது சந்தேகமே.

மெட்டா ஏ.ஐ

AI நிபுணரும், AiEnsured நிறுவனத்தின் CTO-வுமான ஸ்ரீனிவாஸ் பத்மநாபுனி, மெட்டாவின் இந்த நடவடிக்கையை ஒரு தற்காலிக ஏற்பாடு என்றே பார்க்கிறார். "மெட்டாவின் கட்டணத் திட்டங்கள், பவர் யூசர்களைக் குறிவைத்து, AI செலவுகளைச் சமாளிப்பதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே தெரிகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

டிரஸ்ட் செக்யூரிட்டீஸ் (Truist Securities) போன்ற நிதி நிறுவனங்கள், இந்த சந்தாக்கள் மூலம் 2030-க்குள் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் வருமானம் வரலாம் எனக் கணித்தாலும், பல ஆய்வாளர்கள் இந்த கணிப்புகளைச் சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். இறுதியில், இத்தனை நாள் இலவசமாகப் பழகிப்போன 3.5 பில்லியன் பயனர்கள், இந்த புதிய கட்டண அம்சங்களில் தங்களுக்குத் தேவையான மதிப்பு இருக்கிறதா என்பதைப் பொறுத்தே மெட்டாவின் இந்த புதிய முயற்சி வெற்றி பெறுமா என்பது தெரியவரும்.

Telegram Ban: இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை! - பின்னணி என்ன?

ஜூன் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வை முன்னிட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு சில தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டெலிகிராம் செயலி மீதான தற்காலிக முடக்கத்தோடு சேர்த... மேலும் பார்க்க

ரூ.250 ஊதியம்: AI ரோபோக்களுக்காக உழைப்பை விற்கும் இந்தியர்கள்! - எதிர்கால தேவையா அல்லது ஆபத்தா?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், இன்று மென்பொருள்களைத் தாண்டி, மனிதர்களைப் போல உடல்ரீதியாகச் செயல்படும் ரோபோக்களாக (Humanoid Robots) உருவெடுத்து வருகிறது. இந்த ரோபோக்களுக்கு மனிதர்கள் எப்படி வேலை... மேலும் பார்க்க

டிரைவர் பிரேக் பிடிக்காவிட்டாலும் கார் தானாக நிற்கும்; அனுமதி வழங்கிய அரசு... விபத்துகள் குறையுமா?!

இந்தியாவில் தானாக இயங்கும் 'டிரைவர் இல்லா கார்' மற்றும் வாகனப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கான ஒழுங்குமுறை விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கார்களில் பயன்படுத்தப்படும் ரேடார் சென்சார்கள் மற... மேலும் பார்க்க

முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் - இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மெட்டா சேவைகள் பாதிப்பு!

மெட்டா நிறுவனத்தின் செயலிகளான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை, உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று முடங்கியுள்ளன. இன்று மதியம் முதல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் திடீரெனத் தொ... மேலும் பார்க்க

Grid Reorder: இன்ஸ்டா பயனர்கள் நீண்ட காலமாக கேட்ட வசதி! `வந்துவிட்டது' புதிய அப்டேட்! - ஏன் ஸ்பெஷல்?

இன்ஸ்டாகிராம் பயனர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்கள் பல காலமாக கேட்டுவந்த ஒரு முக்கியமான அம்சம், இப்போது நிஜமாகியிருக்கிறது. இனி உங்கள் இன்ஸ்டாகிராம் புரொஃபைல் பக்கத்தை ஒரு காலவரிசைப்படி மட்டும் பா... மேலும் பார்க்க

ChatGPT-யிடம் ஒரு கேள்வி கேட்டா, ஒரு பாட்டில் தண்ணீர் காலி! - மலைக்கவைக்கும் AI-யின் இருண்ட பக்கம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ChatGPT போன்ற AI கருவிகள் எவ்வளவு எளிமையாக, எவ்வளவு விரைவாக நமக்கு பதில்களைத் தருகின்றன! ஒரு மின்னஞ்சல் எழுதச் சொன்னால் சில நொடிகளில் தந்துவிடுகிறது. ஆனால், அந்த ஒவ்வொரு நொ... மேலும் பார்க்க