DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்'- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவ...
சாய் பல்லவி எதிர்ப்பு முதல் ரஹ்மான் இசை வரை! - 'ராமாயணா' திரைப்படத்தைத் தொடரும் சர்ச்சைகள்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகயிருக்கும் 'ராமாயணா' திரைப்படம், ஆரம்பக்கட்ட அறிவிப்பிலிருந்தே இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தொடர்ச்சியான சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது.
முதலில், சீதையாக நடிக்க சாய் பல்லவி தேர்வானபோதே, வட இந்திய சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின.

புனிதமான ராமாயணக் காவியத்தில் சீதையின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு சாய் பல்லவி பொருத்தமானவரா என்றும், அவரது முந்தைய சில கருத்தியல் ரீதியான நேர்காணல் பேச்சுக்களைச் சுட்டிக்காட்டியும் சில அமைப்பினரும் நெட்டிசன்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னும் சொல்லப்போனால், சீதா சுருண்ட முடியை கொண்டவர் அல்ல என்றும் அவரின் தோற்றம் குறித்த குறிப்புகள் ராமாயணத்தில் உள்ளது எனவும், சாய் பல்லவி அதற்கு பொருத்தமானவர் அல்ல என்றும் கூட விமர்சனங்கள் வந்தது.
இதனிடையே, தற்போது படத்திலிருந்து வெளியாகியுள்ள 'மங்கல் ரங்' பாடல் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் அரிஜித் சிங் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள இந்தப் பாடல், ராமர் - சீதை திருமணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
புராணக் காவியமான ராமாயணத்தில் சீதா-ராம கல்யாணத்தை சித்தரிக்கும் பாடலுக்கு கவ்வாலி மற்றும் சூஃபி இசையின் சாயல் இருப்பது எந்த விதத்தில் பொருத்தமாக இருக்கும் என்றும், ரஹ்மானின் 'குன் ஃபயா குன்' பாடலின் குரல் அமைப்பை இது நினைவுபடுத்துவதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

தவிர ரஹ்மான் தன் பழைய தமிழ் பாடலின் ட்யூனை அப்படியே மறுபயன்பாடு செய்திருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அஜித் நடிப்பில் 2000-ல் வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற 'என்ன சொல்லப் போகிறாய்' பாடலின் கோரஸ் மற்றும் இசை அமைப்பையே 'மங்கல் ரங்' பாடலிலும் ரஹ்மான் பயன்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
நடிகர்கள் தேர்வு தொடங்கி இசை உருவாக்கம் வரை 'ராமாயணா' திரைப்படம் தொடர் சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.
எனினும் இது தென் இந்தியர்களை மட்டும் குறிவைத்து சிலர் நடத்தும் சமூக வலைதள தாக்குதல் என இந்த சர்ச்சைகளுக்கு எதிராக ஆதரவு குரல்களும் ஒலிக்கின்றன.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...



















