செய்திகள் :

சுசீந்திரம்: "ஆலயத்தையும், பக்தர்களையும் அவமானப்படுத்திவிட்டார்" - சேகர் பாபு மீது காட்டமான பொன்னார்

post image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தில் பக்தர்கள் கோஷம் எழுப்பியதும், அதற்கு அருவருப்பான வகையில் அமைச்சர் சேகர் பாபு பேசியதும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலய தேரோட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க-வின் இரண்டு அமைச்சர்களின் அருவருப்பான செயல்பாடு அந்த புனித தேரோட்டத்தின் பெருமைக்கு இழுக்கு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் இதுவரை நிகழ்ந்திராத ஒரு அவமானமாக அமைந்துள்ளது.

சுசீந்திரம் தேரோட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர்கள் இந்த தேரோட்டத்தில்  கலந்து கொள்ள வேண்டும் என்று எவரும் எதிர்பார்க்கவே இல்லை. இத்தேரோட்டம் முழுக்க முழுக்க பக்தர்களின் பங்களிப்போடு அவர்களின் கஷ்ட நஷ்டங்களை தீர்ப்பதற்காக பன்னெடுங்காலமாக நடந்து வரும் புனித நிகழ்ச்சியாகும். அதில் ஒரு சிறு பிரச்னை ஏற்பட்டபோது அதை கையாளத்தெரியாமல் அமைச்சர் சேகர் பாபு பயன்படுத்திய வார்த்தைகள், திருத்தேரின் வடத்தை பிடிக்க அவர் அருகதை அற்றவர் என்பதை பறைசாற்றும்விதமாக அமைந்துள்ளது.

இத்தேரோட்டத்தில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, 'நீ சோற்றை சாபிடுகிறியா, அல்லது வேறு எதையாவது சாப்பிடுகிறியா' என அவர் வழக்கமாக சாப்பிடும் உணவை தேர்த் திருவிழாவை காணவந்த பக்தர்கள் சாப்பிடுகிறார்களா? என்று கேட்டிருப்பது அருவருப்பின் உச்சம்.  சாபம் நீக்கிய திருத்தலத்தில் இருந்து அமைச்சர் சாபம் பெற்றுவிட்டு சென்றிருக்கிறார். 

ஆலயத்தையும், பக்தர்களையும் அவமானப்படுத்திய சேகர் பாபுவை தனது அமைச்சரவையில் இருந்து நீக்கி தமிழக முதல்வர்  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை இந்த நடவடிக்கை எடுக்க தயக்கம் இருக்குமானால், குறைந்தபட்சம் அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அவரை கட்டாயமாக மாற்ற வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் செய்த பாவங்களில் ஒன்று இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜை அமைச்சராக பெற்றது. தனது சொந்த மத தெய்வத்தின் மீது அவருக்கு நம்பிக்கை கிடையாது. பிற மதத்தைச் சேர்ந்த தெய்வங்களை இழிவுபடுத்தவும் அவர் தவறியதில்லை. மாவட்ட மக்களை சாதி ரீதியாகவும், மதரீதியாகவும் பிரித்து அரசியல் ஆதாயம் தேடி வரும் மனோதங்கராஜை தனது பக்கத்தில் வைத்துக்கொண்டு அறநிலையத்துறை அமைச்சர் பேசிய பேச்சுக்கள் எந்த மதத்தைச் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பொன்.ராதா கிருஷ்ணன்

சேகர் பாபு தன்னுடைய தவறான பேச்சுக்களுக்கும், நடத்ததற்கும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தானாக முன்வந்து அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது அவருக்கு நல்லது. இல்லையெனில் மக்களால் துரத்தியடிக்கப்படும் காட்சியை அவர் கண்கூடாக காண இருக்கிறார் என்பதை அழுத்தத்துடன் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இவர்களின் கைப்பட்ட திருத்தேருக்கு பரிகாரம் செய்ய வேண்டும். அதை இவர்கள் செய்யமாட்டார்கள். அவர்கள் ஆடும்வரை ஆடட்டும். இன்னும் சிலமாதங்கள்தான். அதன்பிறகு வரும் புதிய ஆட்சியில் திருத்தேருக்கும், திருவடத்துக்கும் தேவையான பரிகாரங்கள் செய்யப்படும். இரண்டு அமைச்சர்களும் வினையை விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்கள். தன்வினை தன்னைச்சுடும்" என்றார்.

திருச்சி: "தமிழ்நாட்டிற்கு ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது" - சீமான் காட்டம்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர்,"திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனக் கற்பித்தவர் திருமாவளவன்தான். தம... மேலும் பார்க்க

"அமித்ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுத்தான் செல்வார்" - நயினார் நாகேந்திரன்

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "தி.மு.க அரசின் ஆயுட்காலம் முடிவடையக் கூடிய சூழலில் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஏன்? செவிலியர்கள், துப்புரவுப் பண... மேலும் பார்க்க

"கண்டா வரச்சொல்லுங்க" - அமைச்சர் கே.என். நேருவைத் தேடும் தூய்மைப் பணியாளர்கள்; பின்னணி என்ன?

அரசு ஊழியர்களின் கோரிக்கையையும் போராட்டத்தையும் ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்களோடு கூடிய டேப்ஸ் என்ற ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர்.செவிலியர்களின் போராட்டத்துக்குச் செவி ... மேலும் பார்க்க

'வெற்றிகரமான தாக்குதல்; அதிபரை வெளியேற்றிவிட்டோம்' - வெனிசுலாவை குறிவைத்த ட்ரம்ப்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக பதவியேற்றதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், இன்று வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது அமெரிக்க... மேலும் பார்க்க

OP Sindoor: "நான்தான் நிறுத்தினேன்" - ட்ரம்ப்புடன் மோதும் சீனா; பாகிஸ்தானுக்கு ப்ளஸ்; இந்தியாவுக்கு?

இவ்வளவு நாள், 'நான்தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்பத் திரு.....ம்ம்ம்ம்...பபப கூறிக்கொண்டிருந்தார். இப்போது இந்தப் போட்டியில் சீனாவும் களமிறங்கியுள்ளத... மேலும் பார்க்க

"அரசு ஊழியர்களை கிரிமினல் போல நடத்துவதா?" - ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாரத் மாதா கி ஜெ என்றால் பாரத அன்னையை வணங்குவோம் என்று அர்த்தம். இதில் மதவெறி இல்லை. பாரத் மாதா கி ஜெ என நாட்டிற்காகப் போராடிய லட்ச... மேலும் பார்க்க