செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஆற்காடு இளைஞனுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

post image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 15-12-2019 அன்று 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டார். இது சம்பந்தமாகப் பதியப்பட்ட போக்சோ வழக்கில் சிலம்பரசன் என்பவன் கைது செய்யப்பட்டான்.

இவ்வழக்கின் விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சில நாள்களில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த சிலம்பரசன் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்தான்.

பாலியல் குற்றவாளி சிலம்பரசன்
பாலியல் குற்றவாளி சிலம்பரசன்

போலீஸார் தீவிரமாகத் தேடிய நிலையில், 2023-ம் ஆண்டில்தான் பிடிபட்டான் சிலம்பரசன். இதையடுத்து, மீண்டும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாலியல் குற்றவாளியான சிலம்பரசனுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.30,000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி தேன்மொழி. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டான் சிலம்பரசன்.

இந்தப் போக்சோ வழக்கில் சிறப்பாகப் புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுதந்த போலீஸாரை ராணிப்பேட்டை எஸ்.பி. சிபின் பாராட்டினார்.

சர்ச் நிர்வாகம் யாருக்கு? ஆர்த்தடாக்ஸ் - யாக்கோபாய பாதிரியார்கள் மோதல்; 22 பேர் மீது வழக்கு

கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் பிரிவினருக்கும், யாக்கோபாய பிரிவினருக்கும் இடையே சில சர்ச்களை நிர்வகிப்பது சம்பந்தமாக வழக்கு நடைபெற்று வருகிறது. சில சர்சுகள் சம்பந்தமாக கோர்ட்... மேலும் பார்க்க

கும்பகோணம்: காரில் ஆயுதங்கள் வைத்திருந்த விவகாரம்; பாஜக நிர்வாகியைக் கைதுசெய்த போலீஸ்!

கும்பகோணம், சத்யம் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வேதா என்கிற வேதச்செல்வம் (52). இவர் பாஜக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொதுச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையி... மேலும் பார்க்க

'கொள்ளிடம் பாலத்தில் எல்லை மீறும் ஜோடிகள்; முகம் சுளிக்கும் மக்கள்!' - தகாத செயல்களை தடுக்க கோரிக்கை

திருச்சி புறநகரையும், மாநகரையும் இணைக்கும் பாலமாக நேப்பியர் பாலம் போன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம், கடந்த 2016 -ம் ஆண்டு 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறைந்த ஜெயலலித... மேலும் பார்க்க

மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை; யாருக்கும் தெரியாமல் எரித்த வனத்துறையினர் - அதிர்ச்சி பின்னணி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச் சரகம், அத்தாணி பிரிவு, மாதையன் கோயில் காப்புக்காடு பகுதியில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதன் உடல் முழுமையாக அழுகி ச... மேலும் பார்க்க

ஜாமீன் கிடைக்க ஐகோர்ட் நீதிபதிக்கு பில்லிசூனியம்; சுடுகாட்டில் நீதிபதி படத்திற்கு பூஜை; 4 பேர் கைது

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பில்லிசூனியத்திற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் எதாவது காரியம் நடக்க வேண்டும் என்றால் அல்லது தனக்கு வேண்டப்படாத நபருக்கு பில்லிசூனியம் வைக... மேலும் பார்க்க

பரமக்குடி: சவடு மண் வியாபாரியிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம்; வருவாய் கோட்டாட்சியர் சிக்கியது எப்படி?

பரமக்குடி அருகே உள்ள செல்லூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பரமக்குடி பகுதியில் சவடு மண் விற்பனை செய்து வருகிறார். இதற்கான அனுமதியினை மாதம் தோறும் பரமக்குடியில் உள்ள வருவாய் கோட்டாட்சியரிடம் பெற வேண்டு... மேலும் பார்க்க