செய்திகள் :

``சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தடை செய்யப்பட்டவையா?" - கேள்வி எழுப்பும் அன்புமணி

post image

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, VAO-க்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ``திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியரிடம் 18.08.2026 மாலைக்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அறிக்கை அளிக்க தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டிருந்தார்.

வட்டாட்சியர் அய்யாசாமி
வட்டாட்சியர் அய்யாசாமி

இந்த உத்தரவு சமூக ஊடகங்களில் வெளியாகி, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களை எழுந்தது. இந்த நிலையில் வட்டாட்சியர் அய்யாசாமி அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி, ``சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தடை செய்யப்பட்டவையா? கட்சி உறுப்பினர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க ஆணையிட்ட வட்டாட்சியர் மீது நடவடிக்கை வேண்டும்!

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் குறித்த விவரங்களை சில மணி நேரங்களில் திரட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என்று குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் பொதுவுடைமை கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை குற்றவாளிகளைப் போல நினைத்து அவர்களின் விவரங்களை சேகரிக்க வட்டாட்சியர் ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்திய விடுதலைக்கு முன்பு சில கட்சிகள் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும், நெருக்கடி நிலை காலத்திலும் தான் ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் கட்சிகள் போராடுவதைத் தடுக்க அரசியல் கட்சியினரின் விவரங்களை கடைநிலை அதிகாரிகளைக் கொண்டு சேகரிப்பது வழக்கமாக இருந்தது. ஆங்கிலேயர்களும், அடக்குமுறையாளர்களும் பயன்படுத்திய அதே சட்டவிரோத வித்தையை ஒரு வட்டாட்சியரும் பயன்படுத்தியிருப்பது அதிகார அத்துமீறல் ஆகும், இதை சகித்துக் கொள்ள முடியாது.

தனிநபர் விவரங்களை சேகரிக்கும் அளவுக்கு பொதுவுடைமைக் கட்சியினர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட வட்டாட்சியரின் தன்னிச்சையான, மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நாளை நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. தமக்கு எதிராக பொதுவுடமை கட்சி போராட்டம் அறிவித்திருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இப்படி ஓர் அடக்குமுறையை வட்டாட்சியர் ஏவி விட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இதில் கொடுமை என்னவென்றால் இது தொடர்பாக குஜிலியம்பாறை வட்டாட்சியர் நேற்று நண்பகலில் வெளியிட்ட சுற்றறிக்கையின் நகல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், பழனி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டிருப்பதும், அதைப் பார்த்த பிறகும் குஜிலியம்பாறை வட்டாட்சியரின் அத்துமீறிய செயலை கண்டிக்கவோ, அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ அந்த உயரதிகாரிகள் முன்வரவில்லை என்பது தான். மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் அதிகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதைப் பறிக்கும் அதிகாரமோ, அதற்காக அச்சுறுத்தும் அதிகாரமோ வட்டாட்சியருக்கும் கிடையாது; மாநில அரசுக்கும் கிடையாது. இதையெல்லாம் மறந்து விட்டு, பொதுவுடமைக் கட்சியினரை மிரட்டும் செயலில் ஈடுபட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது தமிழக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்றார்.

முதல்வர் விஜய் உட்பட 14 முதல்வர்கள் மீது தீவிர குற்றவியல் வழக்குகள்; அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 14 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீது தீவிரமான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற உதவியாளருமான விஜய் ஹன்சாரியா... மேலும் பார்க்க

'பெரம்பூரில் ரூ.300 கோடியில் மருத்துவமனை; பால் கொள்முதல் விலை உயர்வு!' - முதல்வரின் அறிவிப்புகள்

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் கொடுத்த அறிவிப்புகள்CM Vijayதொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.38 லிருந்து ரூ.41 ரூபாயாக கொள்முதல் விலை உயர்வு. வ... மேலும் பார்க்க

`அம்பேத்கர் பெயரில் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திட்டம்; ஆனால்.!'- அரசுக்கு பா.ரஞ்சித் கோரிக்கை

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டி... மேலும் பார்க்க

TN Assembly: "அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கார் மற்றும் மாதந்தோறும் ரூ.75,000 வழங்கப்படும்.! - முதல்வர் விஜய் | Live

"அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும்" - முதல்வர் விஜய்தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வ... மேலும் பார்க்க

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: "தமிழக அரசு அதிகாரப்பூர்வ கண்டனம்கூட தெரிவிக்கவில்லை" - உதயநிதி

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்டு ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. அந்த வனப்பகுதிக்குள் தொலைந்த மாடுகளைத் தேடிச் சென்ற 4 தமிழர்கள... மேலும் பார்க்க