செய்திகள் :

'சிராக் பஸ்வானுடன் காதல்?' - கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

post image

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார்.

இப்போது நாடாளுமன்றத்திற்குச் சென்றதன் மூலம் கங்கனா ரனாவத்திற்கு நல்ல நண்பர் கிடைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. கங்கனா ரனாவத்தும், ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானும் இப்போது அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொள்கின்றனர். அவர்களின் நட்பைப் பார்த்து இருவரும் காதலிப்பதாக செய்திகள் வைரலாகப் பரவி இருக்கின்றன.

இது குறித்து சிராக் பஸ்வான் கருத்து சொல்லாத நிலையில் கங்கனா ரனாவத் இக்கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ''நான் அவரைக் காதலிக்கவில்லை. சிராக் ஒரு நண்பர், நான் அவரைப் பார்க்கும்போது, ​​​​நான் அவரை ஒரு நண்பராகத்தான் பார்க்கிறேன். எங்களுக்குள் ரொமான்ஸ் எதுவும் நடக்கவில்லை, நேர்மையாக இருக்கட்டும்.

அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் படத்தை எடுத்தார். அதன் மூலம்தான் எங்களுக்குள் ஒருவரையொருவர் அறிமுகம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டுகளில் அந்த நட்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நான் ரொமான்ஸ் செய்ய நினைத்திருந்தால் அது நடந்திருக்காது. அது நடக்காது. உங்களுக்குத் தெரியும். அவர் சினிமா துறையில் இருந்து வந்தவர். அதனால் நான் அவரை மிகவும் நன்றாக உணர்கிறேன்," என்று கங்கனா கூறினார்.

கங்கனாவும் சிராக் பாஸ்வானும் முதன்முதலில் 2011ம் ஆண்டு தன்வீர் கான் இயக்கிய மைலே நா மைலே ஹம் படத்தில் இணைந்து நடித்தனர்.

இப்படத்தின் மூலம் சிராக் பஸ்வான் சினிமாவில் அறிமுகமானார். கங்கனா இதில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு இருவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். எப்போதாவது இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துகொள்வதுண்டு.

இப்போது நாடாளுமன்றத்திற்கு இருவரும் செல்வதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

"அப்போது என் தந்தை மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார்; அவரின் மறைவுதான் எங்களை சேர்த்தது" - பாபி தியோல்

மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான பாபி தியோல், சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தந்தை தர்மேந்திராவின் மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறா... மேலும் பார்க்க

"தவறுகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை 'ராமாயணம்' கற்றுக்கொடுக்கிறது!" - 'ராமாயணா' படம் பற்றி யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. Ramayana Movieஇந்நிலையில், லாஸ் வேகா... மேலும் பார்க்க

"தாவூத் இப்ராகிமால்தான் நான் பிழைப்பு நடத்துகிறேன்" - இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது என்ன?

பிரபல பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மாபியாவை மையப்படுத்தி பல படங்களை இயக்கி இருக்கிறார். ராம்கோபால் வர்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர். தற்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள... மேலும் பார்க்க

Bhoot Bangla - அக்‌ஷய்குமாரின் கிழிந்த ஆடை; டிரெய்லர் விழா ட்ரெண்ட் ஆனது எப்படி?

மும்பையில் நடைபெற்ற `Bhoot Bangla' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னணி நட்சத்திரங்களான அக்‌ஷய்குமார், தபு, வாமிகா கபி, ராஜ்பால் யாதவ் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆ... மேலும் பார்க்க

``ஒரு நிமிடம் கூட கண் சிமிட்டவில்லை" - ரன்வீர் சிங் படத்தை பாராட்டி விராட் கோலி

துரந்தர் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த மாதம் அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.ஆதித்ய தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர்... மேலும் பார்க்க

`எங்கள் வீட்டில் அப்படி இல்லை... அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' - மனம் திறந்த அபிஷேக் பச்சன்

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து அடிக்கடி வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற வதந்தி அதிக அளவில் பரவியது. ஆன... மேலும் பார்க்க