செய்திகள் :

கோவை: `நீட் எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்த தமிழ்நாடு; ரத்து செய்யப்படும்வரை...'- இளைஞர்கள் போராட்டம்

post image

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் காக்ரோச் ஜனதா கட்சியினரும் நீட் எதிர்ப்பாளர்களும் மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

"நீட் ஒழிக்கப்பட வேண்டும்... மாணவர்களின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும்" என்ற முழக்கங்கள் ஒலிக்க, கோவையின் சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை (NTA) மறுதேர்வை அறிவித்தது. இதையடுத்து டெல்லியில் நீட் தேர்வை ரத்து செய்யவும், மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் கோரி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின்போது காவல்துறை தடியடி நடத்திய சம்பவத்தைக் கண்டித்து கோவை ஜீவா இல்லத்தில் நீட் எதிர்ப்பாளர்களும் காக்ரோச் ஜனதா கட்சியினரும் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பொதுவுடமை சிந்தனையாளர்கள், திராவிடக் கருத்தாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்று வருகின்றனர்.

திரை விரித்து அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்திருந்த பெண்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இளைஞர்களும் பொதுமக்களும் பறை இசைத்தும், புரட்சிப் பாடல்களைப் பாடியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

``எத்தனை நாள்கள் ஆனாலும் இங்கேயே தங்கி, இங்கேயே உணவருந்தி, போராட்டத்தைத் தொடர்வோம்" என்று பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் பேசிய கோவை காக்ரோச் ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர், "எங்கள் தலைமுறையும் நீட் தேர்வால் சீர்குலைய நாங்கள் விரும்பவில்லை. நீட் இந்தியாவில் இருந்து அகற்றப்பட வேண்டும்" என்றார்.

கோவை AIYF மாவட்டச் செயலாளர் மௌ. குணசேகர் பேசுகையில், ``நீட் எதிர்ப்புக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளம் அமைத்தது தமிழ்நாடுதான். சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, நாட்டுக்கே முன்னுதாரணமாகச் செயல்பட்ட மாநிலமும் தமிழ்நாடுதான்" என்றார்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சகம் தரப்பிலும் NTA தரப்பிலும் இதுவரை அதிகாரபூர்வ பதில் வெளியாகவில்லை.

நீட் தொடர்பாக மத்திய அரசும் NTA வும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

"நான் முதலிலிருந்தே மாணவர்களுடன் தான் நிற்கிறேன்" - மம்தா பானர்ஜி

haடெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் குறித்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... "நான் முதலிலிருந்தே மாணவர்களுடனும் அவர்களின் போராட்ட... மேலும் பார்க்க

தேவையான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லை; வினாத்தாள் கசிவு விசாரிக்க விரைவு நீதிமன்றம்? - சிதம்பரம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக இந்திய பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இது குறித்து காங்கிரஸ் சீனியர் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்... மேலும் பார்க்க

"திரைப்படக் கலைஞர்கள் மக்களின் வலியைப் பேச உரிமை உண்டு; ஆனால், திசை திருப்பக் கூடாது" - சீனு ராமசாமி

டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, நேற்று (ஜூலை 23), நீலம் மாணவர் இயக்கம் சார்பாக சென்னை ராஜரத்தினம் மைதானம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இயக... மேலும் பார்க்க

தூத்துக்குடி இளைஞர் லாக்கப் மரணம்: "பதவி மமதை கண்ணை மறைக்கிறதா முதல்வரே?" - சீமான் கண்டனம்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24) தலையில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜூலை 23) உய... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: ``இளைஞர்களை நேரடியாக அவமதிக்கும் செயல்" - பாஜக அரசுக்கு CJP கடும் கண்டனம்!

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி, ``நீட் குளறுபடிகள் ... மேலும் பார்க்க

CJP Protest: `2 கோரிக்கைகள் ஏற்பு; நாளையும் தொடரும் பேச்சுவார்த்தை!' - ஜே.பி.நட்டா

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும். இன்று மதியம் காக்ர... மேலும் பார்க்க