செய்திகள் :

வானதி, சீமான், அண்ணாமலை, பொன்முடி... தொகுதி மாற திட்டமிடும் வி.ஐ.பி வேட்பாளர்கள்! பின்னணி என்ன?

post image

தமிழ்நாட்டில் பல அரசியல் பிரபலங்கள் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தொகுதி மாறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் என அனைத்துக் கட்சித் தலைவர்களுமே இந்தப் பட்டியலில் இருக்கின்றனர். நாம் கட்சிகளின் தரப்பில் விசாரித்த வரையில் கிடைத்த தகவல்கள் இதோ...

வானதி சீனிவாசன் :

2021 தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட, பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் இந்தமுறை கோவை வடக்குத் தொகுதிக்கு மாறவிருக்கிறாராம். கடந்த தேர்தலிலேயே 1728 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார், 42,000 வாக்குகளைப் பிரித்தும் சிறிய வாக்கு வித்தியாசத்திலேயே வெல்ல முடிந்தது. அதனால், இந்தமுறை பாதுகாப்பாக கோவை வடக்குத் தொகுதிப் பக்கம் ஒதுங்கிவிடலாம் என்கிற முடிவில் இருக்கிறாராம்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

சி.வி.சண்முகம் :

அ.தி.மு.க முன்னணித் தலைவர்களுள் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் இந்தமுறை மயிலத்தில் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம். கடந்தமுறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், தி.மு.க சார்பில் போட்டியிட்ட லட்சுமணனிடம், 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். அதனால், எதற்கு ரிஸ்க் என இந்தமுறை மயிலத்தில் ஒதுங்கிவிட முடிவு செய்துவிட்டாராம். தேர்தலில் போட்டியிட விருப்பமனுகூட மயிலம் தொகுதிக்குத்தான் கொடுத்திருக்கிறார். ஆனால், சிட்டிங் எம்.எல்.ஏவாக பா.ம.கவின் சிவக்குமார் இருக்கிறார். அதனால், தொகுதிக்காக இரு கட்சிகளுக்கும் மல்லுக்கட்டு இருக்கும் என்கிறார்கள்.

சீமான்

கடந்தமுறை சென்னை தொருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட மூன்றாவது இடத்துக்கு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தமுறை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம். இந்தமுறையாவது வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு சென்றுவிடவேண்டும் என்று இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். சொந்த மாவட்டம், நாடாளுமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் 28,000 வாக்குகள், வேலை செய்ய முன்னணி நிர்வாகிகள், மாநில கட்சிகள் களத்தில் இல்லாமல், காங்கிரஸ், பாஜக போட்டியிடும் என பல சாதகமான அம்சங்கள் இருப்பதால் இந்தமுடிவை எடுத்திருக்கிறாராம்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

அண்ணாமலை :

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்தமுறை கோவை அல்லது திருப்பூரில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம். கடந்தமுறை அரவக்குறிச்சியில் போட்டியிட்டு 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் அண்ணாமலை. அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில், கோவை மாவட்டத்தில் நல்ல வாக்குகளைப் பெற்றிருந்தார். அதனால், சிங்காநல்லூர், பல்லடம் அல்லது சூலூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம். அ.தி.மு.க வாக்குகளும் கைகொடுக்க எளிதாக எம்.எல்.ஏ ஆகிவிடலாம் என்கிற திட்டத்தில் இருக்கிறாராம்.

