செய்திகள் :

சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் 'வாரிசு' பட இயக்குநர் - மீண்டும் பாலிவுட்டில் நயன்தாரா!

post image

சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு 'சிக்கந்தர்' திரைப்படம் வெளிவந்திருந்தது. அத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்து வரும் 'மாற்றுபூமி' படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தொடக்கத்தில் இம்மாத ரிலீஸாகதான் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பில் தாமதமானதால் படத்தின் ரிலீஸும் தள்ளிப் போயிருக்கிறது.

Salman Khan - Nayanthara
Salman Khan - Nayanthara

இத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் பற்றிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. 'வாரிசு' படத்தின் இயக்குநர் வம்சிதான், சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

'வாரிசு' படத்திற்குப் பிறகு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்த இயக்குநர் வம்சி, தற்போது சல்மானை கதாநாயகனாக வைத்து இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை தெலுங்கு திரையுலகின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. 'வாரிசு' திரைப்படத்தையும் இந்த நிறுவனம்தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா நாயகியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். 'ஜவான்' திரைப்படத்திற்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் பாலிவுட் திரைப்படம் இது. இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

இத்திரைப்படம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் வம்சி, "சல்மான் கான் சாரை வைத்து என்னுடைய அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்.

இந்தப் படம் முழு மனதுடனும் உறுதியான நம்பிக்கையுடனும் தொடங்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

'சிராக் பஸ்வானுடன் காதல்?' - கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார். இப்போது நாடா... மேலும் பார்க்க

"அப்போது என் தந்தை மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார்; அவரின் மறைவுதான் எங்களை சேர்த்தது" - பாபி தியோல்

மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான பாபி தியோல், சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தந்தை தர்மேந்திராவின் மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறா... மேலும் பார்க்க

"தவறுகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை 'ராமாயணம்' கற்றுக்கொடுக்கிறது!" - 'ராமாயணா' படம் பற்றி யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. Ramayana Movieஇந்நிலையில், லாஸ் வேகா... மேலும் பார்க்க

"தாவூத் இப்ராகிமால்தான் நான் பிழைப்பு நடத்துகிறேன்" - இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது என்ன?

பிரபல பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மாபியாவை மையப்படுத்தி பல படங்களை இயக்கி இருக்கிறார். ராம்கோபால் வர்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர். தற்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள... மேலும் பார்க்க

Bhoot Bangla - அக்‌ஷய்குமாரின் கிழிந்த ஆடை; டிரெய்லர் விழா ட்ரெண்ட் ஆனது எப்படி?

மும்பையில் நடைபெற்ற `Bhoot Bangla' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னணி நட்சத்திரங்களான அக்‌ஷய்குமார், தபு, வாமிகா கபி, ராஜ்பால் யாதவ் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆ... மேலும் பார்க்க

``ஒரு நிமிடம் கூட கண் சிமிட்டவில்லை" - ரன்வீர் சிங் படத்தை பாராட்டி விராட் கோலி

துரந்தர் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த மாதம் அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.ஆதித்ய தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர்... மேலும் பார்க்க