செய்திகள் :

சிறப்புப் படை, 12 விமானங்கள், ஹெலிகாப்டர்கள்- ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்கா விமானியை மீட்டது எப்படி?

post image

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்க படைகள் F-15E மூலம் குண்டுகளை வீசியது. அப்போது ஈரான் வான் பாதுகாப்பு தடுப்பு ஏவுகணை மூலம் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் இருந்த இரண்டு பேரும் விமானத்தில் இருந்து வெளியில் குதித்து உயிரோடு தப்பித்தனர். அதில் ஒருவரை அமெரிக்கப் படை உடனே மீட்டுவிட்டது. மற்றொருவரைக் கடந்த இரண்டு நாள்களாக அமெரிக்கப் படைகள் சிறப்புப் படை மூலம் ஈரான் மலைப்பகுதியில் தேடி வந்தன.

அவரை மீட்க 12 சிறப்பு விமானங்களை அமெரிக்கப் படைகள் அனுப்பி வைத்தன.

ட்ரோன் மூலம் விமானி இருக்கும் இடத்தை அமெரிக்கப் படைகள் கண்டுபிடித்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட பைலட் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த மீட்புப் பணி அமெரிக்க வரலாற்றில் மிகவும் துணிச்சலான ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

பைலட்டை நூற்றுக்கணக்கானோர் ஈரானுக்குள் புகுந்து தேடி கண்டுபிடித்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட பைலட் தற்போது அங்கிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுவிட்டார். இரவில் தொடங்கி பகல் முழுவதும் இந்தத் தேடுதல் வேட்டை நடந்தது.

இதில் ஈரான் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தின. ஈரான் படைகள் சம்பவ இடத்தை நெருங்காமல் இருக்க அமெரிக்க விமானங்கள் ஈரான் படைகள் வரும் வழியில் தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசி அவர்களைத் தடுத்து நிறுத்தியது.

அமெரிக்கப் படைகள், HH-60W 'Jolly Green II' மீட்பு ஹெலிகாப்டர்கள், A-10 Warthog தாக்குதல் விமானங்கள், HC-130 வான்வழி எரிபொருள் நிரப்பும் மீட்பு விமானம், பாதுகாப்பான தொலைவிலிருந்து செயல்படும் F-35 மறைவுத் தாக்குதல் விமானங்கள், சிறப்புப் படைகள் மற்றும் ஒரு போர்சார் தேடல் மற்றும் மீட்புச் சிறப்புப் பிரிவு ஆகியவற்றை பயன்படுத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து ஈரான் வெளியிட்டுள்ள செய்தியில், ''பைலட் மீட்பு ஆபரேசனில் 5 பேர் கொல்லப்பட்டனர். இது தவிர ஒரு சி-130 ராணுவ விமானம், இரண்டு ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குவைத் வான் பரப்பில் ஏ-10 விமானம் ஒன்றை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தின.

ஈரானில் தப்பியது எப்படி?

ஈரானில் இரண்டு நாட்களுக்கு முன்பு F-15E விமானம் விழுந்தவுடன் அதில் இருந்த இரண்டு பைலட்களும் உயிரோடு தப்பினர். ஒருவர் உடனே மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவர் ஈரானில் சிக்கிக்கொண்டார். அவர் அங்கிருந்து எப்படித் தப்பினார் என்பது பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விமானத்தில் இருந்து கீழே குதித்தவுடன் சம்பந்தப்பட்ட பைலட் சம்பவ இடத்தில் இருந்து உடனே வேறு இடத்திற்கு குறிப்பாக மலைப்பகுதிக்குள் சென்றுவிட்டார்.

ஈரான் படைகள் ஒருபுறம் அவரைத் தேடிக்கொண்டிருந்தன. மற்றொரு புறம் அமெரிக்கப் படைகள் சிறப்பு விமானம், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தேட ஆரம்பித்தன. சிறப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் ஈரான் மலைப்பகுதியில் இறங்கி தேடினர்.

மற்றொரு புறம் ஈரான் படைகள் சம்பவ இடத்திற்கு நெருங்குவதைத் தடுக்க அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து வெடிகுண்டுகளைப் போட்டு தடங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.

மலைகளுக்குள் மறைந்து இருந்த அமெரிக்க பைலட் தான் கீழே விழுந்த உடன் எந்த இடத்தில் இருக்கிறேன் என்ற தகவலை அமெரிக்கப் படைகளுக்குத் தெரிவித்தார். அதனால்தான் அமெரிக்கப் படையால் குறிப்பிட்ட இடத்தில் தேட முடிந்தது. மீட்கப்பட்ட பைலட் உடனே சிகிச்சைக்காக துபாய் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்தன.

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாகப் பேரணி; பாஜக அமைச்சரை நடுரோட்டில் வறுத்தெடுத்த இளம் பெண்

சமீபத்தில் மக்களவையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.கவினர் மும்பையில் போராட்டம் நடத்தினர். மும்பையில் பா.ஜ.க அமைச்சர் கிரீஷ் மகாஜன்... மேலும் பார்க்க

பெங்களூரு: `வெயில் தாங்க முடியலை' - ஹோட்டலில் ஏ.சி அறை வாடகைக்கு எடுத்து வெப்பத்தை தணித்த பெண்

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. காலை 10 மணிக்கு மேல் மக்களால் வெளியில் வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழையும் குறைவாகவே இருக்கும்... மேலும் பார்க்க

தரையிறங்க முடியாமல் 4 மணி நேரம் வானில் பறந்த விமானம்; அச்சத்தில் அழுத பயணிகள்; என்ன நடந்தது?

ஹைதராபாத்தில் இருந்து ஹூப்ளிக்கு Fly91 Flight என்ற தனியார் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்தபோது ஹூப்ளி அருகில் சென்ற போது திடீரென விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனா... மேலும் பார்க்க

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது' - அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த போர் ஒன்றரை மாதத்திற்கு பிறகு தற்காலிகமாக முடிவுக்கு வந்து இருக்கிறது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் விரைவில் முடிய இருக்கிறது. ஈரானுடன் மீண்டும் எப்போது அமெ... மேலும் பார்க்க

தீபிகா படுகோனேவுக்கு இரண்டாவது குழந்தை; மகள் மூலம் கர்ப்பத்தை அறிவித்த தம்பதி

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த 2024ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை பிறந்த பிறகு தீபிகா படுகோனே படங்களில் நடிக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். அ... மேலும் பார்க்க