செய்திகள் :

மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இறங்கும் TVS நிறுவனம்!

post image

தமிழகத்தின் தலைசிறந்த கார்ப்பரேட் நிறுவனமான டி.வி.எஸ், மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இறங்குகிறது. பிஜிம் (PGIM) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் களம் இறங்கத் தயாராகி இருக்கிறது டி.வி.எஸ் நிறுவனம்.

இந்தியாவிலும் தமிழகத்திலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான விழிப்புணர்வு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை சுமார் 6 கோடி பேர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 20 கோடி முதல் 25 கோடி பேர் வரை முதலீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதே போல, இந்தியா முழுக்க இதுவரை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடாகி இருக்கும் தொகை சுமார் 82 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீடாகி இருக்கும் தொகை சுமார் 175 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பல்வேறு இந்திய நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இறங்கி வருகின்றன. கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தின் தலைசிறந்த கார்ப்பரேட் நிறுவனமும் 125 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் நிறுவனமுமான டி.வி.எஸ், மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் களம் இறங்கத் தயாராகி இருக்கிறது.

டி.வி.எஸ் வேணு குரூப் நிறுவனத்தின் ஓர் அங்கமான டி.வி.எஸ் வேணு மேனேஜ்மென்ட் அண்ட் கன்சல்டன்ஸி சர்வீஸஸ் நிறுவனம், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான பிஜிம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் வாங்கி இருக்கிறது டி.வி.எஸ் வேணு நிறுவனம்.

பிஜிம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 25-க்கும் மேற்பட்ட ஃபண்ட் திட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத முடிவில் இந்த நிறுவனம் நிர்வகித்து வந்த மொத்த சொத்து மதிப்பு சுமார் 33,000 கோடியாக இருந்தது.

டி.எச்.எஃப்.எல் ப்ரிஅமெரிக்கா (DHFL Preamerica) என்கிற பெயரில் செயல்பட்டு வந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை புரூடென்ஷியல் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டு வாங்கியது.

இதன்பிறகு இந்த நிறுவனம் நிர்வாகம் செய்துவந்த மொத்த சொத்து மதிப்பு உயர்ந்ததே தவிர, நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கவில்லை. எனவே, இந்த நிறுவனத்தை இன்னொரு நிறுவனத்துக்கு விற்கும் முடிவை எடுத்தது பிஜிம் நிறுவனம்.

ஆட்டோமொபைல், நிதி மேலாண்மை, ரியல் எஸ்டேட் எனப் பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் டி.வி.எஸ் நிறுவனம் மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் இன்னும் பல லட்சம் பேருக்கு மியூச்சுவல் ஃபண்ட் சேவையைத் தரும் என்று நம்பலாம்!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா?

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

இது போன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் - https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001

நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.

25 வயதில் உங்கள் மகன், மகளுக்கு ரூ.1 கோடியைச் சேர்க்கும் எளிய வழியைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

இன்றைக்கு 30, 35 வயதில் இருக்கும் பலரிடம் ரூ.1 கோடி பணம் இருக்குமா என்று கேட்டால், இருக்காது. அவர்களிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு அல்லது மனை இருக்கலாம். ஆனால், நமக்குத் தேவைப்படும்போது ஏதோ ஒரு முதலீட... மேலும் பார்க்க

புதிய ஃபைனான்ஷியல் இயர்... உங்கள் வாழ்க்கை மாற இந்த 5 விஷயங்களை செய்யுங்க!

நாளை முதல் 2026-27-ஆம் நிதி ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த புதிய நிதி ஆண்டு தினத்தை மற்றுமொரு நாளாக நாம் நினைத்துவிடக் கூடாது. காரணம், அடுத்த நிதி ஆண்டை நம் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில... மேலும் பார்க்க

இன்றைக்கு ஒரு மாத வீட்டுச் செலவு ரூ.50,000... 10 ஆண்டுக்கு பிறகு ரூ.89,542 தேவை - எப்படி தெரியுமா?

இன்றைக்கும் பலரும் புரிந்துகொள்ளாத விஷயமாகத்தான் இருக்கிறது, பணவீக்கம் எனப்படும் விலைவாசி உயர்வு. இதனால் நம் கையில் இருக்கும் பணத்தின் மதிப்பானது மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வருவதை நம்மில் பலரும் புரிந... மேலும் பார்க்க

`இதை விட `அதிக லாபம்' வேண்டும்!' - சம்பாதித்த அத்தனை பணத்தையும் இழக்கும் பரிதாபம்! ஏன் இந்த நிலை?!

அதிக பணம் சேர்க்க வேண்டும்; அதுவும் குறுகிய காலத்தில் சேர்க்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. அப்படி நினைப்பவர்களின் நிஜத்தில் நிறைவேறுகிறதா என்று பார்த்தால், ஆசை நிறைவேறுவதற்குப் பதிலாக அத்த... மேலும் பார்க்க

"ஏங்க... நாம எப்ப கோடீஸ்வரன் ஆகுறது?" - இது கணவன் மனைவிக்கான ப்ளூபிரிண்ட்!

நீங்களும் வேலைக்குப் போறீங்க. உங்க மனைவியும் (அல்லது கணவரும்) வேலைக்குப் போறாங்க. ரெண்டு பேருக்கும் மாசம் நல்ல சம்பளம் வருது. ஆனா, மாசக்கடைசியில அக்கவுண்ட் பேலன்ஸ பார்த்தா மட்டும், யாரோ நம்மளை வெச்சு ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை இறக்கம்... இப்போது என்ன செய்ய வேண்டும்? - சுனில் சுப்பிரமணியம் காட்டும் வழி!

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகக் கடந்த ஒரு மாத காலமாகவே உலக அளவில் பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டுள்ளன. இந்தியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 8.54%, சென்செக்ஸ் 8.51% அளவுக்கும் இறக்கம் கண்டுள்ளன. ஆனால், ப... மேலும் பார்க்க