செய்திகள் :

”சிறையில் பூத்த புதிய பாதை” - வழி தவறிய குழந்தைகளுக்கு வழி காட்டும் தஞ்சை மாவட்ட ஆட்சியர்

post image

பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் புதிய பாதை அமைத்து தரும் பெரும் முன்னெடுப்பை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கிறார்.

தடைப்பட்ட அவர்களின் கல்விக்கு உயிர் கொடுத்து, தேவையான உதவிகளைச் செய்து ஒளி ஏற்றியிருக்கிறார். கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியே சென்ற குழந்தைகளுக்கு மீண்டும் ஒரு சிறைவாசம் ஏற்படாமல் பாதுகாத்து புதிய பாதை திட்டத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு வழிகாட்டும் மாவட்ட ஆட்சியர் ரேவதியின் செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி

இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ''ஏதோ ஒரு சூழலால் உணர்ச்சிவசப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுப்பட்டு விடுகின்றனர். 18 வயதுக்கு உட்பட்ட அவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுகின்றனர்.

குற்றம் செய்து விட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு வரும் எத்தனையோ குழந்தைகள் அதன் பிறகு செய்த தவறை உணர்ந்து வருந்துகின்றனர். எங்களோட லைப்பே போச்சு, இனி படிக்க முடியாது, அப்பா, அம்மா மூஞ்சில முழிக்க முடியாது என்றெல்லாம் உடைந்து கலங்குவார்கள்.

இப்படியான சூழலில் அவர்களுக்கு பெயில் கிடைச்சி வெளியே சென்று விடுவர். பின்னர் அவர்கள் வாழ்க்கையில் பலவேறு கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். இந்நிலையில், அடிதடி வழக்கில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த ஒரு மாணவர், பெயில் கிடைச்சி வெளியே சென்ற பிறகு மீண்டும் படிக்க ஆசைப்பட்டுள்ளார்.

குற்றத்தில் ஈடுப்பட்டவர் என்பதை காரணம் காட்டி அவருக்கான கதவுகள் அடைக்கப்படுகின்றன. இது மாவட்ட ஆட்சியர் ரேவதி கவனத்துக்குச் செல்ல உடனே அந்த மாணவரிடம் பேசி, இதற்கு முன்பு படித்த விவரங்களைக் கேட்டுள்ளார். அப்போது, அந்த மாணவர் ஐடிஐ படிச்சேன் டிஸ்கன்டினியூ செய்து விட்டனர் என்றுள்ளார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த மாணவனை மீண்டும் அவர் படித்த அதே ஐடிஐ-யில் சேர்த்து விட்டதுடன் படிப்புக்கான உதவிகளையும் செய்து கொடுத்தார்.

மாவட்ட ஆட்சியர் ரேவதி
மாவட்ட ஆட்சியர் ரேவதி

இதுபோல் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியே சென்ற அனைவருக்கும் நல்வழி அமைச்சி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்சியர் செயல்படுத்தியதே புதிய பாதை திட்டம். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் அதிகாரிகளை ஒருங்கிணைத்து இதனைச் செயல்படுத்தி வருகிறார்.

இதன் மூலம் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து கடந்த ஆறு மாதத்திற்குள் பெயிலில் வெளியே சென்றவர்கள் குறித்த டேட்டா போலீஸார் உதவியுடன் எடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், குடும்பப் பின்னணி குறித்தெல்லாம் அறிந்து கொண்டோம். மொத்தம் 74 குழந்தைகள் குறித்த விபரம் பெறப்பட்டது. இதில் 41 குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் வர வச்சி பேசினோம்.

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சென்றவர்கள் செய்த தவறால் கல்வி இடை நீக்கம் செய்யப்பட்ட பலரும் மீண்டும் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தனர். என்ன படிக்கிறீர்கள் என்றதற்குப் பலரும் ஐடிஐ படிப்பதாகச் சொன்னார்கள். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் முயற்சியில் முதல் கட்டமாக 20 பேர் ஐடிஐ-யில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான தேவையான பீஸ் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டுள்ளது. வழிப்பறியில் ஈடுப்பட்டு தண்டனைக்குள்ளான ஒரு மாணவன், ஏதோ ஒரு சூழலில் குற்றத்தைச் செஞ்சி என்னோட வாழ்க்கையை நானே குழி தோண்டி புதைச்சிட்டேன்.

எல்லாம் முடிஞ்சி போச்சி, இனி எந்த நல்லதும் நடக்காதுனு தெனம் கண்ணீர் வடிச்சேன். மீண்டும் நான் படிக்க போறதுக்கு மாவட்ட ஆட்சியர் காரணம் என உருக்கமா சொன்னான்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி

இன்னொரு மாணவனோட டிசி உள்ளிட்ட சான்றிதழ் எல்லாம் எரிஞ்சி போச்சி. கல்லூரி படிக்க ஆசைப்பட்ட அவனுக்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தார். அவனோட, அம்மா என் புள்ளைக்கு மறுவாழ்வு கொடுத்துட்டீங்னு தழு தழுத்தார்.

கூர்நோக்கத்தில் இருந்து சென்றவர்களுக்கு மீண்டும் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் எளிதாக அமையும். அந்தக் குழந்தையைக் கவனித்து காக்கவில்லை என்றால் வாழ்க்கையே கேள்வி குறியாகிடும். அப்படி நடக்காமல் தடுத்து நல்வழிப்படுத்தவே புதிய பாதை திட்டம்.

மூணு வருஷம் படிச்சிட்டு வெளியே போகும் போது நல்ல வேலைக்குப் போயிட்டா அவனோட வாழ்க்கை வெற்றிப்பயணமா மாறிடும் என கூறும் மாவட்ட ஆட்சியர் இதற்காக துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களையும் முடுக்கி விட்டுள்ளார்.

குற்றவாளிகளாகப் பார்க்காமல் குழந்தையாகப் பார்க்க வேண்டும், மீண்டும் அவர்களுக்கு சிறைக்கதவு திறந்துடக்கூடாது, வழி தவறிய அந்தக் குழந்தைகளுக்கு மாற்றத்தை உண்டாக்கி புதிய பாதை அமைச்சி கொடுத்து தாய் இடத்தில் இருந்து தலையெழுத்தை மாத்தணும் இதுவே நமக்கான பெருமிதம் என்கிறார் மாவட்ட ஆட்சியர்.

Nepal: ``ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் நிலை தெரியவில்லை..!” - கலங்கும் தெருவாசிகள்!

கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கடந்த 23-ம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம்; கேரளப் பெண்ணுக்குத் தாலி கட்டிய பிரிட்டன் குடிமகன்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிறவம் பாம்பாக்குடா குன்னத்தோத் பகுதியைச் சேர்ந்த கே.என். சந்திரன் - ராஜம்மா தம்பதியரின் ஒரே மகள் நிதின் சந்த். பி.டெக் படிப்பை முடித்த பிறகு 2008-ம் ஆண்டு உயர்கல்விக்... மேலும் பார்க்க

'மலையைப் பார்த்தாலே ஒரு விதமான ஈர்ப்பு வரும்'- கிளிமஞ்சாரோ, எல்ப்ரூஸ் மலையேறிய பெண்ணின் பயண அனுபவம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் பிறந்து வளர்ந்தவர் மௌலீஸ்வரி. படிப்பு, வேலை, குடும்பம் என வழக்கமான வாழ்க்கைப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு, ஒரு கட்டத்தில் மலைகள் மீது தனி ஈர்ப்... மேலும் பார்க்க