செய்திகள் :

மெஸ்ஸியின் புதிய உலக சாதனை: ஆஸ்திரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!

post image

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி ஒரு புதிய சாதனை படைத்து, புது சரித்திரம் எழுதியுள்ளார். விறுவிறுப்பாக நடந்த உலகக்கோப்பை போட்டியில், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அதிகாரப்பூர்வமாக அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி பெற்றுள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடந்த இந்த முக்கியமான போட்டியில், அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டாலும், பின்னர் இரண்டு சூப்பர் கோல்களை அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார்.

ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மெஸ்ஸி அடித்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியே சென்றதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் சோர்ந்து போகாமல் ஆடிய மெஸ்ஸி, 38-வது நிமிடத்தில் ஒரு சூப்பர் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இந்த கோலின் மூலம், உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையை (16 கோல்கள்) மெஸ்ஸி முறியடித்தார்.

இரண்டாவது பாதியில் ஆஸ்திரிய அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை அர்ஜென்டினா வீரர்கள் தடுத்து நிறுத்தினர். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மெஸ்ஸி மீண்டும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த அபார வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி (குரூப் ஜே) பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கான தகுதியை உறுதி செய்துள்ளது. மேலும் உலகக்கோப்பையில் தனது மொத்த கோல்களின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியுள்ளார் மெஸ்ஸி.

மைதானத்தில் மெஸ்ஸி காட்டி வரும் அசாத்தியமான ஆட்டத்திறனும் சுறுசுறுப்பும் ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் இதுவரை 5 கோல்களை அடித்து, அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆரம்பத்தில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்டாலும், ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை பதற்றப்படாமல் மிகச் சிறப்பாக விளையாடி அணியை வழிநடத்திய மெஸ்ஸியின் இந்த ஆட்டம், ஏன் அவர் உலகின் மிகச்சிறந்த வீரர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.!

யோவான் விசா : முகத்தில் வீசப்பட்ட ஆசிட், ரொனால்டாவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோவின் நாயகன் யார்?

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை எதிர்த்து காங்கோ அணி களம் இறங்கியது.போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகல் அணி முதல் கோல் அடி... மேலும் பார்க்க

FIFA : விசா மறுப்பு, இனப் பாகுபாடு, இன்னும் பல.! - ட்ரம்பின் அமெரிக்காவும் சர்ச்சைகளும்

கால்பந்தின் உலகளாவிய திருவிழா... எல்லைகளையும், அரசியலையும், கலாச்சாரப் பிரிவினைகளையும் கடந்து நிற்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டம். ஜூன் 11 அன்று அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் 2026 FIFA உலகக் கோப்... மேலும் பார்க்க

MESSI : `களத்தில் அழுதது உண்மை தான்... Football காரணம் அல்ல.!' - உருகும் மெஸ்ஸி

2026 ஃபிஃபா உலகக் கோப்பை லீக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. தனது முதல் போட்டியில் அர்ஜென்டினா அணி, அல்ஜீரியாவை எதிர்கொண்டது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. இந்த ... மேலும் பார்க்க

`விளையாட்டா? அரசியலா?' - உலகக் கோப்பையில் 'ஒடுக்கப்படும் அணி' என ஆதங்கம் தெரிவிக்கும் ஈரான்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'ஜி' பிரிவின் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 2–2 என்ற கணக்கில் டிரா செய்த பிறகு, ஈரான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் காலேனோய் மற்றும் கேப்டன் மெஹ்த... மேலும் பார்க்க

MESSI : அசாத்திய ஹாட்ரிக்; அசத்திய மெஸ்ஸி! - உலகக் கோப்பையில் இமாலய சாதனை படைத்த சாதனை!

நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடர் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், இன்று அமெரிக்காவின் கேன்சாஸ் சிட்டி மைதானத்தில் நடந்த குரூப் 'ஜே' (Group J) போட்டியில... மேலும் பார்க்க

FIFA: 'காவல்காரன் Vozinhaவும்; சம்பவக்கார டிஃபெண்டர்களும்'- ஸ்பெயினுக்கு எதிராக நிரூபித்த Cabo Verde

கால்பந்து உலகின் அசுர பலம் கொண்ட ஸ்பெயினுக்கு எதிராக, முதல் முறையாக உலகக்கோப்பை மேடையில் களம் கண்ட காபோ வெர்டே அணி, 0-0 என்று போட்டியை டிரா செய்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.சில போட்டிக... மேலும் பார்க்க