செய்திகள் :

சாத்தான்குளம்: ``மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." - ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி

post image

கொ

ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் - ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கு இந்தியாவையே அதிரச் செய்தது. இந்த வழக்கில் 9 காவல்துறை அதிகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

சாத்தான்குளம் வழக்கு
சாத்தான்குளம் வழக்கு

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ``காவல்துறை அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதை விட மரணதண்டனை விதிப்பதே சிறப்பானது." எனக் குறிப்பிட்ட நீதிபதி, 9 குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர், ``எங்களைப் போல இன்னொருக் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது என நாங்கள் நினைத்தோம். அதற்காகதான் சட்டப்போராட்டத்தில் உறுதியாக இருந்தோம். எங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில்தான் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.

உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ்
உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ்

நீதிமன்றம் மட்டுமல்ல எல்லாத்துறையினரும் எங்களுக்கு ஒத்துழைத்தார்கள். மேல் முறையீடு சென்றாலும் அதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதிமன்றம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம். இந்த தீர்ப்பில் இனி இதுபோல எந்த சம்பவமும் நடைபெறக்கூடாது என நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு அப்படியே செயல்பட்டால் மகிழ்ச்சி. எங்களுக்கு மதுரை நீதிமன்றம் உறுதுணையாக இருந்ததற்கு நன்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க