செய்திகள் :

``சிவனே-ன்னு ஏறினேன்; எவ்வளவு கீழ்த்தரமான பேச்சு" - திருவண்ணாமலை சம்பவ‌ம் குறித்து பிக்பாஸ் அர்ச்சனா

post image

'திருவண்ணாமலை மலை உச்சியில் ரீல்ஸ் எடுத்த பிக்பாஸ் அர்ச்சனா மற்றும் அவரின் காதலரிடம் விசாரணை, அபராதம்' என்ற செய்தி, இரு தினங்களுக்கு முன் வெளியானதைப் பார்த்திருபபீர்கள். பதிவிட்ட வீடியோவை பிறகு டெலீட்டும் செய்திருந்தார் அவர்.

திருவண்ணாமலையில் என்ன நடந்தது? அவரிடமே பேசினோம்.

ப்ளான் பண்ணினது இல்ல!

''ஆறு வருஷத்துக்கு முன்னாடி ஒரு தடவை திருவண்ணாமலை போயிருந்தேன். அப்ப, `நல்லா சம்பாதிச்ச பிறகு ஒரு தடவை இங்க வரணும்'னு மனசுல நினைச்சேன்.

'நினைச்சாலே முக்தி தரும்'னு நம்பப்படுகிற தலமான அந்த ஊருக்கு போகணும்னு சில தினங்களுக்கு முன்னாடி திடீர்னுதான் தோணுச்சு.

முழுக்க முழுக்க ஆன்மிக மனநிலையோடதான் கிளம்பினேன். ஆன்மிக ட்ரிப்தான்னாலும் ட்ரெக்கிங் அனுபவமுள்ள அருணும் சேர்ந்து போகலாம்னு சொல்லவே, நாங்க கிளம்பினோம். பாரதி கண்ணம்மாவில் நடிச்ச அருணுக்கும் எனக்கும் ஊர் அறிய நிச்சயதார்த்தம் நடந்தது உங்களுக்கெல்லாம் தெரியும்.

இந்த இடத்துல ஒரு விஷயத்தை அழுத்தமா சொல்ல விரும்பறேன். ஸ்பிரிச்சுவல் ட்ரிப்பாதான் கிளம்பினோமே தவிர, 'ட்ரெக்கிங்'ங்கிற எந்த முன் திட்டமிடலும் இல்லை.

thiruvannamalai temple

'சிவனே'ன்னு ஏறினேன்..

ஓரிரு நாளாச்சும் அங்கயே தங்கணும்கிற திட்டம் இருந்தது. முதல் நாள் ரமணாஷ்ரமம் விசிட்.

மறுநாள் கந்தாஸ்ரமம் போனோம்.

அமைதியான அந்த சூழல்ல சில மணி நேரங்கள் தியானம் பண்ணிட்டு திரும்பினப்பதான் வழியில சில வெளிநாட்டினர், சில உள்ளூர்காரர்கள் உட்பட நிறையப் பேர் அந்த வழியா மலைப் பாதையிலேயே போயிட்டிருந்தாங்க‌.

அந்தக் கூட்டத்துல ஒருத்தர்கிட்டக் கேட்டப்பதான், 'தீபம் ஏத்தற மலை உச்சிக்குப் போறாங்க, அங்க சிவன் பாதம் பார்க்கலாம்'னெல்லாம் சொன்னாங்க.

உடனேதான் எங்களுக்கும் ஆர்வம் வந்து மலை ஏறினோம்.

வழியில எந்த இடத்துலயும் 'இது தடை செய்யப்பட்ட பகுதி'ங்கிற எந்தவொரு அறிவிப்பையும் நாங்க பார்க்கலை. அப்படி பார்த்திருந்தா நாங்க ஏன் போகப் போறோம்?

அருண்
அருண்

பேசாத பேச்செல்லாம்..

நான் இஞ்சினியரிங் படிச்ச பொண்ணு. அப்பா பேராசிரியர். சட்டத்தை மதிச்சு நடக்கணுங்கிறது கூடவா தெரியாம இருப்பேன்?

வெளிநாட்டுக்காரங்க சிலர்லாம் ஷூ காலுடன் ஏறிட்டிருக்க, வெறும் பாதத்துடன் 'சிவனே'னு சொல்லியபடியேதான் மலை ஏறினேன்.

மனசுக்கு நிறைவான கிரி தரிசனம். அதனால அங்க எடுத்த சில வீடியோக்களை என்னுடைய சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்தேன்.

அங்கதான் பிரச்னை தொடங்கியிருக்குன்னு நினைக்கிறேன்.

கன்னா பின்னானு சில கமென்ட்டுகள். சாமி கும்பிடப் போன எங்களை அவ்வளவு ஹர்ட் பண்ணுற மாதிரி சில கமென்ட்டுகள்.

