செய்திகள் :

"'ஈவில்ஸ், ஈவில்ஸ்'ன்னு டெவில்ஸ் எங்களைப் பார்த்து சொல்றாங்க; ஆனா..." - ஆக்ஷனோடு உரையை முடித்த விஜய்

post image

சட்டமன்றக் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.23) நடைப்பெற்றது. கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் பதிலுரை ஆற்றினார்.

அவையில் பேசிய அவர், "எனக்கும் எங்களது அமைச்சருக்கும் எதுவும் தெரியாது என்று பேசுகின்றனர். அரசியல் ரீதியான கொள்கையிலும் மாநில உரிமையிலும் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையைக் கொண்டவர்கள் நாம். நீட் தேர்வு கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

10 மாத காலம் டிஜிபியே இல்லாமல் இருந்தது. தவெக ஆட்சியில் டிஜிபி நியமனம் செய்யபட்டார். போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுப்போம்.

டாஸ்மார்க்கில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை அடித்தனர். அதெல்லாம் தற்போது இல்லை. இது மன்னராட்சி இல்ல. இது மனசாட்சி உள்ள மக்களாட்சி.

எதிர்க்கட்சியினருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ், கலாசாரம் என்று சொல்லி இரட்டை வேஷம் போடுபவர்கள் நாங்கள் இல்லை. தமிழ் எங்கள் உயிர்நாடி என்பதில் உறுதியாக இருப்போம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மாநில உரிமைகளில் எப்போதும் உறுதியாக இருப்போம். அதேசமயம் அரசியல் வேறு, ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் நிர்வாக அணுகுமுறை வேறு. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

எங்களுக்கு பாடம் எடுப்பதாகச் சொல்லி உங்கள் வேஷங்களை நீங்களே கலைத்து கொள்கிறீர்கள். அதை மறந்துவிடாதீர்கள். அதேபோல நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எங்களை 'ஈவில்ஸ்', 'ஈவில்ஸ்', என்றார். 'ஈவில்ஸ்' என்பதை டெவில்ஸ் பேசக் கூடாது. அவர்கள் இருந்திருந்தால் ஒரு ஆக்ஷன் இங்கு பண்ணிருப்பேன். எல்லாரும் வெளிநடப்பு பண்ணிவிட்டார்கள். இருந்தாலும் செய்கிறேன்" என்று கூறி ஆக்ஷனோடு பேச்சை முடித்துகொண்டார்.

7 மாத குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை; 4 மணி நேரத்தில் சான்று வழங்கி உதவிய வட்டாட்சியர்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகாவிற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 மாதக் கைக்குழந்தைக்கு நிலவிய கல்லீரல் பிரச்னை காரணமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனை ... மேலும் பார்க்க

சர்வதேச சந்தைக்கு வரும் ஈரான் எண்ணெய்; இந்தியாவுக்கு ப்ளஸ் தானா?

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை ஸ்விட்சர்லாந்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன... முக்கிய முன்னேற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. அப்படி நேற்... மேலும் பார்க்க

``செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை!" - முதல்வர் விஜய் கதைக்கு உதயநிதி பதில் கதை

முதல்வர் விஜய் தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம், எதிக்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளிப்பார் எனக் கூறப்... மேலும் பார்க்க

முதல்வர் உரை: ``10 Reels-க்கான கண்டென்ட்; இனி சட்டமன்றத்துல டான்ஸ் ஆடுவாங்க போல" - உதயநிதி விமர்சனம்

சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அவையில் முதல்வர் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். அ... மேலும் பார்க்க

"நான் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது" - முதல்வர் விஜய்

சட்டமன்றக் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.23) நடைப்பெற்றது. கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் பதிலுரை ஆற்றினார். எப்போதும் ஆடியோ லான்ஜிலும், பிரசார மேடைகளிலும் குட்டி ஸ்டோரி சொல்லும் விஜய், இன்ற... மேலும் பார்க்க

"பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் வெளியே பண்ணுங்க; இங்க வேணாம்" - சோஃபா மாடல் விமர்சனத்துக்கு விஜய் பதிலடி

சட்டமன்றக் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.23) நடைப்பெற்று வருகிறது. கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் பதிலுரை ஆற்றினார். அவையில் பேசிய அவர், "வாகை சூடும் வரலாறு திரும்பி உள்ளது. தமிழ்நாட்டில் உள... மேலும் பார்க்க