செய்திகள் :

கூடலூர்: ஆட்கொல்லி புலி விவகாரம்; 2-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! - பதற்றத்தில் காவல்துறை!

post image

நாட்டில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் யானை, புலி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகளின் எதிர்கொள்ளல்களால் உயிரிழந்துள்ளனர். கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் ஆட்கொல்லி புலியால் இரண்டு நபர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல் பாகங்களையும் தின்றுச் சென்றுள்ளது. மனிதர்களை கொன்றுத் தின்று பழகிய அந்த புலி, அடுத்து யாரை வேண்டுமானாலும் இரையாக்கலாம் என்கிற அச்சத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த புலியை உடனடியாக அடையாளம் கண்டு பிடிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது வேலை நிறுத்தம்

கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முழு கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் முழு கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒரு சில அரசு அதிகாரிகளின் வாகனங்களில் சிலர் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவதால், வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக காவல்துறையினரை வரவழைத்து பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையை எதிர்த்து கூடலூர் மக்கள் தன்னெழுச்சியாக 48 மணி நேர தொடர் வேலை நிறுத்தப் போராட்டதிற்கு அழைப்பு விடுத்து இரண்டாவது நாளாக கட்சி பேதமின்றி போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், காவல்துறையினர் பதற்றம் அடைந்துள்ளனர்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க