செய்திகள் :

``சினிமா துறையில் பாலியல் சுரண்டல் இல்லை; சொந்த தவறு.!" - சிரஞ்சீவி கருத்தால் சர்ச்சை

post image

சங்கராந்தி பண்டிகை வெளியீடாக தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'மன சங்கர வர பிரசாத் காரு' வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார்.

சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் சிறப்பு தோற்றத்தில் வெங்கடேஷ் இணைந்து நடித்த 'மன சங்கர வர பிரசாத் காரு' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது.

மன சங்கர வர பிரசாத் காரு
மன சங்கர வர பிரசாத் காரு

இந்நிலையில் 'மன சங்கர வர பிரசாத் காரு' படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிரஞ்சீவி சினிமாத்துறையில் " 'casting couch' ( வேலை வாய்ப்புக்காக பாலியல் சுரண்டல்) இல்லை" என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

இதுதொடர்பாகப் பேசிய அவர், "சினிமா ஒரு மிகச்சிறந்தத் துறை. இதில் யாருக்காவது எதிர்மறையான அல்லது கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால், அதற்கு அவர்களின் தனிப்பட்ட முடிவுகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.

நீங்கள் உங்கள் தொழிலில் தீவிரமாக இருந்தால், யாரும் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளப்போவதில்லை.

 சிரஞ்சீவி
சிரஞ்சீவி

சினிமாவில் 'casting couch' ( வேலை வாய்ப்புக்காக பாலியல் சுரண்டல்) இல்லை. இதுப்போன்ற கலாசாரம் இங்கு இல்லை.

யாருக்காவது ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டால் அது அவர்களுடைய சொந்த தவறுதான்.

இந்தத் துறை ஒரு கண்ணாடி போன்றது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதையே அந்தக் கண்ணாடியில் காண்பீர்கள்” என்று பேசியிருக்கிறார்.

சிரஞ்சீவியின் இந்தப் பேச்சுக்கு எதிராகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Chiranjeevi: "படம் பார்த்த அந்த ஜோடி விவாகரத்து முடிவை மாற்றியிருக்கிறார்!" - சிரஞ்சீவி

சிரஞ்சீவியின் 'மன ஷங்கர வர பிரசாத் காரு' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தில் நடிகர் வெங்கடேஷும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக... மேலும் பார்க்க

The Raja Saab Review: `இது சங்கராந்தி ஃபீஸ்ட் காதுரா!' - சோதிக்கும் பிரபாஸின் ஹாரர் காமெடி சினிமா!

தாய், தந்தை அரவணைப்பின்றி பாட்டியால் வளர்க்கப்படுகிறார் ராஜூ (பிரபாஸ்). பாட்டி கங்கம்மாவுக்கு (சரினா வாகப்) ராஜூ மட்டுமேதான் உலகம்.கங்கம்மா, நீண்ட வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கணவரின் பற்றிய நினைவ... மேலும் பார்க்க

புஷ்பா 2: கூட்ட நெரிசல் பலி: `அல்லு அர்ஜூனும் காரணம்' - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறை!

கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா:2 தி ரூல். திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதாவது 2024 டிசம்பர் 4 அன்று, ஹைதராபாத்தில் உள்ள RTC X சாலைகளில் உள்ள சந்தியா திரையரங்கில்... மேலும் பார்க்க