செய்திகள் :

சட்டசபையில் டாபிக் ஆன இயக்குனர் `அட்லி' - வித்தியாசமாக விமர்சனம் செய்த எம்.எல்.ஏ சிவசங்கர்!

post image

சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசிய திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் டைரக்டர் அட்லியை இழுத்து அரசை விமர்சனம் செய்திருந்தார்.

சிவசங்கர்

ஆளுநர் உரை குறித்து பேசிய சிவசங்கர், 'அட்லி சிறந்த திரைப்பட காட்சிகளை எடுத்து வந்து ஹிட் கொடுப்பார். அதேமாதிரி,அதுபோல எங்கள் ஆட்சியின் திட்டங்களை எடுத்து வைத்து கொண்டு ஆட்சி நடத்துகிறீர்' என்றார்.

இதற்கு பதில் கூறி பேசிய அமைச்சர் ராஜ் மோகன், 'தமிழ்த் திரையுரகில் இருந்து மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர். ஆனால் சிவசங்கர் முழு அரசியல்வாதி , அவர் அட்லி குறித்து பேசியது அதிர்ச்சியும் ஆச்சரியமும் தருகிறது.

அட்லிக்கும் சட்டமன்றத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. காலமும், காட்சியும் ஏற்கனவே மாறிவிட்டது' என்றார்.

இயக்குநர் அட்லி
இயக்குநர் அட்லி

இதற்கு பதில் கூறிய சிவசங்கர், 'நான் அட்லியை மட்டும் இல்லை உங்களையும் பாலோ செய்கிறேன்' என்றார்.

தொடர்ந்து அளுநர் உரையின் மீதான விவாதம் அவையில் நடந்து வருகிறது.

'யார் அதிகம் ஓட்டு வாங்குனது?' - அமைச்சர் அருண்ராஜ் vs சிவசங்கர் காரசார விவாதம்!

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் நடந்து வருகிறது. அப்போது அமைச்சர் அருண் ராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.Arun Rajஅமைச்சர் அருண்ராஜ் பே... மேலும் பார்க்க

நிறுத்தப்பட்ட சட்டமன்ற ஒளிபரப்பு: "முழு நேரலை..முழு நேரலை...அத்தனையும் உருட்டா சார்! - அதிமுக கேள்வி

தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் இன்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவ... மேலும் பார்க்க

`எத்தனை தடவை தேசிய கீதம் போடணும்னு நான் முடிவு பண்ணிப்பேன்!' - அவையில் கடுப்பான சபாநாயகர்

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் அவையில் நடந்து வருகிறது. அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ வேலு முன்வைத்த விமர்சனம் ஒன்றிற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார்... மேலும் பார்க்க

அவையில் உதயநிதி வைத்த கோரிக்கை.! `கூடுதல் பத்தியாகச் சேர்க்கலாம்' - உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்!

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்நாடக மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

`எல்லையற்ற அதிகாரம் படைத்தவன்' - ஈரான் நிபந்தனையின்றி சரணடைந்ததாக சொல்லும் டொனால்டு ட்ரம்ப்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் தனது நாட்டின் எல்லைக்கு உட்பட்ட ஹார்மூஸ் ஜலசந்தியை முழுமையாக போக்குவர... மேலும் பார்க்க

`அமெரிக்க அதிபர்தான் பிரச்னை என்று இஸ்ரேலில் யாராவது நினைத்தால்.!'- துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் காட்டம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் ராஜதந்திர மற்றும் ராணுவ உதவிகளை இஸ்ரேல் தலைவர்கள் மதிக்கத் தவறிவிட்டதாக அமெரிக்கத் த... மேலும் பார்க்க