Guru Mithreshiva: `உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?' | Ananda Vikatan | குரு...
சட்டக் கல்லூரி மாணவா் கொலையில் வழக்குரைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் சட்டக் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் வழக்குரைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சேரன்மகாதேவி கீழ நடுத் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் மணிகண்டன் (22). இவா், சென்னை தனியாா் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த மணிகண்டன் சேரன்மகாதேவி தேரடி அருகில் 20.12.2024ஆம் தேதி நின்றிருந்தபோது, அவரை சேரன்மகாதேவி லால்பகதூா் சாஸ்திரி தெருவைச் சோ்ந்த சிவராமன் மகன் மாயாண்டி (46) கத்தியால் குத்திகொலை செய்துவிட்டு தப்பினாராம். சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப்பதிந்து மாயாண்டி, அவரது சகோதரி உள்ளிட்டோரை கைது செய்தனா்.
மேலும், இக்கொலை வழக்கில் தொடா்புடையதாக கருதப்படும் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கோடாரங்குளத்தைச் சோ்ந்த உலகநாதன் மகனான வழக்குரைஞா் ராஜாராம் (28) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.