செய்திகள் :

கோவை: கிணற்றில் வீசிய துர்நாற்றம்; சாக்குப்பையிலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல் - போலீஸ் விசாரணை!

post image

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் கோபி ராசிபுரம் பகுதியில் செயல்படாத தொழிற்சாலை ஒன்று உள்ளது. தற்போது அந்த தொழிற்சாலையை திருமண மண்டபமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள்  சிறுமுகை காவல்துறையினருக்கும், அன்னூர்  தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போலீஸார் முன்னிலையில் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கிப் பார்த்தபோது, சாக்கு மூட்டை ஒன்றில் இருந்து துர்நாற்றம்  வீசியது தெரியவந்தது.

இளம்பெண் சடலம் மீட்பு
இளம்பெண் சடலம் மீட்பு

இதையடுத்து அந்த சாக்குபையை கயிறு கட்டி வெளியே எடுத்து வந்தபோது, அதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று உடலில் காயங்களுடன் கை, கால் கட்டப்பட்ட நிலையிலும், அந்தச் சடலத்துடன் கல் ஒன்றை கட்டி வீசி இருந்ததும் தெரியவந்தது. பின்னர் சடலத்தை மீட்ட சிறுமுகை காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு, கிணற்றுக்குள் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலைசெய்யப்பட்ட பெண் யார்... அவரை கொலைசெய்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: `மீண்டும் தேர்ச்சி பெற முடியுமா?’ - நீட் மறுதேர்வு பயம்; விபரீத முடிவெடுத்த மாணவி!

கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியி... மேலும் பார்க்க

ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணம்... காதலனுடன் சேர்ந்து திட்டம்; மருத்துவமனையில் வைத்து கணவரைக் கொன்ற மனைவி

கர்நாடகா மாநிலம், பெலகாவி என்ற இடத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தீப், கடந்த மார்ச் மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது லேசான விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு பெரிய அளவில் காய... மேலும் பார்க்க

சென்னை: விமான நிலையத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் - தீவிர விசாரணையில் அதிகாரிகள்!

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச சரக்கு முனையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்களில், சரக்கு பார்சல்கள் அனுப்பி வைக்கப் படுகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்படு... மேலும் பார்க்க

ஈரோடு: "கிட்னியை விற்று கடனைக் கட்டு" - எஸ்.பி அலுவலகத்தில் கதறிய பெண்; பாஜக நிர்வாகி கைது

ஈரோடு மாவட்டம் கொங்கு ஸ்கூல் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான சுகுணா. அசோகபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரிடம் 2024-ம் ஆண்டு குடும்ப தேவைக்காக வட்டிக்கு பணத்தைக் கடனாக வாங்கியிருக்கிறார... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

ஓட்டு வீடு, பெண் ஒருவர் கதறி கொண்டு இருக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்பகலில் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிக் கொண்டிருந்தனர். மேற்கூறையில் ஓட்டை உடைத்து நொறுக்குகின்றனர். `அடப்பாவிகளா ஏண்... மேலும் பார்க்க

`என்னை போகவிடு' கெஞ்சிய கடற்படை அதிகாரியின் மனைவி; பாலியல் வன்கொடுமை; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அய்யாஸ் தாஜ்(26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கண... மேலும் பார்க்க