செய்திகள் :

"என்னென்ன அமெரிக்கப் பொருட்களுக்கு ஒப்புதல் என்பதை நாடாளுமன்றத்தில் சொல்லுங்கள்" - சு.வெங்கடேசன்

post image

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது.

மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கும் பிரதமர் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் எனவும் தெரித்திருக்கிறார். தற்போது உலக அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

இந்த நிலையில், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``பிரதமர் மோடியுடன் உரையாடியதாகவும் பிரதமர் மோடி சில வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புக்கொண்டதாகவும் அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.

அமெரிக்க அரசின் வேளாண்துறை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இது அமெரிக்க விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி என்கிறார். அப்படியென்றால் என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

வானதி, சீமான், அண்ணாமலை, பொன்முடி... தொகுதி மாற திட்டமிடும் வி.ஐ.பி வேட்பாளர்கள்! பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் பல அரசியல் பிரபலங்கள் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தொகுதி மாறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் என அனைத்துக் கட்சித் தலைவர்களுமே இந்தப் பட்டிய... மேலும் பார்க்க

`ஜெகதீப் தன்கர் போல ஒரு கட்டத்தில் நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள்' - தேர்தல் ஆணையரை சாடும் மம்தா

தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் ... மேலும் பார்க்க

``இந்திய பிரதமரை அடிபணிய வைக்க ட்ரம்ப் என்ன செய்தார்?" - விசிக தலைவர் திருமாவளவன்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது... மேலும் பார்க்க

"குற்ற உணர்ச்சியே இல்லாமல் மேடையில் டான்ஸ் ஆடுகிறார்.!"- விஜய்யை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடங்க விழா நேற்று (பிப். 2) நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி என்ற... மேலும் பார்க்க

`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்' - போட்டியிடுவதும் சந்தேகம் என அண்ணாமலை அறிவிப்பு

கோவை தனியார் ஹோட்டலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணாவின் ஆட்சிக்கும், தற்போதைய திமுகவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா.அண்ணாவின் குடும்... மேலும் பார்க்க