செய்திகள் :

கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? - பட்டியலை தயார் செய்த திமுக!

post image

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதிகளையும் தி.மு.க தலைமை இறுதி செய்துள்ளது. விரைவில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று மாலை அறிவாலயத்திற்கு வருகை தந்து, தி.மு.கவின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதே போல் தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு இடங்களை ஒதுக்கியுள்ளது தி.மு.க.

இந்நிலையில் தி.மு.க வின் வேட்பளார்கள் பட்டியலை விரைவில் வெளியிட தி.மு.க திட்டமிட்டுள்ளது. இதனால், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்துவருகிறது தி.மு.க தலைமை.

இதுகுறித்து அறிவாலயத்திற்கு நெருக்கமானவர்களிடம் பேசும் போது “தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு நாகப்பட்டினம், மணப்பாறை தொகுதிகளை ஒதுக்க முடிவாகியுள்ளது. ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கபட்ட நான்கு தொகுதிகளில் மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லுார், சீர்காழி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் ம.தி.மு.க நிற்க உள்ளதாக தெரிகிறது.

இவர்களை தவிற தி.மு.கவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ள தமீம் அன்சாரிக்கு சிதம்பரம் தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு அரவக்குறிச்சி தொகுதியும் ஒதுக்கி உள்ளார்கள்.

தி.மு.க கூட்டணியில் உள்ள ஐ.யு.எம்.எல் கட்சி ஏணி சின்னத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அவர்களுக்கு பாபநாசம் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக இந்த பட்டியலோடு விடுதலை சிறுத்தைகளுக்கான எட்டு தொகுதிகள் கொண்ட பட்டியலையும் தி.மு.க வெளியிட திட்டமிட்டுள்ளது.

திருமா

விடுதலை சிறுத்தைகள் வசம் இருந்த நாகப்பட்டினம் தொகுதியை ம.ம.க வுக்கு ஒதுக்கியதால், சென்னையில் ஒரு பொதுத்தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க தி.மு.க தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இதன்பிறகு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகளை நாளை இறுதி செய்து வெளியிடவும் தி.மு.க தலைமை முடிவெடுத்துள்ளது” என்கிறார்கள்.

திடீரென டிஜிபி அலுவலகத்தில் விஜய்; யார் மீது புகார் கொடுத்தார்? - விவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் திடீரென சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒரு புகாரை கொடுத்திருக்கிறார். விஜய் டிஜிபி அலுவலகம் சென்ற பின்னணி என்ன? யார் மீது புகார் கொடுத்தார்?TVK VIJAYஅப்துல் கலாமின் உதவிய... மேலும் பார்க்க

பாமக: 'மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது'- ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

பா.ம.க கட்சி ராமதாஸ் - அன்புமணி என இருவருக்கும் இடையிலான மோதலால் இரண்டாக பிளவுண்டது. அதைத் தொடர்ந்து பா.ம.க தலைவர் `நான்தான்' என இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதற்கிடையில், அன்புமணி தரப்பு பா.ம.க... மேலும் பார்க்க

"எங்களது முடிவு பல பேரின் தூக்கத்தை கெடுக்கும்; விஜய்யுடன் கூட்டணியா.!"- வேல்முருகன் பேச்சு

திமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வே... மேலும் பார்க்க

`கரையேறும் அதிமுக மா.செ-க்கள்; அடிசறுக்குகிறதா திமுக தொகுதிகள்?' - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட களம்!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், அமைப்புரீதியாக ஐந்து மாவட்டக் கழகங்களாக அ.தி.மு.க-வின் கட்டமைப்பு இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி உட்... மேலும் பார்க்க

ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? - உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

ஹார்முஸ்பழங்காலம் முதலே பட்டு, முத்து மற்றும் வாசனை திரவியங்களின் வர்த்தக மையமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, இன்று உலகப் பொருளாதாரத்தின் 'கழுத்துப்பகுதி' என அழைக்கப்படுகிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடை... மேலும் பார்க்க

மல்லுக்கட்டும் திராவிட கட்சிகள்; இளம் வாக்குகளை கவரும் TVK, NTK! - பெரம்பலூரில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'இன்று நாம் பார்க்கப்போவது பெரம்பலூர் மாவ... மேலும் பார்க்க