செய்திகள் :

கும்மிடிப்பூண்டி: தி.மு.க வேட்பாளர் காலில் அ.தி.மு.க வேட்பாளர் விழுந்தது ஏன்?

post image

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான டி.ஜெ.கோவிந்தராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் சுதாகர் போட்டியிடுகிறார். இந்தநிலையில் தி.மு.க வேட்பாளரான டி.ஜெ.கோவிந்தராஜன், வேட்பு மனுவை தாக்கல் செய்ய கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்துக்கு ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். பின்னர் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு வெளியில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது வேட்பு மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க வேட்பாளர் சுதாகர், கட்சியினருடன் அங்கு வந்தார்.

இருவரும் நேருக்கு நேர் சந்தித்த போது அ.தி.மு.க வேட்பாளர் சுதாகர், மரியாதை நிமித்தமாக தி.மு.க வேட்பாளர் கோவிந்தராஜனுக்கு `அண்ணே... வணக்கம்' என்று கையெடுத்து கும்பிட்டார்.

பதிலுக்கு கோவிந்தராஜனும் வணக்கம் செலுத்தியபோது திடீரென சுதாகர், தி.மு.க வேட்பாளர் கோவிந்தராஜனின் காலில் விழுந்து `அண்ணே என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க' எனக் கூறினார். அதனால் பதறிப் போன கோவிந்தராஜன், அவசர அவசரமாக சுதாகரரை தூக்கி விட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.

காலில் விழும் அ.தி.மு.க வேட்பாளர் சுதாகர்

இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர். மேலும் தி.மு.க வேட்பாளர் காலில் அ.தி.மு.க வேட்பாளர் விழுந்த சம்பவத்தைப் பார்த்த அ.தி.மு.கவினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வேட்பாளர் சுதாகரிடம் சீனியர் நிர்வாகிகள் கேள்வி கேட்டதற்கு, தி.மு.க வேட்பாளர் என்னை விட வயதில் பெரியவர், அதனால் மரியாதை நிமித்தமாக காலில் விழுந்துவிட்டதாக பதிலளித்தாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் தி.மு.க வேட்பாளர் காலில் விழுந்த அ.தி.மு.க வேட்பாளர் சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலாகியது. தி.மு.க வேட்பாளரிடம் அ.தி.மு.க வேட்பாளர் சரண் அடைத்து விட்டதாகவும் சிலர் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதற்கு கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க-வினர், ``தி.மு.க எங்களுடைய பரம எதிரி. அந்தக் கட்சியின் வேட்பாளரின் காலில் எங்கள் கட்சி வேட்பாளர் சுதாகர் காலில் விழுந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதாகர், ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். அதைப் போல தி.மு.க வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனின் குடும்பத்தினரும் ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார்கள். அதனால் இருவருக்கும் பிசினஸ் டீலிங் இருக்க வாய்ப்புள்ளது. மரியாதை நிமித்தமாகவே காலில் விழுந்ததை சிலர் அரசியல் செய்கிறார்கள்" என்றனர்.

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க