செய்திகள் :

சமயபுரம் கோயில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் பலி - கும்பாபிஷேகம் நடந்து 4 ஆண்டுகளிலேயே விபத்து

post image

சக்தி தலங்களில் முதன்மையானதும், அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்றதுமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தற்போது பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது.

இந்தப் பூச்சொரிதல் விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

உயிரிழப்பு

அதன்படி, சமயபுரம் வந்து தங்கி இருந்து காலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வதற்காக வருகை தந்த பக்தர்கள் கோயில் சன்னதி வீதி மண்டபத்தில் படுத்து உறங்கினர். இதேபோல், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நதியா (32) மற்றும் அவரது உறவினர்கள் படுத்து உறங்கியுள்ளனர்.

உறங்கிக் கொண்டிருந்த மூன்று பெண் பக்தர்கள் மீதும் மண்டப சீலிங் மேற்கூரை காங்கிரீட் சுவர் பெயர்ந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். இதில், சம்பவ இடத்திலேயே நதியா உயிரிழந்தார். உடனடியாக, அருகில் இருந்த மற்ற பக்தர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

spot

மேலும், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயபுரம் காவல் நிலைய போலீஸார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதோடு, பேரிகார்டுகளை கொண்டு சன்னதி வீதியை முற்றிலும் அடைத்தனர். அம்மனை சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இடையே இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், அதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடமும், அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து; தவெக வேட்பாளரின் உறவினர்கள், தொண்டர்கள் காயம்|Photos

பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் விழுந்த கார்; 7 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி; விபத்து நடந்தது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகில் உள்ள தீண்டோரி சிவாஜி நகரில் கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துள்ளானது. கார் சாலையோர தடுப்பை மீறி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. கிணறு முழுக்க த... மேலும் பார்க்க

மும்பை: நடுக்கடலில் உள்ள ஒ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் தீவிபத்து - 10 பேர் காயம்

மும்பை கடல் பகுதியில் ஒ.என்.ஜி.சிக்கு சொந்தமான எண்ணெய் கிணறு இருக்கிறது. இந்த எண்ணெய் கிணற்றில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனே அவசர நிலை அறிவிக்கப்பட்டு பணியாளர்கள் அனைவரும் ... மேலும் பார்க்க

பீகார்: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உயிரிழப்பு; 12 பேர் காயம்; விபத்து ஏற்பட்டது எப்படி?

பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷெரீப் என்ற இடத்திற்கு அருகில் உள்ள மெஹ்ரா என்ற கிராமத்தில் ஷீட்லாஷ்டமி கோயில் இருக்கிறது. வட இந்தியர்களின் சைத்ரா மாதத்தில் இன்று கடைசி செவ்வாய்கிழமை என்பதால்... மேலும் பார்க்க

`பெரிய அலை இழுத்துசென்றது' - ஒடிசா கடற்கரையில் படப்பிடிப்பின் போது கடலில் மூழ்கி உயிரிழந்த நடிகர்

மேற்கு வங்கத்தில் டிவி மற்றும் பெங்காலி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ராகுல் அருணோதய் பானர்ஜி. இவர் அதிக அளவில் டிவி தொடர்களில் நடித்து வந்தார். புதிதாக போலே பாபா பார் கரேகா என்ற டிவி தொடரில் நடித்... மேலும் பார்க்க

ஆந்திரா: லாரியுடன் மோதி தீப்பிடித்த பஸ்; 12 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!

ஆந்திரா மாநிலத்தில் இன்று காலை நடந்த விபத்தில் பஸ் ஒன்று எரிந்து நாசமானது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பஸ் தெலங்கானாவின் நிர்மல் என்ற இடத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள நெல்லூர் என்ற இடத்திற்க... மேலும் பார்க்க