செய்திகள் :

சர்வதேச சந்தைக்கு வரும் ஈரான் எண்ணெய்; இந்தியாவுக்கு ப்ளஸ் தானா?

post image

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை ஸ்விட்சர்லாந்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன... முக்கிய முன்னேற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அப்படி நேற்றைய சந்திப்பில் ஈரான் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்கலாம் என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான லைசன்ஸையும் ஈரானுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா.

இந்த லைசன்ஸ் வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி வரை செல்லுபடியாகும்.

ஈரான் - அமெரிக்கா
ஈரான் - அமெரிக்கா

ஏன் இந்த நகர்வு?

போரை நிறுத்துகிறோம் என்று அமெரிக்காவும், அணுசக்தி ஆயுத தயாரிப்பை நிறுத்தி வைக்கிறோம் என்று ஈரானும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தையும், பேச்சுவார்த்தையையும் இன்னும் நம்பகமாக மாற்ற அமெரிக்கா இந்த நகர்வை மேற்கொண்டுள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவிற்கு ப்ளஸ்?

எது எப்படியோ, ஈரான் எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவது இந்தியாவிற்கு மிகப்பெரிய ப்ளஸ்.

இந்தியா கிட்டத்தட்ட 90 சதவிகித எண்ணெயை இறக்குமதி தான் செய்கிறது. இப்போது ஈரான் போரினால் இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுவரை அமெரிக்கா தடையினால் ஈரான் எண்ணெயை வாங்குவது சிரமமாக இருந்தது. இந்தப் போரின் இடையில் அமெரிக்கா ஈரான் எண்ணெய் வாங்க சில விலக்குகள் தந்தாலும், அதில் சில கட்டுப்பாடுகள் இருந்தது. அதனால், அது இந்தியாவிற்கு பெரியளவில் கைக்கொடுக்கவில்லை.

இப்போதைய அமெரிக்க அறிவிப்பு இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதியில் மிகவும் உதவ உள்ளது.

இந்தியா
இந்தியா

இருந்தாலும்..!

2018-ம் ஆண்டுக்கு முன்பு, ஈரான் தான் இந்தியாவின் டாப் எண்ணெய் சப்ளையராக இருந்தது. ஆனால், அமெரிக்காவின் தடையால் இது தடைப்பட்டது.

இவ்வளவு ப்ளஸ்கள் இருந்தாலும், ஈரானிடம் இருந்து இந்தியா உடனடியாக எண்ணெயை வாங்கிவிட முடியாது. ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கான நடைமுறைகள் தெளிவாக வேண்டும்.

இது தற்காலிக லைசன்ஸ் மட்டுமே. அதனால், இது இந்தியாவிற்கு நீண்ட காலத்தில் பயனளிக்கும் என்று கூற முடியாது.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசாணை வெளியிட்ட தமிழக அரசு - எப்போது தொடங்குகிறது?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அரசாண... மேலும் பார்க்க

மேகதாது: `புதிய நடுவர் மன்றம்... தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும்' - எச்சரிக்கும் சீமான்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராகவும், அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், சட்டசபையில் கடந்த 19ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத... மேலும் பார்க்க

கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கிய அதிருப்தி கோஷ்டி; உச்சகட்ட சிக்கலில் மம்தா!

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு, அந்தக் கட்சி கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது. மம்தா பானர்ஜிக்கு எதிராக 60 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கி... மேலும் பார்க்க

7 மாத குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை; 4 மணி நேரத்தில் சான்று வழங்கி உதவிய வட்டாட்சியர்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகாவிற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 மாதக் கைக்குழந்தைக்கு நிலவிய கல்லீரல் பிரச்னை காரணமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனை ... மேலும் பார்க்க

``செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை!" - முதல்வர் விஜய் கதைக்கு உதயநிதி பதில் கதை

முதல்வர் விஜய் தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம், எதிக்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளிப்பார் எனக் கூறப்... மேலும் பார்க்க

"'ஈவில்ஸ், ஈவில்ஸ்'ன்னு டெவில்ஸ் எங்களைப் பார்த்து சொல்றாங்க; ஆனா..." - ஆக்ஷனோடு உரையை முடித்த விஜய்

சட்டமன்றக் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.23) நடைப்பெற்றது. கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் பதிலுரை ஆற்றினார். அவையில் பேசிய அவர், "எனக்கும் எங்களது அமைச்சருக்கும் எதுவும் தெரியாது என்று பேசுக... மேலும் பார்க்க