செய்திகள் :

சந்தை இறக்கம்: மொத்த முதலீட்டை (Lumpsum) புத்திசாலித்தனமாகச் செய்யும் STP பற்றி தெரியுமா?

post image

பங்குச் சந்தை திடீரென இறங்கும் போது, பல முதலீட்டாளர்கள் பயந்துபோய்விடுவார்கள். “இப்போ முதலீடு பண்ணலாமா, வேண்டாமா?'' என்ற குழப்பம் அவர்களுக்கு வருவது மிக மிக இயல்பான விஷயம்.

ஆனால், அனுபவம் வாய்ந்தவர்கள் இதையே ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்ப்பார்கள். குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், இந்தச் சந்தை இறக்கத்தைப் பயன்படுத்தி மொத்த முதலீட்டை (Lumpsum) செய்தால், நீண்ட காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

கடந்த 10, 20 ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீடு செய்துவரும் முதலீட்டாளர்களிடம் கொஞ்சம் பேசிப் பார்த்தால், மொத்த முதலீட்டின் மூலம் அவர்கள் அடைந்த லாபம் குறித்து புட்டுப் புட்டு வைப்பார்கள்.

Discount
Discount

பொதுவாக, பங்குச் சந்தை இறக்கத்தின்போது ஃபண்ட்களின் NAV (Net Asset Value) குறைவாக இருக்கும். இதனால், நீங்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக யூனிட்கள் கிடைக்கும். ஆடித் தள்ளுபடி மாதிரி 20%, 30% சலுகை விலையில் நீங்கள் துணிமணிகள் வாங்குவது போலதான் குறைந்த என்.ஏ.வி-யில் யூனிட்டுகளை வாங்கலாம்.

பிறகு பங்குச் சந்தைப் புள்ளிகள் மீண்டும் உயர்ந்தால், குறைந்த என்.ஏ.வி-யில் வாங்கிய அந்த யூனிட்டுகளின் மதிப்பு கூடும். இதுவே பலர் “குறைந்த விலையில் வாங்கி, அதிகமாக விலைக்கு விற்கும்” என்று சொல்கிறார்கள்.

உதாரணமாக, நீங்கள் ரூ.10 லட்சத்தை பங்குச் சந்தை ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்.ஏ.வி 50 என்றால், உங்களுக்கு 20,000 யூனிட்டுகள் கிடைக்கும். சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து சந்தை மேம்பட்டு என்.ஏ.வி ரூ.75 ஆக உயர்ந்தால், உங்கள் முதலீட்டு மதிப்பு ரூ.15 லட்சமாக மாறும். இது நல்ல லாபம்.

ஆனால் இதே நேரத்தில், நீங்கள் முதலீடு செய்த பிறகு பங்குச் சந்தை புள்ளிகள் இன்னும் கீழே போய் என்.ஏ.வி ரூ.40 ஆக குறைந்தால், உங்கள் முதலீடு ரூ.8 லட்சமாகக் குறைந்து காணப்படும். இதை பார்த்தால் மனதில் பதற்றம் வரலாம். மேற்கொண்டு பணம் போட்டும் போச்சே! ஆனால், இது தற்காலிகமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பங்குச் சந்தை இறங்கி இருக்கும்போது ஒரே நேரத்தில் முதலீடு செய்து, பிற்பாடு குறைந்துவிடுமோ என்கிற பயம் இருக்கா? இந்த அபாயத்திலிருந்து உங்கலுக்கு உதவ இன்னொரு முதலீட்டு முறை இருக்கிறது. அதுதான் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்று சொல்லப்படும் STP (Systematic Transfer Plan). இந்த STP எப்படிச் செயல்படும் என்று கேட்கிறீர்களா?

உதாரணமாக, உங்களிடம் இப்போது ரூ.10 லட்சம் இருக்கிறது. இதனை ஒரே நேரத்தில் முதலீடு செய்தால், பிற்பாடு சந்தை இறக்கம் காணும்போது நஷ்டம் வரும். அதற்கு பதிலாக, கொஞ்சம் கொஞ்சம் முதலீடு செய்தால், சந்தை இறக்கத்தை அது சரிசெய்துவிடும்.

உதாரணமாக, ரூ.10 லட்சத்தை ஒரு நல்ல கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டம் ஒன்றில் முதலீடு செய்துவிட்டு, பிற்பாடு அதிலிருந்து வாரந்தோறும் ரூ.50 ஆயிரம் வீதம் அடுத்த 5 மாதங்களுக்கு நீங்கள் முதலீடு செய்ய உதவுவதுதான் எஸ்.டி.பி முதலீடு.

