செய்திகள் :

குலசேகரன்பட்டினம்: தம்பதியினர் மீது கோயில் பணியாளர்கள் தாக்குதல்; பரவும் வீடியோ... நடந்தது என்ன?

post image

உலக புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம், அருள்மிகு முத்தாரம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கார், வேன்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இத்திருக்கோயிலில் நிரந்தர பணியாளர்கள் மட்டுமின்றி தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்காலிக, ஒப்பந்த பணியார்கள் திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் அத்துமீறுவது, அவதுறான வார்த்தைகளால் பேசுவது உள்ளிட்ட சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

தம்பதியை தாக்கும் தூய்மை பணியாளர்கள்

இதனால் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடும் மன உளைச்சலுக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இருநாட்களுக்கு முன்னர் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சிகப்பு நிற சுடிதார், சிகப்பு நிற வேஷ்டி, டி-சர்ட் அணிந்த தம்பதியினர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது கோயில் பணியாளர்களுக்கும் அந்த தம்பதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த இரு தற்காலிக பணியாளர்கள், அவர்களை நாகூசும் தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி தாக்க முயன்றுள்ளனர். தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த தூய்மைப் பணியாளர்கள் திருக்கோயில் தற்காலிக பணியாளர்களுடன் சேர்ந்து சுடிதார் அணிந்து வந்த பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர். அதனை தடுக்க வந்த கணவனுக்கு அடி உதை விழுந்தது. இதனை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் செல்போனில் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எனவே திருக்கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை தாக்கியவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தம்பதியை தாக்கும் பணியாளர்கள்

இச்சம்பவம்  குறித்து திருக்கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து செயல் அலுவலரான வள்ளிநாயகம், “கோயில் வளாகத்தில் சிலர் சாமியாடி பக்தர்களிடம் பணம் வசூல் செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அந்த தம்பதிகள் சாமியாடி பக்தர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டிருந்தனர். இதற்காக அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தும் போது அந்த பெண், கோயில் பணியாளரை தாக்கியுள்ளார். அதன் பிறகே அங்கிருந்த தூய்மை பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் தம்பதியினரை தாக்கியுள்ளனர்” என்றார்.   

தருமபுரி: சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை!

தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுவன் திடீரென காணாமல் போனார். போக்சோசிறுவனின் பெற்றோரும், ஊர்க்காரர்களும் பல இட... மேலும் பார்க்க

`ஏன் என்னை தனியே விட்டுப் போனாய்?' - கொலை செய்துவிட்டு இன்ஸ்டாவில் உருகிய மணப்பெண் சியா கோயல்

கடந்த பிப்ரவரியில் தங்களின் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்து, நவம்பரில் தனியார் விமானங்கள் மற்றும் அரண்மனைகள் என பிரம்மாண்டமான திருமணத்திற்கு தயாராகி வந்தனர் கேத்தன் விஷால் அகர்வால் மற்றும் சியா கோய... மேலும் பார்க்க

அரண்மனையில் திருமண ஏற்பாடு; புனே கோட்டையில் மரணம் - இளம் தொழிலதிபர் வழக்கில் சிக்கிய மணமகள், காதலன்

புனேவின் புகழ்பெற்ற லோகாகட் கோட்டையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இளம் தொழிலதிபர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்ட கொலை எனத் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி வழக்கில், ... மேலும் பார்க்க

லின்இன் உறவுக்கு எதிர்ப்பு: பெற்றோர், சகோதரியை காதலனுடன் சேர்ந்து குத்திக் கொலைசெய்த இளம்பெண்!

பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் உள்ள சாய் கிரீன் அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தவர்கள் சோம்சுந்தர் மற்றும் அவர் மனைவி முத்துலட்சுமி. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு. அதில் மூத்த மகள் ஸ்வேதா பெற்றோர... மேலும் பார்க்க

மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுத்து நகை திருட்டு; கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ். இவர் கடந்த 6 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழத்தார். இதனையடுத்து சௌரிபாளையம் மயானத்தில் நாகராஜன் உடலை, அவரது மகன் வெங்கடேஷ் அடக்கம் செய்தார். அப்போது தனது த... மேலும் பார்க்க

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பாணியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; பீகாரில் 24 பேர் சிக்கியது எப்படி?

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வின் போது வினாத்தாள்கள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று நடந்த நீட் தேர்வுக்க... மேலும் பார்க்க