செய்திகள் :

சீறிப்பாய்ந்த குதிரைகள்; அசரவைத்த போட்டியாளர்கள் - ஈரோட்டில் கவனம் ஈர்த்த குதிரையேற்றப் போட்டி!

post image

ஈரோடு, திண்டலில் உள்ள ஹார்ஸ் ரைடிங் கிளப்பில் ஆகஸ்ட் 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் அகில இந்திய அளவிலான குதிரையேற்றப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஈரோட்டில் முதன்முறையாக நடைபெற்ற இப்போட்டியில், ஊட்டி, மும்பை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குதிரைகள் அழைத்து வரப்பட்டன. மேலும், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்று போட்டியைச் சிறப்பித்தனர்.

இப்போட்டியின் சிறப்பம்சமாக, 7 வயது முதல் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறு வயதிலேயே குதிரையேற்றப் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள், பல்வேறு பிரிவுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இந்தப் போட்டிக்காக சுமார் 3 மாதங்களாகக் கடுமையான பயிற்சி மேற்கொண்டதாக போட்டியாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, Endurance மற்றும் Dressage போட்டிகளில் பங்கேற்றது தங்களுக்கு புதிய அனுபவத்தை அளித்ததாகவும், குதிரைகளுடன் நல்ல emotional bonding ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர். மேலும், திறந்தவெளியில் குதிரையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்தப் போட்டியின் மூலம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

“இந்தப் போட்டி எங்களுக்கு ஒரு நல்ல மற்றும் புதிய அனுபவத்தை வழங்கியுள்ளது. குதிரையுடன் இணைந்து செயல்படுவது, அதை கட்டுப்படுத்துவது என பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த அகில இந்தியக் குதிரையேற்றப் போட்டி பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் Show Jumping, Dressage, Barrel Racing, Pole Bending உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்தகட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

குதிரையேற்றத்தில் Dressage, Show Jumping, Eventing ஆகியவை ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் முக்கியப் பிரிவுகளாகும். Dressage போட்டியில் குதிரையின் கட்டுப்பாடு, இயக்கம் மற்றும் வீரரின் துல்லியம் ஆகியவை முக்கியமாகக் கருதப்பட்டன. Show Jumping போட்டியில் பல்வேறு உயரங்களில் அமைக்கப்பட்ட தடைகளை, குறிப்பிட்ட நேரத்திற்குள் குதிரையுடன் இணைந்து தாண்ட வேண்டியிருந்தது. தடைகளைத் தட்டாமல் அல்லது தொடாமல் தாண்டுவது போட்டியின் முக்கிய அம்சமாக இருந்தது.

இப்போட்டியில் இந்தியாவின் மகாராஷ்டிரா, தெலங்கானா, புனே, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஈரான், அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டியின் ஒரு பகுதியாக 40 முதல் 60 சென்டிமீட்டர் மற்றும் 80 முதல் 90 சென்டிமீட்டர் உயரம் கொண்ட தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. வீரர்கள் குதிரைகளுடன் இணைந்து, எந்தத் தடையையும் தட்டாமல் அல்லது தொடாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் தடைகளைத் தாண்டினர்.

குதிரைகளின் வேகம், வீரர்களின் திறமை, கட்டுப்பாடு மற்றும் துல்லியம் என பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

"`நரேந்திர' என்ற பெயர் பிடிக்கலை..!" - குத்துச்சண்டை வீரர் பகிர்ந்த சம்பவம்; உரக்கச் சிரித்த மோடி

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது தனக்கு நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்... மேலும் பார்க்க

ஈரோட்டில் குதிரையேற்றபோட்டி - சாகசம் செய்த வீரர்கள்

ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ... மேலும் பார்க்க

ஜார்ஜியாவில் தங்க வேட்டை – சாதனை புரிந்த திண்டுக்கல் மாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்பு!

மாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரே... மேலும் பார்க்க

GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் 2026; 50,000 டாலர் பரிசு வென்ற பிரக்ஞானந்தா

இந்திய சதுரங்க ஆட்டக்காரர் ஆர்.பிரக்ஞானந்தா GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் (Blitz) 2026 சதுரங்கப் போட்டியில் 35 - 23 என்ற புள்ளிகளை பெற்று இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜவோகிர் சிந்தரோவை வீழ்த... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் கவனம் பெறும் பிக்கிள்பால்... கோலாகலமாகத் தொடங்கியது TNPPL சீசன் 2!

தமிழ்நாட்டில் பிக்கிள்பால் (Pickleball) விளையாட்டைத் தொழில்முறை அளவில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், 'Cavin's Tamil Nadu Pickleball Premier League (TNPPL) – Season 2'-ன் தொடக்க விழா... மேலும் பார்க்க

காமன்வெல்த் போட்டி முடிந்ததும் மாயமான பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்; கிளாஸ்கோவில் என்ன நடந்தது?

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி (Commonwealth Games 2026) நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் குத்துச்சண்டை அணியைச் சேர்ந்த வீரர் குத்ரத்துல்லா (Qudratullah) திடீரென மாயமான சம்பவம் சர்வதேச விளையாட்டு வட்ட... மேலும் பார்க்க