சலால் அணை திடீர் திறப்பு: பாகிஸ்தானை நோக்கி பாயும் தண்ணீர்
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவும் சூழலில் ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணை மற்றும் ரம்பனியில் செனாப் ஆற்றின் குருக்கே கட்டப்பட்டுள்ள பக்லிஹார் நீர் மின் திட்ட அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
சலால் அணையின் 5 மதகுகள் வழியே அதிகயளவிலான தண்ணீரை இந்திய அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனர்.
3 விமான தளங்களை தாக்கிய இந்தியா… வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!
அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பாகிஸ்தான் நோக்கி ஆர்ப்பரித்து பாய்ந்து செல்கிறது.
பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவும் சூழலில் அணைகளில் இருந்து அதிகயளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதற்றமான சூழலில் இதுபோன்று வெள்ள நீரை திறந்துவிடுவதன் மூலமாக இது பாகிஸ்தான் மீதான மற்றொரு தாக்குதலாக கருதப்படுவதாகவும் செல்லப்படுகிறது.
இதனிடையே, கனமழை காரணமாக அணைகள் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.