செய்திகள் :

சீர்காழி: த.வெ.க கொடி கலருக்கு மாறிய போலீஸ் நிழற்குடை - எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்!

post image

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே போலீஸ் நிழற்குடை இருந்தது. போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் டிராபிக் போலீஸார் பயன்படுத்துவதற்காக இந்த நிழற்குடை அமைக்கப்பட்டது. நிழற்குடையில் இருந்தபடி போலீஸார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் ஒழுங்கு செய்யும் பணியினை மேற்கொள்வார்கள். அந்த நிழற்குடையை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. நகைக்கடை உரிமையாளர் ஒருவர் இதை புதுப்பிப்பதற்கான ஸ்பான்சர் செய்ததுடன் நகை கடை பெயரையும் நிழற்குடையில் எழுதி விளம்பரம் செய்யப்பட்டது.

தவெக கலருக்கு மாறிய போலீஸ் நிழற்குடை

காவல் நிலையம், காவல் நிழற்குடை உள்ளிட்டவற்றுக்கு வழக்கமான கலர் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சீர்காழியில் நிழற்குடைக்கு தவெக கட்சியின் நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டது. இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீஸ் நிழற்குடைக்கு ஆளுங்கட்சியான தவெக கட்சிக் கொடியின் நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டது குறித்து விமர்சனம் செய்தனர். முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இது குறித்து விமர்சித்து பதிவிட சர்ச்சையானது.

இந்நிலையில், தவெக கட்சி கலர் கொடி பயன்படுத்தி பெயின்ட் அடித்து புதுப்பிக்கப்பட்ட அந்த நிழற்குடை உடனடியாக அகற்றப்பட்டது. தற்போது நிழற்குடை இருந்த இடம் காலியாக உள்ளது. பொதுவாக எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சி நிர்வாகிகள் தங்கள் தலைமையின் கவனத்தைப் பெறுவதற்காக வித்தியாசமாக எதாவது செய்வார்கள்... சமயத்தில் அது சிக்கலில்கூட முடியும்.

அந்த வகையில் போலீஸார் ஆளுங்கட்சியை திருப்திபடுத்துவதற்காக கட்சி கலரை போலீஸ் நிழற்குடைக்கு அடிக்க வைத்துள்ளனர். போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்துடன் இது செயல்படுத்தப்பட்டதா கீழ் நிலையில் உள்ளவர்கள் தன்னிச்சையாகச் செய்தார்களா என்று தெரியவில்லை என்கிறார்கள். பெயின்டர் பல கலர்கள் கொண்டு வந்த நிலையிலும் தவெக கலரை அடியுங்கள் என சில போலீஸார் சொன்னதாகச் சொல்கிறார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி பகுதியில் தெரிவிக்கின்றனர்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க