செய்திகள் :

'சிறப்புக் குழந்தை'! எங்களுக்குப் பின் யாரு பாத்துப்பா? கேள்விக்கு பதில்| பணம் வளர்ப்போம்

post image

'நமக்குப் பின் யார்?' என்கிற கேள்வி, சிறப்புக் குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து பெற்றோர்களுக்குமே உண்டு.

அந்தக் குழந்தைகளுக்கான நிதி பாதுகாப்பு திட்டமிடலைப் பற்றி கூறுகிறார் நிதி ஆலோசகர் முனைவர் A.V செந்தில்.

"சிறப்புக் குழந்தைகளின் சின்ன வயதிலேயே 'அறக்கட்டளை (Trust)' ஒன்றை ஆரம்பித்துவிடுவது நல்லது.

இந்திய சட்டப்படி, அறக்கட்டளை ஆரம்பிக்க சிறப்பு வழிமுறைகள்... விதிமுறைகள் எல்லாம் பெரிதாக இல்லை.

வழக்கறிஞர் ஒருவரிடம் ஆலோசனை பெற்று, சட்டப்படி அறக்கட்டளை ஒன்று ஆரம்பிக்க வேண்டும்..

'சிறப்புக் குழந்தைக்காக' தான் அந்த அறக்கட்டளை என்பதை தெளிவுபடுத்துவது அவசியம்.

A.V செந்தில்
A.V செந்தில்

அந்த அறக்கட்டளையின் பெயரில் நிதி ஆலோசகரின் ஆலோசனை பெற்று முதலீட்டைத் தொடங்க வேண்டும்.

பெற்றோருக்குப் பின், அந்த அறக்கட்டளையின் முதலீடுகள் குழந்தைக்கு சரியாக செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னரே செய்துவிட வேண்டும்.

அறக்கட்டளையின் நாமினியாக இணையரை நியமியுங்கள். அவருக்குப் பின் நம்பகமான நபரை டிரஸ்டியாக நியமிக்க வேண்டும்.

சொல்வது புரிந்துகொள்ளக் கூடிய குழந்தையாக இருந்தால், குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, அறக்கட்டளைக் குறித்து குழந்தைகளிடம் சொல்லி வைப்பது நல்லது.

அறக்கட்டளையின் பெயரில் செய்யும் முதலீடுகள் அதிக ரிஸ்க் இல்லாமல் இருப்பது நல்லது. காரணம், டிரஸ்டியாக இருப்பவருக்கு எளிதாகவும், நம்முடைய குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் எளிதாக சென்று சேர்வது மாதிரியும் இருக்க வேண்டும்.

மேலும், ரிஸ்க் இல்லாமல் இருப்பது, அந்தக் குழந்தைக்கான முதலீட்டையும், பணத்தையும் உறுதி செய்யும்.

இதை விட முக்கியமாக, டிரஸ்டியாக மிக நம்பகமான நபரைத் தேர்ந்தெடுங்கள்".

₹25 லட்சம் கையில் இருக்கிறதா? மாதம் ₹10000 பெறலாம் + 25 வருடம் கழித்து ₹45 லட்சம்! எப்படி?

ஒருவரிடம் ₹25 லட்சம் மொத்தமாக (Lumpsum) கிடைத்தால், முதல் எண்ணம் என்னவாக இருக்கும்? "இதை எங்கும் விட்டுவிடக் கூடாது, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்" என்பதுதான். முதலீட்டு உலகில் இதை 'Loss Aversion' ... மேலும் பார்க்க

'என் மகன்/மகளுக்கு 18 வயசு; ஆனால்...' - கல்யாண செலவு நிதியைத் திட்டமிட வழிகாட்டி | பணம் வளர்ப்போம்

குழந்தைகளின் திருமணம் என்பது அனைத்து பெற்றோர்களின் ஆசை. 'அப்படி செய்யணும்... இப்படி செய்யணும்' என்று ஏகப்பட்ட கனவுகள் வேறு இருக்கும். ஆனால், பெரும்பாலான திருமணங்கள் கடன் வாங்கித்தான் செய்யப்படுகின்றன.... மேலும் பார்க்க

உங்க குழந்தைகளோட School, College Fees சமாளிக்க இது ஒரு 'சூப்பர்' வழி! | பணம் வளர்ப்போம்

குழந்தை பிறந்தாச்சு... இதன் பிறகு, பெற்றோர்களுக்கு இருக்கும் அடுத்த மிகப்பெரிய செலவு, 'கல்விக் கட்டணம்'. எந்தத் திட்டமிடலில் கவனமாக இருக்கிறோமோ... இல்லையோ... கல்வி நிதி திட்டமிடல் மிகத் தெளிவாக இருக்க... மேலும் பார்க்க

'G.P.F. மற்றும் 'போஸ்ட் ஆஃபீஸ்' வேலைக்கு ஆவாதா? 'இரண்டாவது PF' பெற என்ன செய்யணும்?

காலை 9:45 மணிக்கு அவசரமாக வண்டியைப் பார்க் செய்துவிட்டு, பயோமெட்ரிக்கில் விரல் வைத்துவிட்டு, கொண்டுவந்த டிபன் கேரியரை டேபிளுக்குக் கீழே வைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தால்... அடுத்த விநாடி ஆரம்பமாகிறது உ... மேலும் பார்க்க

'பெற்றொர்' அத்தியாயத்தை கடனாளியாக இல்லாமல் மகிழ்ச்சியாகத் தொடங்க 'பிளான்'! | பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இந... மேலும் பார்க்க

Labham - 3: EMI + SIP... வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கும் சூப்பர் ஃபார்முலா

35 வயதானாலே போதும், 'சொந்தமா இன்னும் வீடு வாங்கலையா...? கடனைக் கிடனை வாங்கி, மொதல்ல, ஒரு வீடு வாங்குப்பா...' என்று நெருக்குதலைத் தர இன்று பல வீடுகளில் 'பெரியவர்கள்' தயாராக இருக்கிறார்கள். இன்றுள்ள நில... மேலும் பார்க்க