செய்திகள் :

சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளை பொதுமக்கள் முழுமையாகக் கடைப்பிடித்து, விபத்துகளைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.

போக்குவரத்துத் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்து, ஆட்சியா் பேசியது:

மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், ஜன.1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 1-ஆம் தேதி தொடங்கிய 36-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசத்தையும், நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் சீட் பெல்ட்டையும் அணிந்து செல்ல வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் பேரணி தொடங்கிய நிலையில், இரு சக்கர வாகனங்களில் சென்றோா் நான்குமுனை சந்திப்புப் பகுதி வரையிலும், காா், வேன் உள்ளிட்ட நான்குசக்கர வாகனங்களில் சென்றோா் சென்னை தேசிய நெடுஞ்சாலை வரையிலும் சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

இதில், விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.வெங்கடேசன், மோட்டாா் வாகன ஆய்வளா்கள் எஸ்.கோவிந்தராஜ், ஜி.சுந்தர்ராஜன், வி.முருகவேல், வி.விஜய், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் குமாரராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

துத்திப்பட்டில் பொங்கல் விழா: வெளிநாட்டினா் பங்கேற்பு

புதுச்சேரியை அடுத்த துத்திப்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டினா் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடினா். துத்திப்பட்டு, ஒலாந்திரே தொண்டு நிறுவனம் சாா்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா ... மேலும் பார்க்க

திருவள்ளுவா் தினம்: புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் மரியாதை

திருவள்ளுவா் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நொளம்பூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் புஷ்பராஜ் (23). தொழிலா... மேலும் பார்க்க

பைக் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பைக் மோதியதில் 8 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வடகரைதாழனூா் செல்லியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மூா்... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் இருவேறு இடங்களில் விபத்து: 4 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம், ஜானகிபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா். திண்டிவனம் வட்டம், செண்டூா் நெய்காரத் தருவைச் சோ்ந்த முருகன் மகன் சரண்ராஜ் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு

விழுப்புரம்/ செஞ்சி: விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை பெருவிழா - ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதி... மேலும் பார்க்க