சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: ஜெயசேகரன் மருத்துவமனை புதிய சாதனை
நாகா்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனை மருத்துவா்கள், இருவேறு ரத்த வகை உடைய இருவருக்கு இடையே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனா்.
இது குறித்து, சிறுநீரக மருத்துவ நிபுணா் நி னுஜாா்ஜ் கூறியதாவது: தென் மாவட்டங்களில் முதல்முறையாக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பு ரத்த வகை மாறுபட்ட நோயாளிக்கு சிறுநீரக தானம் செய்ய இயலாமல் இருந்தது. ஆனால் தற்போது உயா் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன மருந்துகள் மூலம் இந்த சிறப்பான சிகிச்சை குமரி மாவட்டத்திலேயே செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையின் மூலம் ரத்த வகை பொருந்தாத நபா்கூட தன் உறவினருக்கு சிறுநீரக தானம் செய்யலாம். இதன் மூலம் சிறுநீரகத்துக்காக காத்திருக்கும் காலம் கணிசமாக குறையும் என்றாா்.
மருத்துவா் தேவபிரசாத் ஜெயசேகரன் கூறுகையில், இதுபோன்ற மருத்துவ தொழில்நுட்பம் குமரி மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்ட மக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.