செய்திகள் :

`சிதம்பரத்தில் போட்டியிடுங்கள் என்றேன்; ஸ்டாலின் அண்ணனோ...' - தமிமுன் அன்சாரி

post image

நடந்து முடிந்த தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது. குறிப்பாக ஸ்டார் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இது குறித்து தங்களின் வருத்தத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

``திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் எங்களுக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டது.

கடுமையான போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்றிருக்கிறோம். இன்று நானும் எனது கட்சியினரும் அண்ணன் ஸ்டாலினைச் சந்தித்தோம்.

எங்களை அவர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். `ஒரு சவால் மிக்கத் தொகுதியில் நல்ல வெற்றி' என்று சொன்னார்.

உங்களுடைய (ஸ்டாலின்) வெற்றி வாய்ப்பு இழந்த செய்தி எங்களை மிகவும் பாதிக்கிறது என்று அவரிடம் சொன்னேன்.

நீங்கள் சட்டமன்றத்தில் நிற்க வேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய விருப்பம். தமிழ்நாடு மக்களின் விருப்பமும் அதுதான்.

தேவைப்பட்டால் சிதம்பரம் தொகுதியில் நாங்கள் ராஜினாமா செய்கிறோம். நீங்கள் போட்டியிடுங்கள் என்று விருப்பத்தைத் தெரிவித்தோம்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

ஆனால் முதலமைச்சர் என் கையை அழுத்தமாகப் பிடித்து 'அந்த வார்த்தையை நீங்கள் சொல்லக் கூடாது. நீங்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும். சிறப்பாகச் செயல்பட வேண்டும்' என்று உரிமையுடன் சொன்னார்.

எங்களால் நாங்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாட முடியவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க