'தொடர் புகார்; கண்டுக்கொள்ளாத நகராட்சி' மூதாட்டியின் கைவிரலை கடித்து துண்டாக்கிய...
கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க இந்தியா - EU ஒப்பந்தம்! முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையெற்ற ஒப்பந்தம் இன்று (ஜன. 27) கையெழுத்தாகி இருக்கிறது.
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வான் டெர் லேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஐரோப்பிய யூனியன் - இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் முன்னிலையில் ஐரோப்பிய யூனியன் - இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியா தரப்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்திய - EU ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெஷினரி, எலக்ட்ரிக்கல் பொருட்கள், ரசாயனங்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி ரத்து செய்யப்படுகிறது.
ஐரோப்பிய நாடுளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90 சதவீதம் பொருட்களின் மீதான வரி விதிப்பு ரத்து செய்யப்படுகிறது.
அடுத்த ஏழாண்டுகளில், 93 சதவீதம் பொருட்களின் மீதான வரி விதிப்பு, பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டி விடும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடல் சார் பொருட்கள், பிளாஸ்டிக்ஸ், தோல், காலணிகள், ரசாயனங்கள் போன்றவற்றின் வரி விதிப்பு பூஜ்ஜியமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய நாடுகளின் சராசரி வரி விதிப்பு விகிதம், 3.8 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளில் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்கள், அங்கேயே (POST-STUDY VISA) 9 மாதங்கள் கால அவகாசம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளை பயின்ற மருத்துவர்கள், செவிலியர்களின் பட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிப்பதால், அவர்கள் அங்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு இந்த ஒப்பந்தம் மூலம் உருவாகி இருக்கிறது." எனக் கூறப்படுகிறது.

