எப்பேர்பட்ட சந்தை இறக்கம் என்றாலும் ஐந்து மாதங்களுக்குள் இறக்கம் கண்டு மீண்டும் மேலே வரத் தொடங்கிவிடும். வாரந்தோறும் ரூ.50 ஆயிரம்கூட வேண்டாம். வாரம்தோறும் ரூ.25 ஆயிரத்தை எஸ்.டி.பி மாற்றினாலே போதும் எனில், அடுத்த 10 மாதங்களுக்கு உங்கள் முதலீட்டை மாற்றி அமைக்கலாம்! ஒருவேளை, பங்குச் சந்தை சட்டென்று உயரத் தொடங்கிவிட்டது எனில், இந்த எஸ்.டி.பி.யை நிறுத்தக்கூட வாய்ப்பு இருக்கிறது!

SBI

ஆக, பங்கு சந்தை இறக்கத்தைக் கண்டு நாம் பயந்து நிற்கத் தேவை இல்லை. இந்த இறக்கத்தை ஒரு நல்ல வாய்ப்புக் கருதி, மொத்த முதலீடு செய்வது மிக மிக புத்திசாலித்தனமான செயல். உங்களால் நீண்ட கால நோக்கத்துடன், மன அமைதியுடன் முதலீடு செய்ய முடிந்தால், மொத்த முதலீடு மிக நல்ல பலனைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா?

இது போன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் - https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001

நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.

Labham - 3: EMI + SIP... வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கும் சூப்பர் ஃபார்முலா

35 வயதானாலே போதும், 'சொந்தமா இன்னும் வீடு வாங்கலையா...? கடனைக் கிடனை வாங்கி, மொதல்ல, ஒரு வீடு வாங்குப்பா...' என்று நெருக்குதலைத் தர இன்று பல வீடுகளில் 'பெரியவர்கள்' தயாராக இருக்கிறார்கள். இன்றுள்ள நில... மேலும் பார்க்க

NRI - 10: ரிஸ்க்கே எடுக்க மாட்டேன் என்பவரா நீங்கள்? எத்தனை லட்சங்களை நீங்கள் இழப்பீர்கள் தெரியுமா?

மனிதர்கள் இரண்டு வகை. 'எந்த விஷயத்திலும் நான் ரிஸ்க்கே எடுக்க மாட்டேன்' என்பவர்கள் ஒரு வகை. 8 மணிக்கு ரயில் என்றால், 7.30 மணிக்கே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடுவார்கள். 40 கிலோ மீட்டருக்கு மேல் வண்டிய... மேலும் பார்க்க

`25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்' புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனுமதி இலவசம்; பரிசு உண்டு

சம்மர் வந்துவிட்டது. கொளுத்தும் வெயிலில் எல்லோரும் ஏசி, குளிர் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவோம். இதனால் மின்கட்டணமும் எகிறும். ஆனால், இந்த வெயில் காலத்திலும் இலவச மின்சாரம் மூலம் மின் கட்டணத்திலிருந்த... மேலும் பார்க்க

கையில் பணம் புழங்கிக்கொண்டே இருக்க செய்யக் கூடாத தவறுகளின் லிஸ்ட் | பணம் வளர்ப்போம் - 4

என்ன தான் பார்த்து பார்த்து நிதி திட்டமிடல் செய்தாலும், சில நேரங்களில் சில தவறுகளும் நடந்துவிடும். அவை தெரிந்து செய்யும் தவறுகள் அல்ல... தெரியாமல் செய்யும் தவறுகள் தான். அவை என்னென்ன என்பதை பட்டியலிடு... மேலும் பார்க்க

Labham - 2: தங்கம் விலை இந்த 10 ஆண்டில் எத்தனை மடங்கு உயரும்? #அக்‌ஷய திருதியை #Akshaya Tritiya

தங்கம் என்பது நம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நமக்கு மொத்தமாக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கம் வாங்கிக் குவிக்கிறார்கள் நம் மக்கள். இன்னும் சில நாள்களில் அக்ஷய திருதியை ப... மேலும் பார்க்க

NRI Corner 9 - உங்கள் பெற்றோர், குழந்தைகளுக்கு மாதந்தோறும் பணம் தர இந்த ஒரு ஃபண்ட் இருந்தால் போதும்!

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்னை, தமிழ்நாட்டில் இருக்கும் பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் தரவேண்டும்; அல்லது, கல்லூரியில் படிக்கும் மகள்/மகனுக்குப் பணம் அனுப்ப வேண்டும... மேலும் பார்க்க