'ரீல்ஸ் எடுக்கணுனே போயிருக்காங்க', 'கல்யாணத்துக்கு முன்னாடி தனியா ரெண்டு பேரும் ஏன் போனாங்க தெரியுமா'ன்னெல்லாம் எவ்வளவு கீழ்த்தரமா பேச முடியுமோ அவ்வளவு இறங்கிப் பேசியிருந்தாங்க சிலர். சில கமென்ட்டுகள் 'அங்க போறதுக்கு அனுமதியில்லையே, எப்படிப் போனாங்க'ன்னும் இருந்தது.

அந்த மாதிரியான கமென்ட்டுகளைப் பார்த்த பிறகுதான், 'விஷயம் சீரியஸானதா இருக்கும் போல'னு தோணுச்சு.

உடனே வனத்துறையை நாங்களே தொடர்பு கொண்டோம். நேரில் வரச் சொன்னாங்க. போனோம்.

எங்ககிட்ட பேசிய அதிகாரிகள், 'ட்ரெக்கிங் போறதால மண் அரிப்பு உண்டாகி மழை நேரங்களில் பாறைகள் உருண்டு விழுகிற சம்பவங்கள் நடக்குது'னும், அதனால மலை உச்சிக்குச் செல்ல அனுமதி இல்லை'னும் சொன்னாங்க.

thiruvannamalai jothi

அனைத்தும் அவன் அறிவான்

நான் ஆன்மிக டிரிப்பாக மட்டுமே வந்ததைச் சொன்னதும், அதை ஏத்துக்கிட்டாலும், 'நீங்க செலிப்ரிட்டியா இருக்கீங்க, உங்களுக்கு இதுல எக்ஸ்க்யூஸ் கொடுத்தா, வெளியில வேற மாதிரி ரியாக்ட் ஆகும்'னு சொன்னாங்க. நாங்களுமே சலுகையை எதிர்பார்க்காததால் அபராதமா விதிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாயை (ஆளுக்கு ஐயாயிரம்) செலுத்திட்டு கிளம்பிட்டோம்.

நடந்தது இதுதான். ஆனா அங்க லோக்கல்ல சில மீடியாக்காரங்க வனத்துறையினர்கூட அவங்களுக்கு என்ன பிரச்னையோ தெரியல, இந்தச் செய்தியைப் பெரிசா பரப்பிட, செய்திச் சேனல்லாம் கூட, நாங்க திட்டமிட்டு பண்ணின மாதிரி நியூஸ் போட்டாங்க.

வேணும்னே சில இடங்களில் சில வேண்டாத வேலைகளை பண்ணுகிற செலிபிரிட்டிகளும் நம்ம ஊர்ல இருக்கலாம். அந்த லிஸ்டில் என் பெயரும் சேர்ந்துட்ட மாதிரி ஒரு தோற்றத்தை உண்டாக்கிட்டாங்களேனுதான் எனக்கு வருத்தமா இருக்கு.

இந்த மன உளைச்சலால் கோவிலுக்குள் போய் சாமி கும்பிடாமலே திரும்பிட்டேன். ஆனாலும் சிவனுக்கு எல்லாம் தெரியும்கிறதால், இந்த விஷயத்தை மறந்துட்டு அடுத்த வேலையைப் பார்க்காலம்னு நினைக்கிறேன்" என்கிறார்.

Tamil Nadu State Awards: "வருங்காலங்களில் இப்படி நடக்காம பார்த்துக்கணும்"- சின்னத்திரையினர் கோரிக்கை

2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஒளிபரப்பான சீரியல்களுக்கான தமிழ்நாடு அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இவற்றில் நடிகர்கள் ராஜேஷ், மாரிமுத்து, பாலா சிங், இயக்குநர்கள் ... மேலும் பார்க்க

போலீஸ் புகாருக்குப் பிறகும் தொடர்ந்த ஆபாச மெசேஜ்கள்; தொந்தரவு செய்தவரை தேடிப் பிடித்த சீரியல் நடிகை!

அழகு, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை அஸ்வினி. சில குறும்படங்களும் இயக்கியிருக்கிறார். இவர் தனக்கு இன்ஸ்டாகிராமில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை, நேரில் சென்று கையும் களவுமாகப... மேலும் பார்க்க

Neeya Naana: "குழந்தைகள் அதைப் பார்த்துட்டு டாக்டர் ஆகணும்னு சொல்றாங்க!" - நெகிழும் டாக்டர் குமரேசன்

'தர்மதுரை டாக்டர்ஸ் & பொதுமக்கள்' என்கிற தலைப்பில் கடந்த வாரம் 'நீயா நானா' நிகழ்ச்சி நடந்திருந்தது. இந்த எபிசோடில் பேசிய மருத்துவர் குமரேசனின் காணொளி, இப்போது சமூக வலைதளப் பக்கங்களில் பெரும் வைரலா... மேலும் பார்க்க