மதுரை LIC கிளை தீ விபத்தில் அதிர்ச்சி திருப்பம் - நேர்மையான பெண் மேலாளரை எரித்து...
'சில நிமிடங்கள் தான்' சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆர்.என்.ரவி| சட்டமன்றக் கூட்டத்தொடர் LIVE
ஆளுநர் வெளியேறினார்
தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
கூட்டத்தொடர் தொடங்கியது!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்திருக்கின்றனர்.
இன்று தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது.
ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில், இதுவரை ஒரு ஆண்டு கூட, அவர் ஆளுநர் உரையை முழுமையாகப் படித்ததில்லை.
இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இன்று ஆர்.என்.ரவி என்ன செய்யப்போகிறார் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

















