செய்திகள் :

Mammootty: 1998-க்கு பிறகு, அடுத்த உயரிய விருது; பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்மூட்டி!

post image

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. 1971-ம் ஆண்டு தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய மம்மூட்டி, இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படங்களில் மலையாளம் மட்டுமல்ல... தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் அடக்கம்.

இவரது நடிப்பும், திரைப்பட ஹிட்களும் இவருக்கு பாராட்டு தேடித் தந்ததோடு மட்டுமல்லாமல், விருதுகளையும் அள்ளித் தந்திருக்கிறது... தந்து வருகிறது.

 மம்மூட்டி
மம்மூட்டி

இதுவரை மூன்று தேசிய விருதுகள், பதினோரு கேரள அரசு விருதுகள் என இவரது விருதுகள் பட்டியல் நீள்கின்றன.

1998-ம் ஆண்டு மம்மூட்டிக்கு இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது.

இதையடுத்து, இன்று (ஜூன் 23, 2026) இந்திய குடியரசுத் தலைவர் கையால் இந்திய அரசின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதினை 'கலை' பிரிவில் பெற்றுள்ளார்.

Balan Review: 'தாய் - மகனின் த்ரில்லர் போராட்டம்' - 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் படம் எப்படி?

`மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிதம்பரம் இயக்கத்தில் `ஆவேசம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜீத்து மாதவனின் எழுத்தில் உருவாகியிருக்கிறது பாலன... மேலும் பார்க்க

"மேலாளர் நீக்கம், ரூ.67 லட்சத்துக்கு கணக்கு இல்லை"- ‘அம்மா’ அமைப்பின் நிர்வாக்குழு ராஜினாமா பின்னணி!

கேரளாவின் முன்னணி நடிகர் சங்கமான ‘அம்மா’வில் 31 ஆண்டுக்காலமாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அதை முறியடித்து, நடிகை ஸ்வேதா மேனன் தலைமையில் அமைந்த 17 பேர் கொண்ட பெண் நிர்வாகக் குழு பதவியேற்று 10 மாத... மேலும் பார்க்க

"பொம்மையாகச் செயல்பட முடியாது" - நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ஸ்வேதா மேனன்!

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பில் 31 ஆண்டுகளாக நடிகர்கள் மட்டுமே கோலோச்சி வந்தனர். இதற்கிடையே நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நடிகர் திலீப் மீது குற்றம்சாட்டப்பட்டது. அ... மேலும் பார்க்க

"​எனது தோற்றத்தை பார்த்து பல நடிகைகள் உடன் நடிக்க மறுத்தனர்" - நடிகர் இந்திரன்ஸ் உருக்கம்!

தையல் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர் கேரளாவைச் சேர்ந்த நடிகர் இந்திரன்ஸ். பின்னர் நகைச்சுவை நடிகராகவும், தற்போது பான்-இந்தியா அளவில் கவனிக்கப்படும் கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் மலையாள சினிமாவின... மேலும் பார்க்க

Parvathy: ``கொலை, பாலியல் வன்கொடுமை மிரட்டல்களுக்கு ஆளானேன்" - நடிகை பார்வதி திருவொத்து

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் 'இந்த விவகாரத்தில் இதுதான் என் கருத்து' என உறுதியாக களமாடுபவர் நடிகை பார்வதி திருவொத்து. அவரது இந்த வெளிப்படைத்தன்மையால் இணையத்தில் அவருக்கு எதிரான கருத்துடையவர்களின் பல ... மேலும் பார்க்க

'கடுமையான மன உளைச்சல்' - 'த்ரிஷ்யம் 3' படத்தினால் இடுக்கியைச் சேர்ந்தவருக்கு நேர்ந்த சிக்கல்!

மோகன்லால் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'திரிஷ்யம் 3' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகியோருக்கு எதிராக இடுக்கியைச் சேர்ந்த ஒருவர் காவல் துறையில் பு... மேலும் பார்க்க