பொன்முடி :

கடந்த தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்ற பொன்முடி இந்தமுறை விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம். திருக்கோவிலூர் தி.மு.கவுக்கு சாதகமாக இருப்பதால் அங்கே தன் மகன் கௌதமசிகாமணியை நிறுத்தலாம் என முடிவு செய்திருக்கிறாராம். அதனால், பொன்முடி, விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டியில் போட்டியிடலாம் என முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"நீண்ட காலப் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு..." - பொன்முடி
"நீண்ட காலப் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு..." - பொன்முடி

வேல்முருகன் :

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பண்ருட்டி தொகுதியிலிருந்து இந்தமுறை நெய்வேலி தொகுதிக்கு மாறவிருக்கிறாராம். ஏற்கெனவே, 2001,2006-ல் பண்ருட்டி தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தவர் வேல்முருகன். தொகுதி மறுசீரமைப்பில், அவருக்கு சாதகமான பல இடங்கள் நெய்வேலி தொகுதிக்குள் செல்ல, 2011 தேர்தலில் தி.மு.க கூட்டணியில், பா.ம.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து, 2016 தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தனித்துப் போட்டியிட்டு 30,528 வாக்குகள் பெற்றார். தொடர்ந்து, 2021 தேர்தலில், தி.மு.க கூட்டணி சார்பாக மீண்டும் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். இந்தநிலையில், 2026-ல் மீண்டும் நெய்வேலி தொகுதியில் போட்டியிடலாம் என்கிற முடிவில் இருக்கிறாராம்.

காளியம்மாள் :

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், கடந்த தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு 14,823 வாக்குகள் பெற்றார். இந்தநிலையில், முன்னணிக் கட்சிகளில் இணைய தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி இணையும் பட்சத்தில் நாகப்பட்டிணம் தொகுதியில் அவர் களமிறங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

காளியம்மாள்
காளியம்மாள்

இவர்களைப் போல, கடந்தமுறை திருநெல்வேலியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் இந்தமுறை சாத்தூர் தொகுதியிலும், வானூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்ட வன்னி அரசு இந்தமுறை எழும்பூர் அல்லது ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும், கடந்த தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதி, இந்தமுறை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்தமுறை திருவாரூர் தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூட ஒரு தகவல் கட்சிகள் மத்தியில் பேசப்படுகிறது.

அதேபோல, கடந்த தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் இந்தமுறை ஶ்ரீவில்லிபுத்தூர் அல்லது தென்காசி தொகுதியிலும், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் இந்தமுறை திண்டுக்கல் தொகுதிக்கு மாற வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, கடந்தமுறை மக்கள் நீதி மய்யம் சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மருத்துவர் மகேந்திரன் இந்தமுறை கோவை தெற்கு அல்லது பொள்ளாச்சியிலும் கடந்தமுறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இந்தமுறை சிவகாசி தொகுதியிலும் 2016 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் இந்தமுறை மயிலாப்பூர் அல்லது நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

`திமுக-வில் இணைவது பற்றி, இன்னும் முடிவு பண்ணல..!’ - அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவரும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான நிலோஃபர் தி.மு.க-வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜோலார்பேட்டை பொன்னேரியில், வரும... மேலும் பார்க்க

`ஜெகதீப் தன்கர் போல ஒரு கட்டத்தில் நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள்' - தேர்தல் ஆணையரை சாடும் மம்தா

தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் ... மேலும் பார்க்க

``இந்திய பிரதமரை அடிபணிய வைக்க ட்ரம்ப் என்ன செய்தார்?" - விசிக தலைவர் திருமாவளவன்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது... மேலும் பார்க்க

"குற்ற உணர்ச்சியே இல்லாமல் மேடையில் டான்ஸ் ஆடுகிறார்.!"- விஜய்யை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடங்க விழா நேற்று (பிப். 2) நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி என்ற... மேலும் பார்க்க

"என்னென்ன அமெரிக்கப் பொருட்களுக்கு ஒப்புதல் என்பதை நாடாளுமன்றத்தில் சொல்லுங்கள்" - சு.வெங்கடேசன்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது... மேலும் பார்க்க

`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்' - போட்டியிடுவதும் சந்தேகம் என அண்ணாமலை அறிவிப்பு

கோவை தனியார் ஹோட்டலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணாவின் ஆட்சிக்கும், தற்போதைய திமுகவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா.அண்ணாவின் குடும்... மேலும் பார்க்க